
திமுக தலைவர் மரியாதைக்குரிய திரு.ஸ்டாலின் அவர்களுக்கு,
தங்கள் தேர்தல் அறிக்கையில் இந்துக்களின் புனித யாத்திரைக்கு நிதியுதவி அளிப்பதாய் கூறியிருந்தீர்கள் மகிழ்ச்சி!
ஆனால் இந்துக்களுக்கு அந்த உதவி வேண்டாம். வேறொரு உதவி செய்யுங்கள். இந்து மதத்தின் புனிதத்தை கெடுக்கும்படி பேசுபவர்களை கிட்டே சேர்க்காதீர்கள்,
இந்துமதத்தை இழிவாய் பேசுபவர்களோடு கூட்டணி வைக்காதீர்கள்,
உங்கள் கட்சியில் இந்து மதத்தை கேலி,கிண்டல் செய்து அதன் புனிதத்தை கெடுப்பவர்களை உங்கள் கட்சியைவிட்டே தூக்குவேன் என்று உறுதியளியுங்கள்,
இந்து மதத்தை மட்டுமல்ல யார் எந்த மதத்தை இழிவு படுத்தினாலும் தூக்கி எறியுங்கள், எங்களுக்கு இன்னொரு ஆசை தேர்தல் அறிக்கையில் மட்டுமின்றி உங்கள் இதயத்திலும் இந்து மதத்தின் மீது மரியாதை இருந்தால் நன்றாக இருக்கும்.
* பேரரசு*









