• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ZEE5 இல் வெளியான ‘ரேகை’ திரில்லர் சீரிஸ், 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து சாதனை படைத்தது !!

by Tamil2daynews
December 2, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ZEE5 இல் வெளியான ‘ரேகை’ திரில்லர் சீரிஸ், 100  மில்லியன் பார்வை  நிமிடங்களை கடந்து சாதனை படைத்தது !!

 

இந்தியாவின் முன்னணி ஓடிடித் தளமான ZEE5 இல் நவம்பர் 28 ஆம் தேதி வெளியான “ரேகை” சீரிஸ், ரசிகர்களின் பெரும் வரவேற்பில், வெளியான சில நாட்களில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

பிரபல எழுத்தாளர் ராஜேஷ் குமார் உருவாக்கிய க்ரைம்  உலகின் கருவை மையமாக வைத்து, இயக்குநர்  தினகரன் M, இந்த சீரிஸை உருவாக்கி – எழுதி – இயக்கியுள்ளார். இந்த சீரிஸை S.S Group Production சார்பில் S. சிங்காரவேலன்  தயாரித்துள்ளார்.

இந்த சீரிஸில், பாலஹாசன், பவித்ரா ஜனனி, போபலன் பிரகதேஷ், வினோதினி வைத்யநாதன், ஸ்ரீராம் எம், அஞ்சலி ராவ், இந்திரஜித் E. ஆகியோர் நடித்துள்ளனர்

உயிருடன் இருப்பவர்கள் மரணமடைந்ததாக பதிவு செய்யப்பட்டால், அதை எப்படி விசாரிப்பது?

S.I. வெற்றி (பாலஹாசன்) மற்றும் காவலர் சந்தியா (பவித்ரா ஜனனி) சாதாரணமாக விசாரிக்க துவங்கும் ஒரு குற்ற சம்பவம், விரைவில் மிக தீவிரமான விசாரணையாக மாறுகிறது.

ஐஸ் டிரக் ஓட்டுநர் ஓட்டிக்கொண்டிருக்கும்போது ஒரு விபத்தில் இறந்துவிடுகிறார். ஆனால், ஐஸ்க்கட்டிகளுக்குள் வெற்றி ஒரு துண்டிக்கப்பட்ட கையை கண்டுபிடிக்கிறார்.

அங்கேயிருந்து தொடங்கும் வெற்றியின் தேடல், மருத்துவ பரிசோதனைகள், இரகசிய வலைப்பின்னல்கள், பயமுறுத்தும் உண்மைகள் ஆகியவற்றின் சுழலில்  அவரை இழுத்துக்கொள்கிறது.

ஒவ்வொரு தேடலும், அதன் பதிலும், இன்னும் மூர்க்கமான கதவுகளைத் திறக்க, வேட்டையாடுபவர் – வேட்டையாடப்படுபவர் என்ற கோடு, கொஞ்சம் கொஞ்சமாக மறையத் தொடங்கி நம்மை அந்த உலகிற்குள் இழுத்துக்கொள்கிறது.

தமிழில் வெளியாகும் க்ரைம் கதைகளிலிருந்து மாறுபட்டு,  ஒரு  வித்தியாசமான திரில்லர் சீரிஸாக, கதைக்களத்திலும், உருவாக்கத்திலும்  புதுமையான அனுபவம் தரும் இந்த சீரிஸ், ரசிகர்களிடமும், விமர்சகர்களிடமும்  பெரும் வரவேற்பைக் குவித்துள்ளது. வெளியான ஒரு சில நாட்களுக்குள்ளாகவே 100 மில்லியன் நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்திருக்கிறது.

ZEE5 தமிழ் பாரவையாளர்களுகென தொடர்ந்து தனித்துவமான, மண் சார்ந்த சிறப்பான படைப்புகளை, பிரத்தியேகமாக வழங்கி வருகிறது. அதன் சமீபத்திய வெளியீடான சட்டமும் நீதியும் சீரிஸ், மாமன் திரைப்படம்,  மக்களின் பேராதாரவைப் பெற்று பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றது.

தற்போது ரேகை சிரீஸும், பெரும் வரவேற்பைக் குவித்து வருகிறது. மாறுபட்ட திரில்லர் அனுபவத்தை தரும் “ரேகை” சீரிஸை, ZEE5 தளத்தில் கண்டுகளியுங்கள்.
Previous Post

உலகமெங்கும் டிசம்பர் 12, 2025 அன்று வெளியாகும் மகாசேனா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நவம்பர் 30ஆம் தேதி ஊடகம் மற்றும் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் வெற்றிகரமாக நடைபெற்றது

Next Post

அம்மாவுடன் இணைந்து ‘வா வாத்தியார்’ பட பாடலை வைரலாக்கிய சந்தோஷ் நாராயணன் !!

Next Post

அம்மாவுடன் இணைந்து 'வா வாத்தியார்' பட பாடலை வைரலாக்கிய சந்தோஷ் நாராயணன் !!

Popular News

  • டார்க் ஜெயண்ட் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் சினிமாவின் முதல் வாலிபால் திரைப்படம் “அட்டாக்கர்” படபூஜையுடன் இனிதே துவங்கியது

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் அல்லு அர்ஜூனின் ’AA23’ திரைப்படத்தின் தீம் இசையை பயன்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆட்டி – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மக்கள் தலைவா – விமர்சனம்

மக்கள் தலைவா – விமர்சனம்

June 20, 2026

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, மக்களாகிய நம் ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையும்… நடிகர் சௌந்தரராஜா

June 20, 2026

சென்னையில் நடைபெற்ற “எங்கள் தங்கம்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

June 20, 2026

‘அன்பே டயானா’ ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் ரிலீஸ் – அட்டகாசமான போஸ்டருடன் வெளியீட்டு அறிவிப்பு !

June 20, 2026

நடிகர் சனந்த் நடிக்கும் ‘ஹார்ட்டின் ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 20, 2026

‘கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக அமைகின்றன’- ஸ்ருதிஹாசன்

June 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.