• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

கதிர்- திவ்யபாரதி நடித்துள்ள ‘ஆசை’ படத்தின் முதல் பார்வை வெளியீடு!

by Tamil2daynews
September 23, 2022
in சினிமா செய்திகள்
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

கதிர்- திவ்யபாரதி நடித்துள்ள ‘ஆசை’ படத்தின் முதல் பார்வை வெளியீடு!

 

ஈக்ல்’ஸ் ஐ புரொடக்‌ஷன் (Eagle’s Eye Production) தயாரிப்பில், ‘ஜீரோ’ படப்புகழ் இயக்குநர் ஷிவ் மோஹா இயக்கத்தில் கதிர்- திவ்யபாரதி நடித்துள்ள ‘ஆசை’ படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டுள்ளது.

தயாரிப்பாளர்கள் ரமேஷ் பிள்ளை, சுதன் சுந்தரம் & ஜி. ஜெயராம் படம் குறித்து பேசுகையில், “இது போன்ற இளமை ததும்பும் அணியுடன் வேலை பார்ப்பது என்பது எனக்கு மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது. அதுதான் இவ்வளவு குறுகிய காலத்தில் படத்தை சீக்கிரம் முடிக்க உதவியது. இந்தப் படத்தில் தொழில்நுட்ப குழுவில் பணியாற்றிய பெரும்பாலானோர் என்னுடைய கல்லூரி கால நண்பர்கள் மற்றும் ‘ஜீரோ’ படத்தில் பணியாற்றியவர்கள் என்பதால் எங்களுக்குள் நல்ல ஒரு புரிதல் இருந்தது.

டெட்லைனுக்குள் வேலை சரியாக முடிக்க வேண்டும் என்று அனைவரும் போட்டி போட்டு கொண்டு வேலை பார்த்துள்ளோம். ‘சுழல்’ படத்தின் மூலம் தமிழ் மட்டுமல்லாது மற்ற மொழிகளிலும் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தைக் கதிர் கொண்டுள்ளார்.  இந்தப் படத்திலும் பாராட்டுதலுக்குரிய சிறப்பானதொரு நடிப்பை கொடுத்துள்ளார். திவ்யபாரதியும் குறைந்த காலத்தில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டவர். படத்தில் அவரது நடிப்பும் முக்கியமான ஒரு அங்கம்.

இயக்குநர் ஷிவ் மோஹா தன்னுடைய திரைக்கதையை படமாக்குவதில் திறமையான ஒருவர். தற்போது போஸ்ட் புரொடக்சன் வேலைகள் முழு வீச்சில் நடந்து கொண்டிருக்கிறது. விரைவில் படத்தின் ஆடியோ, ட்ரைய்லர் மற்றும் உலகம் முழுவதும் தியேட்டரில் படம் வெளியாக இருக்கும் தேதி ஆகியவை பற்றி அறிவிப்பு வெளியாகும்” எனத் தெரிவித்துள்ளனர்.

மலையாளத்தில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்ற ‘இஷ்க்’ படத்தின் தழுவல் தான் ‘ஆசை’ திரைப்படம் ஆகும்.

படத்தின் தொழில்நுட்பக் குழு விவரம்:
இசை : ரேவா (விஜய்சேதுபதி, ரெஜினா நடிப்பில் வெளியான ‘முகில்’ படப்புகழ்)- இரண்டு பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்,
ஒளிப்பதிவு: பாபு குமார் IE,
எடிட்டிங்: R. சுதர்சன்,
கலை: S. ராஜா மோகன்.
Previous Post

குந்தவையின் தைரியத்தை போல் நானும் தைரியமாக இருப்பேன்.. #பொன்னியின்செல்வன் திரிஷா

Next Post

பூஜையுடன் தொடங்கிய தனுஷின் ‘கேப்டன் மில்லர்’..!

Next Post

பூஜையுடன் தொடங்கிய தனுஷின் 'கேப்டன் மில்லர்'..!

Popular News

  • ‘கஸ்தூரி வீடு’ திரைப்படத்தின் பாடல் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • பாரிஸ் கபே – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • அர்ஜுன் தாஸ் நடிக்கும் புரொடக்ஷன் No.1 (Production No.1) – பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • காதல் கதைக்குள் இப்படி ஒரு ஆக்ஷனா? ‘அன்பில் அவன்’ டிரெய்லர் வெளியானது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிக்கும் ‘தி பாரடைஸ்- The Paradise ‘படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

#Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

September 20, 2026

பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!

September 20, 2026

வரலாற்றில் முதல் முறையாக இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான இலங்கைத் தமிழ்த் திரைப்படம்

September 20, 2026

பீப் – விமர்சனம்

September 20, 2026

‘வேட்டுவம்’ பா.இரஞ்சித்தின் பிரம்மாண்ட அபோகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம்.

September 20, 2026

‘மீசைய முறுக்கு 2’ இசைக் கலைஞர்களின் வாழ்க்கை, போராட்டம், கனவுகளைப் பேசும் உலகளாவிய கதை – ஹிப்ஹாப் தமிழா ஆதி

September 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.