• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

அர்ஜூன் அசோகன் – ரோஷன் மாத்யூ நடித்த “சத்தா பச்சா: த ரிங் ஆஃப் ரௌடீஸ்” தமிழ் டீசர் வெளியானது

by Tamil2daynews
November 8, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

அர்ஜூன் அசோகன் – ரோஷன் மாத்யூ நடித்த “சத்தா பச்சா: த ரிங் ஆஃப் ரௌடீஸ்” தமிழ் டீசர் வெளியானது

“கடவுளின் தேசமான கேரளாவில் இருந்து வந்த நடிகர்கள், காலம் காலமாக தமிழ் திரை ரசிகர்களின் இதயத்தையும், அவர்களின் சினிமா ருசியையும் வென்றுள்ளனர். மொழி மற்றும் பிராந்திய எல்லைகளை தாண்டி, “தமிழ்நாட்டின் சொந்த மகன்” என்ற அன்பு பெயரைப் பெற்ற நடிகர்கள் வரிசையில், அர்ஜூன் அசோகன் இப்போது இணைகிறார்.

ரோமாஞ்சம் மற்றும் தளவரா போன்று சிறப்பாக பாராட்டப்பட்ட திரைப்படங்களில் அவர் காட்டிய நடிப்பு, ஏற்கனவே தமிழ் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தற்போது அவர் தனது நேரடி தமிழ் அறிமுகத்தை ப்ரோ கோட் (Bro Code) மூலம் செய்ய தயாராகி வருகிறார். இந்த நிலையில், அவரது அடுத்த முயற்சி “சத்தா பச்சா” படத்தின் டீசர் வெளியீடு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரியர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறுகிய நேரத்திலேயே, அந்த டீசர் ரசிகர்களின் முழு கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இயல்பான சுறுசுறுப்பு மற்றும் நகைச்சுவை நயத்திற்காக பிரபலமான அர்ஜூன் அசோகன், இந்த முறை முற்றிலும் புதிய கோணத்தில், அதிரடி கதாபாத்திரத்தில் களமிறங்குகிறார். அவருடன் இணைந்து ரோஷன் மாத்யூ முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் விசாக் நாயர் மற்றும் இஷான் ஷவுகத் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிககின்றனர்.
ஷிஹான் ஷவுகத் மற்றும் ரிதேஷ் எஸ் ராமகிருஷ்ணன் இணைந்து தயாரிக்கும் “சத்தா பச்சா”, அத்வைத் நாயர் இயக்கும் படமாகும். அவர் இந்த படத்தின் எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார். அனேந்த் சி. சந்திரன் ஒளிப்பதிவை கவனிக்கிறார்; ஜோமன் டி. ஜான் மற்றும் சுதீப் எலமோன் இணை ஒளிப்பதிவாளர்களாக பணியாற்றியுள்ளனர்.

படத்தின் திரைக்கதை மற்றும் வசனங்களை சனூப் தைகூடம் எழுதியுள்ளார். இவரது எழுத்து நகைச்சுவை மற்றும் கதையின் ஆழத்தையும் சமநிலையில் இணைக்கும் வல்லமை கொண்டிருக்கும் என்று தெரிகிறது. இசைத் துறையில் புகழ்பெற்ற மூவர் சங்கர் – ஏஹ்சான் – லாய் இந்த படத்தின் பாடல்களுக்கு இசையமைத்துள்ளனர். பின்னணி இசையை முஜீப் மஜீத் உருவாக்கியுள்ளார்.

டீசரில், “சத்தா பச்சா: த ரிங் ஆஃப் ரௌடீஸ்” திரைப்படம் வருகிற 2026 ஜனவரி மாத வாக்கில் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

நடிகர் அருண் விஜய்யின் “ரெட்ட தல” திரைப்படம், 2025 டிசம்பர் 18 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது!!

Next Post

கே.பி.ஜெகன் எழுதி, இயக்கி, நடிக்கும் ரோஜா மல்லி கனகாம்பரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் சேரன் மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளனர்!

Next Post

கே.பி.ஜெகன் எழுதி, இயக்கி, நடிக்கும் ரோஜா மல்லி கனகாம்பரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் சேரன் மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளனர்!

Popular News

  • “‘டெத் இரயில்வே பக்கா கமர்ஷியல் படம்”…’யாத்திசை’ இயக்குநர் தரணி ராசேந்திரன்!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் கே. மணிகண்டன் நடிக்கும் ‘மக்கள் காவலன்’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • உலக மீனவர் தினத்தை முன்னிட்டு ‘தமிழினி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் தன் மகள் அல்லு அர்ஹாவுக்கு சொன்ன நெகிழ்ச்சியான பிறந்தநாள் வாழ்த்து!

    0 shares
    Share 0 Tweet 0
  • பேசத் தயங்கும் விஷயங்களின் மவுனத்தை உடைக்கும் மலேசிய தமிழ் க்ரைம் த்ரில்லர் ‘இரும்புத் தோட்டம் ; விரைவில் தமிழகமெங்கும் ரிலீஸ்’!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“‘டெத் இரயில்வே பக்கா கமர்ஷியல் படம்”…’யாத்திசை’ இயக்குநர் தரணி ராசேந்திரன்!

November 22, 2026

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் தன் மகள் அல்லு அர்ஹாவுக்கு சொன்ன நெகிழ்ச்சியான பிறந்தநாள் வாழ்த்து!

November 22, 2026

உலக மீனவர் தினத்தை முன்னிட்டு ‘தமிழினி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

November 22, 2026

‘டெலிவரி பாய்’ திரைப்பட முன் வெளியீட்டு விழா !!

November 22, 2026

பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், Vi. ஆனந்தின் கற்பனையில், நடிகர் பஞ்ச வைஷ்ணவ் தேஜ் நடிக்கும் ‘ஹனுமேன் 2: தி ரைஸ் ஆஃப் வானராஸ்’ (HanuMan 2: The Rise of Vanaras) – டைட்டில் போஸ்டர் வெளியீடு!

November 22, 2026

ஆகாயத்தில் ஒரு தாரகை (AOT) – விமர்சனம்

November 22, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.