• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

கார்க்கி ஆராய்ச்சி நிறுவனத்தின் இணையவழி தமிழ் வகுப்புகள்

by Tamil2daynews
February 23, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

கார்க்கி ஆராய்ச்சி நிறுவனத்தின் இணையவழி தமிழ் வகுப்புகள்

கார்க்கி ஆராய்ச்சி நிறுவனம் 10 ஆண்டுகளாக மொழிக்கணிப்பீடு மற்றும் மொழி இலக்கியத்தில் பல்வேறு ஆராய்ச்சிகளை நிகழ்த்தி வருகிறது. இந்த அறக்கட்டளையானது, புதிய மொழிக் கருவிகள் மற்றும் செயலிகளை வடிவமைப்பதோடு,  பயில் வகுப்புகள் மூலம் இணைய வழியில் தமிழ் மொழியைத்  தனித்துவமான அணுகுமுறையுடன் கற்பித்து வருகிறது. இவ்வகுப்புகளில், உலகம் முழுவதுமுள்ள தமிழார்வம் கொண்ட மாணவர்கள், வயதுவரம்பில்லாமல் ஒன்றாகச் சேர்ந்து தமிழ் கற்று வருகின்றனர்.
இணைய வழியில் நேரடி அமர்வுகளின் மூலம் கற்பிக்கப்பட்ட இப்பயில் வகுப்புகள், இப்போது பதிவு செய்யப்பட்ட காணொளிகளாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் உலகில் எங்கிருந்தும், எந்நேரத்திலும், எவ்விடத்திலும் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப தமிழைக் கற்கவியலும்.
முதற்கட்டமாக இந்த உலகத் தாய்மொழி நாளில், இரண்டு பயிற்சி வகுப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
– தமிழில் எழுத/ படிக்க – எழுது வகுப்பு
– ஐயன் வள்ளுவரின் குறளமுதத்தைப் பருக – குறள் வகுப்பு.
எளிய நடைமுறை விளக்கங்களுடன் பாடல்கள், கவிதைகள், விளையாட்டுகள் மூலம் இந்த வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதற்கான சேர்க்கை இப்போது payil.karky.in என்ற இணையதளத்தில் உள்ளது.
உலகெங்கிலும் உள்ள தமிழ் ஆர்வலர்களுக்கு இம்மொழியைக் கொண்டு சேர்க்கும் வகையில் கார்க்கி ஆராய்ச்சி நிறுவனம், மேலும் பல வகுப்புகளைத் தொடங்க ஆர்வம் கொண்டுள்ளது.
Previous Post

6000 மாணவர்கள் முன்னிலையில், கல்லூரி மாணவர்கள் வெளியிட்ட “பருந்தாகுது ஊர் குருவி” படத்தின், முதல் சிங்கிள் பாடல் !

Next Post

‘பலாப்பழம்’ வெட்டி, பிறந்தநாள் கொண்டாடிய மன்சூர் அலிகான்!

Next Post

'பலாப்பழம்' வெட்டி, பிறந்தநாள் கொண்டாடிய மன்சூர் அலிகான்!

Popular News

  • ஆகஸ்ட் 28-ல் திரைக்கு வரும் ‘ஒன்ஸ் மோர்’ – அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஷம்பாலா’ வெற்றிக் கூட்டணியின் அடுத்த பிரம்மாண்ட படைப்பு… சந்தீப் கிஷனின் சோஷியோ ஃபேண்டஸி திரைப்படம் ‘கரிகாலா’ – மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து வழங்கும் அடுத்த திரைப்படம் “மக்கள் காவலன்”

    0 shares
    Share 0 Tweet 0
  • திரைக்கதை மன்னன் கே பாக்யராஜ் பாணியில் அல்வா என்ற குறும்படத்தை அவரின் உதவியாளர் ஜெ.எம் ராஜா இயக்கி இருக்கிறார்.

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஜி.டி.என்.’ திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து வழங்கும் அடுத்த திரைப்படம் “மக்கள் காவலன்”

August 6, 2026

‘ஷம்பாலா’ வெற்றிக் கூட்டணியின் அடுத்த பிரம்மாண்ட படைப்பு… சந்தீப் கிஷனின் சோஷியோ ஃபேண்டஸி திரைப்படம் ‘கரிகாலா’ – மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

August 6, 2026

‘ஜி.டி.என்.’ திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு!

August 6, 2026

ஆகஸ்ட் 28-ல் திரைக்கு வரும் ‘ஒன்ஸ் மோர்’ – அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

August 6, 2026
கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம்

கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம்

August 4, 2026

சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ் ‘ படத்தின் இசை வெளியீட்டு விழா!

August 4, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.