• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா

விஜய் ஸ்ரீ இயக்கத்தில் வயதின் உலகநாயகன் சாருஹாசன் நடிக்கும் தாதா87 – 2.0

by Tamil2daynews
July 3, 2020
in சினிமா
0
விஜய் ஸ்ரீ இயக்கத்தில் வயதின் உலகநாயகன் சாருஹாசன் நடிக்கும் தாதா87 – 2.0
0
SHARES
31
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
சாருஹாசன் நடித்து கடந்த வருடம் வெளியாகி அனைவராலும் பாராட்டப்பட்ட படம் தாதா 87.  இப்படத்திற்கு விஜய் ஸ்ரீ  கதை, திரைக்கதை,வசனம் எழுதி இயக்கியிருந்தார். லோக்கல் தாதாவாக களம் இறங்கி தன்னுடைய இயல்பான நடிப்பின் மூலம் தேசிய விருது பெற்ற நடிகர் என தடம் பதித்தார் சாருஹாசன்.
நடிப்பில் தன் தமயன் கமல்ஹாசன் உலகநாயகன் என பெயரிடப்பட்டிருக்கும் வேளையில் உலகிலேயே 87 வயதில் கதாநாயகனாக நடித்து வயதில் உலகநாயகன் எனப் பெயர் பெற்றார் சாருஹாசன்.
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான காலா படத்தின் டீசர் வெளியான நேரத்தில் தாதா 87 பட டீசரும் வெளியாகி அனைவரின் பாராட்டை பெற்றதோடு உலகளவிலும் ட்ரெண்டானது. இப்படத்தினை பார்த்த பலரும் சாருஹாசனை மட்டுமே வைத்து ஏன் ஒரு முழுநீள தாதா படமாக உருவாக்கக் கூடாது என  கேட்டுக்கொண்டனர். இதனை மனதில் வைத்து பலம் என்பது உடல் வலிமையை மட்டும் வைத்து முடிவு செய்யப்படுவதில்லை, அது மூளையையும் வைத்து முடிவு செய்யப்படுவது. சத்ரியனாக இருப்பது மட்டும் முக்கியமல்ல சாணக்கியனாகவும் இருக்க வேண்டும்‌ என்ற கருத்தை முன்வைத்து சாருஹாசனை மீண்டும் இயக்குகிறார் விஜய் ஸ்ரீ ஜி.
உள்ளூரில் சாமான்யனாக தாதாவாக இருக்கும் ஒருவர் தன் புத்தியின் பலத்தை கொண்டு உலக அரங்கில் தவிர்க்க முடியாத இடத்தை எவ்வாறு பிடித்து முதன்மை இடத்தை அடைகிறார் என்ற பின்னணியில் இப்படம் உருவாகிறது.
தற்போது 90  வயதிலும் உலக அளவில் நடிக்கிற நடிகர் என்ற பெருமை பெற்ற சாருஹாசன் நடிப்பில் உலகநாயகன் என்ற பெயர் பெற்ற கமல்ஹாசன் போல் வயதில் உலக நாயகன் என இடம்பெறுகிறார்.
முன்னணி நடிகர், நடிகையினர் மற்றும் மக்கள் மனதில் இடம்பெற்ற பழம்பெரும் நடிகர்,நடிகையினர் அனைவரும் ரசிக்கும் வண்ணம் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர்.
நடிகர் விக்ரமின் தங்கை அனிதாவின் மகன் அர்ஜூமன் கதையின் நாயகனாக அறிமுகமாகும் பொல்லாத உலகில் பயங்கர கேம் (PUBG) படத்தில் ஐஸ்வர்யா தத்தா,அனித்ரா நாயர், சாந்தினி,சாண்ட்ரியா, ஆராத்யா மற்றும் ஜூலியுடன் உருவாகும் படத்தின் இறுதிகட்ட வேலைகள் நடைபெற்று வரும் வேளையில் லாக்டவுன் நேரத்திற்கு முன் தாதா 87- 2.0 படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு 7 நாட்கள் நடைபெற்றது.
சாருஹாசன், முக்கிய வேடத்தில் மைம் கோபி மற்றும் கூத்துப்பட்டறையைச் சேர்ந்த பலர் நடித்த முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டது.
லாக்டவுன் தடைநீக்கத்திற்கு பின் அரசின் கட்டுப்பாட்டுகளோடு தேவையான படக்குழுவினரோடு சென்னை, கேரளா மற்றும் கோவாவில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. தாதா 87, பொல்லாத உலகில் பயங்கர கேம் படத்திற்கு பின் இசையமைப்பாளர் லியாண்டர் லீ மார்ட்டி மூன்றாம் முறையாக மீண்டும் விஜய் ஸ்ரீ யுடன் இப்படத்தில் இணைகிறார். ஒளிப்பதிவை கோபி கவனிக்கிறார். விரைவில் இப்படத்தின் டீசர் வெளிவரவுள்ளது.
Tags: Charu HassanVijay Sri
Previous Post

சாத்தான்குளம்  கொலை வழக்கில்  நீதிக்காக குரல் கொடுக்கும் பெண்காவலர் ரேவதி

Next Post

`சுஃபியும் சுஜாதாயும்’ எனக்கு கிடைத்த பெருமை –  லலிதா ஷோபி

Next Post
`சுஃபியும் சுஜாதாயும்’ எனக்கு கிடைத்த பெருமை –  லலிதா ஷோபி

`சுஃபியும் சுஜாதாயும்' எனக்கு கிடைத்த பெருமை -  லலிதா ஷோபி

Popular News

  • ‘கார்கில்’, ‘டேக் டைவர்ஷன்’ பட இயக்குநர் ஷிவானி செந்திலின் புதிய திரைப்படம் பரபரப்பான படப்பிடிப்பில்

    0 shares
    Share 0 Tweet 0
  • பிகினி உடையில் கீர்த்தி சுரேஷ் – விட்டு வைக்காத பாலிவுட் மோகம்..! 

    0 shares
    Share 0 Tweet 0
  • குரு சோமசுந்தரம் – அனுமோல் நடிக்கும் ‘பாரிஸ் கஃபே’ செப்டம்பர் 18ஆம் தேதி வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • “இம்மார்டல்” வெற்றியை கொண்டாடிய தயாரிப்பாளர் – ஜிவி பிரகாஷுக்கு RX100 பைக் பரிசு!

    0 shares
    Share 0 Tweet 0
  • சர்தார் 2 – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

குரு சோமசுந்தரம் – அனுமோல் நடிக்கும் ‘பாரிஸ் கஃபே’ செப்டம்பர் 18ஆம் தேதி வெளியாகிறது!

September 11, 2026

“இம்மார்டல்” வெற்றியை கொண்டாடிய தயாரிப்பாளர் – ஜிவி பிரகாஷுக்கு RX100 பைக் பரிசு!

September 11, 2026

சர்தார் 2 – விமர்சனம்

September 11, 2026

இந்திய ரசிகர்களுக்கு மிகப்பிடித்த ஃபேமிலி திரில்லர் திரைப்படமான ‘த்ரிஷ்யம் தி கன்குலூஷன்’ (Drishyam The Conclusion) அக்டோபர் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

September 11, 2026

ஒரு புதிய துணிச்சலான Zee 5-ஐ அறிமுகப்படுத்துகிறது: இந்தியாவின் ஸ்ட்ரீமிங் அனுபவத்தை மறுவரையறை செய்கிறது

September 10, 2026

‘என்ன விலை’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

September 10, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.