• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

நிர்வாகம் பொறுப்பல்ல – விமர்சனம் ரேட்டிங் – 3.5/5

by Tamil2daynews
December 6, 2025
in விமர்சனம்
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
நிர்வாகம் பொறுப்பல்ல –  விமர்சனம் 

பேய் இருக்க பயமேன்’ படத்தை இயக்கி நடித்த சீ.கார்த்தீஸ்வரன், அடுத்து இயக்கி கதையின் நாயகனாக நடித்துள்ள படம், ‘நிர்வாகம் பொறுப்பல்ல’. லிவிங்ஸ்டன், இமான் அண்ணாச்சி, பிளாக் பாண்டி, ஆதவன், அகல்யா வெங்கடேசன் உட்பட பலர் நடித்துள்ளனர்.

ஹீரோ கே (கார்த்தீஸ்வரன்) தன்னுடன் சிலரை சேர்த்துக்கொண்டு ஆன்லைன் மோசடியில் ஈடுபடுகிறார். ஒரு லட்சம் கொடுத்தால் இரண்டு லட்சம், 250 ரூபாய்க்கு செல்போன் என்று பல்வேறு திட்டங்களை அறிவித்து மக்களிடம் கோடிக்கணக்கில் பணத்தை வசூலித்து ஆட்டையை போடும் வேலையில் ஈடுபடுகிறார் கே. அவரைப் பற்றி போலீசில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாத நிலையில் இன்ஸ்பெக்டர் அன்பரசி (ஸ்ரீநிதி) வாலிபர் கேவை சுற்றிவளைத்து பிடிக்கிறார். அதன் பிறகு நடப்பது என்ன என்பது சுவாரஸ்யமான கிளைமாக்ஸ் ஆக அமைகிறது.

ஹீரோ “கே”வாக நடித்திருக்கும் கார்த்தீஸ்வரன் நெகட்டிவ் ஹீரோவாக தனது கதாபாத்திரத்தை அமைத்துக் கொண்டு இருந்தாலும் அதன் மூலம் அவர் ரசிகர்களுக்கு.. சொல்லப்போனால் மக்களுக்கு மோசடியில் இருந்து தப்பிக்க ஒரு எச்சரிக்கை தரும் நடிப்பாக வெளியிட்டிருப்பது என்னதான் நெகடிவ் கதாபாத்திரமாக இருந்தாலும் அவரை ஹீரோ இமேஜ்க்கு உயர்த்தத்தான் செய்கிறது.

ஆள் என்னமோ ஒல்லிபிச்சான் ஆக இருந்தாலும் மோசடி திட்டங்கள் போட்டு மக்களை ஏமாற்றும் போது இப்படித்தான் ஆன்லைனில் மோசடிக்காரர்கள் ஏமாற்றுகிறார்களோ என்ற தெளிவு பிறக்கிறது. தத்ரூபமாக அந்த கதாபாத்திரத்தில் முழுமையாக தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார் கீர்த்தீஸ்வரன்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் வரும் ஸ்ரீநிதி இளமையான போலீசாக இருந்தாலும் நடிப்பில் அசத்தியிருக்கிறார்.

பைனான்ஸ் கம்பெனியில் பணம் கட்டி ஏமாறும் லிவிங்ஸ்டன் எபிசோட் சென்டிமெண்டாக மனதை தொடுகிறது.

ஆதவன்,சன் டிவி அகல்யா உள்ளிட்ட இன்னும் பலர் நடித்திருக்கிறார்கள்.

டி ராதாகிருஷ்ணன் படத்தை தயாரித்திருக்கிறார்.

ஸ்ரீகாந்த் தேவா இசையில் காட்சிகளை மெருகேற்றி இருக்கிறார். என் எஸ் ராஜேஷ் ஒளிப்பதிவு காட்சிகளை பளபளக்க காட்டுவதுடன் லக்ஷுரியாகவும் காட்டியிருக்கிறது.

நடிகராகவும் இயக்குனராகவும் எஸ் கார்த்தீஸ்வரன் பாஸ் ஆகியிருக்கிறார். படத்தில் உயர் அதிகாரிகளை பணம் கொடுத்து சரி கட்டுவது போல் காட்டி இருப்பதும், தப்பு செய்தவனை எந்த தண்டனையும் இல்லாமல் தப்பிப்பது போல் காட்டி இருப்பதையும் சென்சார் எப்படி அப்ஜெக்ட் செய்யாமல் விட்டார்கள் என்பது கேள்விக்குறி..

படத்தில் இன்னொரு தவறு படம் பார்ப்பவர்களை நெழிய செய்கிறது என்றால் படத்தில் மக்கள் ஏமாறும் தொகை 4000 கோடி 5000 கோடி பத்தாயிரம் கோடி என்று ரொம்ப மிகையாக இருப்பது படத்திற்கு பெரிய மைனஸ்.

ஹீரோவாக நடித்து இயக்கி இருக்கும் கார்த்தீஸ்வரன் இப்படத்தில் நடிக்காமல் வேறு ஒரு பரிச்சயமான முகமுள்ள ஹீரோவை நடிக்க வைத்திருந்தால் இந்த படம் மேலும் வாகை சூடி இருக்கும்.

ஏமாற்றுபவர்கள் இருக்கும் வரை ஏமாறுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.இது பெரியவர்கள் சொல்லும் பழமொழி.

இந்த படம் சொல்லும் புது மொழியும் அதுதான்.

மொத்தத்தில் இந்த நிர்வாகம் பொறுப்பல்ல படம் மோசடி கம்பெனிகளின் விழிப்புணர்வு
Previous Post

ஜி.வி. பிரகாஷ் குமார் – ஸ்ரீ கவுரி பிரியா நடிக்கும் “ஹேப்பி ராஜ் ( Happy Raj)” படத்தின் தலைப்பு அறிவிப்பு

Next Post

ஒரு தவிர்க்க முடியாத காதல் கதை..! ‘தேரே இஷ்க் மே’ உலக அளவில் ஒரு வாரத்தில் ரூ.118.76 கோடி வசூல்!

Next Post

ஒரு தவிர்க்க முடியாத காதல் கதை..! ‘தேரே இஷ்க் மே’ உலக அளவில் ஒரு வாரத்தில் ரூ.118.76 கோடி வசூல்!

Popular News

  • நல்லபடம் -விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

    0 shares
    Share 0 Tweet 0
  • அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு!

    0 shares
    Share 0 Tweet 0
  • #Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

நல்லபடம் -விமர்சனம்

September 21, 2026

‘சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு!

September 21, 2026

இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

September 21, 2026

அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

September 21, 2026

#Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

September 20, 2026

பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!

September 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.