ADVERTISEMENT
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

நடிகர் ராணா டகுபதி வெளியிட்ட ‘கப்ஜா’ பட டீசர்

by Tamil2daynews
September 18, 2022
in சினிமா செய்திகள்
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

நடிகர் ராணா டகுபதி வெளியிட்ட ‘கப்ஜா’ பட டீசர்

 

கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களான உபேந்திரா மற்றும் கிச்சா சுதீப் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் ‘கப்ஜா’ படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. ரியல் ஸ்டார் உபேந்திராவின் பிறந்த நாளை முன்னிட்டு, இப்படத்தின் டீசரை ‘பாகுபலி’ படப் புகழ் நடிகர் ராணா டகுபதி வெளியிட்டிருக்கிறார். வெளியான குறுகிய கால அவகாசத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
Image

கன்னட திரையுலகிலிருந்து ‘கே ஜி எஃப் 1 & 2 ‘, ‘777 சார்லி’, ‘விக்ராந்த் ரோணா’ என பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாரான படைப்புகள் வெளியாகி, கோடிக்கணக்கிலான வசூலை குவித்து வருவதால் ஒட்டுமொத்த இந்திய திரையலகின் கவனமும் தற்போது கன்னட திரையுலகின் மீது திரும்பி இருக்கிறது. இங்கு நட்சத்திர நடிகர்களாக ரசிகர்களின் பேராதரவுடன் உலா வரும் நடிகர்கள் உபேந்திரா மற்றும் கிச்சா சுதீப் இணைந்து நடிக்கும் ‘கப்ஜா’ படத்திற்கு இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. அதற்கேற்ற வகையில் இந்த திரைப்படம் கன்னடத்தில் மட்டும் அல்லாமல் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், மராத்தி, ஒரியா என ஏழு இந்திய மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது.

கேங்ஸ்டர் வித் ஆக்சன் திரில்லர் ஜானரில் தயாராகியிருக்கும் இந்த படத்தை ஸ்ரீ சித்தேஸ்வரா எண்டர்பிரைசஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர் சந்திரசேகர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருககிறார். இந்த படத்தில் நடிகர்கள் உபேந்திரா மற்றும் கிச்சா சுதீப்புடன் நடிகை ஸ்ரேயா சரண், நடிகர்கள் முரளி ஷர்மா, ஜான் கொக்கேன், நவாப் ஷா, பிரகாஷ் ராஜ் , ஜகபதி பாபு, கோட்டா சீனிவாச ராவ், கபீர் துஹான் சிங், பொமன் இரானி, சுதா, தேவ் கில், எம். காமராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஏ. ஜெ. ஷெட்டி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு கே. ஜி எஃப் படப்புகழ் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இசையமைத்திருக்கிறார். படத் தொகுப்பு பணிகளை மகேஷ் ரெட்டி கவனிக்க, சண்டைக்காட்சிகளை ரவி வர்மா, விஜய், விக்ரம் மோர், வினோத் என நான்கு சண்டைப் பயிற்சி இயக்குநர்கள் இயக்கியிருக்கிறார்கள். கன்னட திரை உலகின் முன்னணி இயக்குநரான ஆர். சந்துரு இயக்கத்தில் தயாராகி இருக்கும் ‘கப்ஜா’ திரைப்படத்தின் டீசர், நடிகர் உபேந்திராவின் பிறந்தநாளையொட்டி இணையத்தில் வெளியிடப்பட்டது. இதனை நடிகர் உபேந்திராவின் ரசிகர்களும், நடிகர் கிச்சா சுதீப்பின் ரசிகர்களும், கன்னட திரையுலக ரசிகர்களும் இணையத்தில் கொண்டாடி வருகிறார்கள். டீசருக்கு கிடைத்து வரும் பேராதரவை கண்டு உற்சாகமடைந்த படக்குழுவினர், ‘கப்ஜா’ படத்தின் வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும்’ என தெரிவித்திருக்கிறார்கள்.
Image

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில்,“ 1947 ஆம் ஆண்டில் இந்திய சுதந்திர போராட்ட வீரர் ஒருவர் கொடூரமாக தாக்கப்படுகிறார். அவருடைய மகன் தவிர்க்கமுடியாத காரணங்களால் மாஃபியா கும்பலிடம் சிக்கிக் கொள்கிறார். அதன் பிறகு என்ன நடந்தது? என்பதை விறுவிறுப்பாக சொல்லியிருக்கும் பிரம்மாண்டமான படைப்பு தான் ‘கப்ஜா’. இந்த படத்திற்கு ‘தி ரைஸ் கேங்ஸ்டர் இன் இந்தியா’ எனும் டாக் லைனும் இணைக்கப்பட்டிருக்கிறது. அதாவது இந்தியாவில் சுதந்திரத்திற்கு பிறகு குற்றச்சம்பவங்களுக்கான சட்டவிரோத நிழல் உலக தாதாக்கள் உதயமான வரலாற்றையும் இதில் பேசியிருக்கிறோம். ” என்றார்.

‘கே ஜி எஃப் 1 & 2 படத்தின் வெற்றிக்கு இசையமைப்பாளர் ரவி பஸ்ரூரின் பங்களிப்பும் ஒரு காரணம். இந்நிலையில் ‘கப்ஜா’ படத்திற்கும் ரவி பஸ்ரூர் இசையமைத்திருப்பதால், ரசிகர்களின் எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்திருக்கிறது.

‘கே ஜி எஃப்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு கன்னட திரையுலகம் புதிய வீரியத்துடன் வித்தியாசமான படைப்புகளை இந்திய அளவில் வழங்கி வருகிறது.
Previous Post

படத்தின் விளம்பரத்திற்காக நாக சௌர்யா எடுத்த புதிய முயற்சி

Next Post

‘கேப்டன் மில்லர்’ படத்தில் இணைந்த பிரபல நடிகர்..!

Next Post

'கேப்டன் மில்லர்' படத்தில் இணைந்த பிரபல நடிகர்..!

Popular News

  • பழநி தல வரலாறு

    பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • இப்போது சினிமா உட்பட பல இடங்களில் ஜாதி அதிகமாகி விட்டது

    0 shares
    Share 0 Tweet 0
  • “குற்றம் புரிந்தால்” நீதியை கையில் எடுக்கும் ஹீரோ!

    0 shares
    Share 0 Tweet 0
  • தம்பியுடன் மோதும் அண்ணன் உலகமெங்கும் பிப்ரவரி 17 ம் தேதி வெளியாகிறது ” பகாசூரன் “

    0 shares
    Share 0 Tweet 0
  • கெவி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார் ஜெ.எம்.பஷீர்..!

February 2, 2023

ஹன்சிகா நடிப்பில் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்ட ‘ஒன்றல்ல ஐந்து நிமிடம்’ .

February 2, 2023

‘மைக்கேல்’ திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!!

February 2, 2023

அதிரடியில் மிரட்டும் நேச்சுரல் ஸ்டார் நானியின் “தசரா” திரைப்பட டீசர் !!

February 2, 2023

அசோக்செல்வன், சாந்தனு, ப்ரித்வி இணைந்து நடித்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது

February 2, 2023

திரில்லரான பொழுதுபோக்கு படம்; என்னுடைய கதையை ரசித்துக் கேட்டார் தளபதி விஜய்!- நடிகர் ஆர்.ஜே.பாலாஜி

February 2, 2023
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2023 Tamil2daynews.com.

No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2023 Tamil2daynews.com.

error: Content is protected !!