• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயன் மறைத்த உண்மைகள்..? ஞானவேல்ராஜா பகீர் தகவல்..!

by Tamil2daynews
April 3, 2022
in சினிமா செய்திகள்
0
டூப் இல்லாமல் நடித்த  “காதல் காளை” கார்த்திக்..!
0
SHARES
60
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
சிவகார்த்திகேயன் மறைத்த உண்மைகள்..? ஞானவேல்ராஜா பகீர் தகவல்..!
நடிகர்  சிவகார்த்திகேயனுக்கும் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவிற்க்கும்  14 கோடி சம்பளம் பிரச்சனையில்  நீதிமன்றம் வரை சென்று உள்ளனர்.

 பல உண்மைகளை மறைத்து நடிகர் சிவகார்த்திகேயன் தாக்கல் செய்த மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

‘மிஸ்டர் லோக்கல்’ படத்திற்காக தமக்கு பேசப்பட்ட சம்பளத்தில் நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்க தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிற்கு உத்தரவிடக் கோரி நடிகர் சிவகார்த்திகேயன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Sivakarthikeyan's 'Mr Local' release postponed? | Tamil Movie News - Times of Indiaஅந்த மனுவில், ‘ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பதற்காக 1 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு, 10 லட்சம் ரூபாய் முன்பணமாக கொடுக்கப்பட்டு, 2013-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டது. படம் எடுக்க முடியாத நிலையில், மீண்டும் 2018-ம் ஆண்டு புது ஒப்பந்தம் போடப்பட்டு சிவகார்த்திகேயனுக்கு 15 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு 12 கோடியே 78 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டது.

ஆனால், ‘மிஸ்டர் லோக்கல்’ படத்தின் கதை தனக்கு பிடிக்கவில்லை எனவும், அந்தப் படத்தை இயக்குநர் ராஜேஷ்தான் இயக்க வேண்டும் எனவும் நடிகர் சிவகார்த்திகேயன் கட்டாயப்படுத்தினார். இதனால்தான் அந்தப் படம் தயாரிக்கப்பட்டது. அந்தப் படத்தால் எனக்கு 20 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது.

வரிகளுடன் சேர்த்து மீதம் 2 கோடியே 40 லட்சம் ரூபாயை வழங்க வேண்டுமென நடிகர் சிவகார்த்திகேயன், இரக்கமின்றி எனக்கு அழுத்தம் கொடுத்தார். ‘மிஸ்டர் லோக்கல்’ படத்தில் ஏற்பட்ட நஷ்டத்திற்காக விநியோகஸ்தர்கள் தரப்பில் நெருக்கடி கொடுத்த நிலையில், 2 கோடியே 40 லட்சம் தர வேண்டாம் எனவும், விநியோகஸ்தர்கள் பிரச்சினையில் சிக்க வைத்து விட வேண்டாம் எனவும் சிவகார்த்திகேயன் கூறினார்.

3 ஆண்டுகளுக்கு பின்னர், உண்மைத் தகவல்களை மறைத்து, தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் தாக்கல் செய்துள்ள மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார். தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் இந்த பதில் மனுவை தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதி எம்.சுந்தர் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, விசாரணையை ஏப்ரல் 7-ம் தேதிக்கு நீதிபதி எம்.சுந்தர் தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளார்.
Previous Post

பிரபல குத்துச்சண்டை வீரர் “மைக் டைசன்” நடிக்கும் “லிக்கர்” ..!

Next Post

“அனந்தம்” இணைய தொடரின் டீசரை வெளியிட்ட இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா

Next Post
டூப் இல்லாமல் நடித்த  “காதல் காளை” கார்த்திக்..!

“அனந்தம்” இணைய தொடரின் டீசரை வெளியிட்ட இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா

Popular News

  • நல்லபடம் -விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

    0 shares
    Share 0 Tweet 0
  • அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘வேட்டுவம்’ பா.இரஞ்சித்தின் பிரம்மாண்ட அபோகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம்.

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

நல்லபடம் -விமர்சனம்

September 21, 2026

‘சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு!

September 21, 2026

இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

September 21, 2026

அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

September 21, 2026

#Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

September 20, 2026

பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!

September 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.