• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

அறிமுக இயக்குநர் விஜய் ஆனந்த் சார்பில் 2018 ஆண்டே “COMMON MAN” என்கிற தலைப்பு

by Tamil2daynews
December 31, 2021
in சினிமா செய்திகள்
0
அறிமுக இயக்குநர் விஜய் ஆனந்த் சார்பில் 2018 ஆண்டே “COMMON MAN” என்கிற தலைப்பு
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
காமன்மேன் (Common Man) என்கிற தலைப்பில் Chendur Films International தயாரிக்க நடிகர் சசிகுமார் நடிக்கவிருக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு Teaser சமீபத்தில் இணையதளத்தில் வெளியானது.  ஆனால் இந்த தலைப்பின் உரிமை எங்களிடம் தான் உள்ளது என்று AGR RIGHT FILMS என்கிற தயாரிப்பு நிறுவனம் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையிடம் மேல்முறையீடு செய்துள்ளது.
அறிமுக இயக்குநர் விஜய் ஆனந்த் சார்பில் 2018 ஆண்டே “COMMON MAN” என்கிற தலைப்பு திரைப்பட சாம்பரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த உரிமை தொடர்பாக அனைத்து ஆதார ஆவணங்களும் தங்களிடம் இருப்பதாக AGR RIGHT FILMS தெரிவித்துள்ளது.
சிறிது நாட்களுக்கு முன்னர் நடிகர் விஷால் இதே போல “COMMON MAN” என்று ஒரு பட வேலையை முன்னெடுக்க அதன் பின்னர் விஷால் தன் படத்தலைப்பை மாற்றிக் கொண்டார்.
தற்போது CHENDUR FILMS INTERNATIONAL “COMMON MAN” என்கிற தலைப்பில் படம் அறிவிக்கவே, அதில் ஒப்பந்தமாகி இருக்கும் நடிகர் சசிகுமாரிடம்.. AGR RIGHT FILMS தலைப்பு தொடர்பான பிரச்சினை குறித்து சொல்லவே, சசிகுமார் எதுவானாலும் FILM CHAMBER வழியாக தீர்த்து கொள்ளுங்கள் என்று சொல்லியிருக்கிறார்.
அதன் பின்னர் இது தொடர்பாக AGR RIGHT FILMS.. FILM CHAMBER-ஐ அணுகவே, சேம்பரோ தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திடம் இருந்து இந்த தொடர்பாக விளக்கம் கேட்டுள்ளது.  தயாரிப்பாளர் சங்கமும் இந்த தலைப்பை CHENDUR FILMS INTERNATIONAL-க்கு தவறுதலாக வழங்கிவிட்டதாக பதிலளித்துள்ளது.  இதை எழுத்து பூர்வமாக ஒப்புதல் சான்றாக AGR RIGHT  FILMS தயாரிப்பாளர் சங்கத்திடம் கேட்க தயாரிப்பாளர் சங்கமும் தருகிறோம் என்று பல நாட்களை கடத்தியுள்ளது.  இப்படி AGR RIGHT FILMS காத்திருந்த நிலையில் யாரும் எதிர்பாக்காத வண்ணம் CHENDUR FILMS INTERNATIONAL “COMMON MAN” என்கிற தலைப்பில் பட டீசர் வெளியிட்டுவிட்டது.
இதன் பிறகு AGR RIGHT FILMS.. சேம்பரை மீண்டும் அணுகவே, சேம்பருக்கு தயாரிப்பாளர் சங்கத்திடம் இருந்து எந்தவிதமான முறையான பதிலும் வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதற்கான தேவையான சட்ட நடவடிக்கைகளை AGR RIGHT FILMS எடுத்துக்கொள்ளலாம் என்றும், அதற்கு சேம்பரும் உறுதுணையாக இருக்கும் என Film Chamber அறிவித்துள்ளது.
தற்போது AGR RIGHT FILMS “COMMON MAN” என்கிற தலைப்பு தங்களுக்கே சொந்தம் என CHENDUR FILMS INTERNATIONAL-லிடமும், இந்த தலைப்பில் வெளியான டீசரை சமூக வலைத்தளங்களில் இருந்து எதுத்துவிடுமாறு Think music நிறுவனத்திடமும், இந்த தலைப்பில் தங்களை தவிர வேற எந்த நிறுவனத்தின் படத்திற்கும் அனுமதிசான்று வழங்கக் கூடாது என்று Censor Board-இடமும் சட்ட ரீதியான notice ஒன்றை அனுப்பியுள்ளது.
Previous Post

சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை திரைவிமர்சனம்…

Next Post

சிகரங்களை தொடும் வருண் !

Next Post
சிகரங்களை தொடும் வருண் !

சிகரங்களை தொடும் வருண் !

Popular News

  • “நான் ஒரு புதிய நாட்டில் விழித்தெழுந்தாலும், அங்கும் என்னை மக்கள் அடையாளம் கண்டுகொள்கிறார்கள்” – ‘பாகுபலி’ உலகளாவிய தாக்கம் குறித்து பிரபாஸ் உலகின் எந்த நாட்டுக்குச் சென்றாலும் யாராவது ஒருவர் வந்து ‘பாகுபலி’ என்று அழைத்துவிடுகிறார்கள்.”-பிரபாஸ்

    0 shares
    Share 0 Tweet 0
  • பி கே ஆர் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் பிரணய் காளியப்பன் வெளியிடும் அருபீ திரைப்படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் அஜய் கார்த்தி நடிக்கும் ‘டார்க்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா

    0 shares
    Share 0 Tweet 0
  • கவிப்பேரரசு வைரமுத்து வைத்த தலைப்பு “வேட்டைக்காரி”!

    0 shares
    Share 0 Tweet 0
  • பூச்சிக்கொல்லி விவசாயத்தின் மறைக்கப்பட்ட உண்மையை வெளிச்சமிடும் ‘தி இந்தியா ஸ்டோரி’ டீசர் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பூச்சிக்கொல்லி விவசாயத்தின் மறைக்கப்பட்ட உண்மையை வெளிச்சமிடும் ‘தி இந்தியா ஸ்டோரி’ டீசர் வெளியீடு!

June 29, 2026

ஒவ்வொரு பயணத்திற்கும் முடிவு உண்டு…விஷன் சினிமா ஹவுஸின் ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

June 29, 2026

“நான் ஒரு புதிய நாட்டில் விழித்தெழுந்தாலும், அங்கும் என்னை மக்கள் அடையாளம் கண்டுகொள்கிறார்கள்” – ‘பாகுபலி’ உலகளாவிய தாக்கம் குறித்து பிரபாஸ் உலகின் எந்த நாட்டுக்குச் சென்றாலும் யாராவது ஒருவர் வந்து ‘பாகுபலி’ என்று அழைத்துவிடுகிறார்கள்.”-பிரபாஸ்

June 29, 2026

என்னை நம்பாமலேயே என் படத்தில் நடித்தார்கள்: ‘தி டார்க் ஹெவன்’ இயக்குநர் பாலாஜி பேச்சு!

June 29, 2026

பி கே ஆர் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் பிரணய் காளியப்பன் வெளியிடும் அருபீ திரைப்படம்

June 29, 2026

அட்டாக்கர் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது

June 25, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.