• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

‘அன்பே டயானா’ ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் ரிலீஸ் – அட்டகாசமான போஸ்டருடன் வெளியீட்டு அறிவிப்பு !

by Tamil2daynews
June 20, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
‘அன்பே டயானா’ ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் ரிலீஸ் – அட்டகாசமான போஸ்டருடன் வெளியீட்டு அறிவிப்பு !

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் (Million Dollar Studios), நியோ கேசில் கிரியேஷன்ஸ் (Neo Castle Creations) மற்றும் இரா என்டர்டெயின்மென்ட் (Era Entertainment) இணைந்து தயாரித்துள்ள ‘அன்பே டயானா’ திரைப்படம், வரும் ஜூலை 17, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு வண்ணமயமான மற்றும் கவனம் ஈர்க்கும் புதிய போஸ்டரின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஏற்கனவே வெளியாகிய ஒவ்வொரு அப்டேட்டின் மூலமும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து வந்த ‘அன்பே டயானா’, திரைப்படத்தின் வெளியீட்டு அறிவிப்பு, ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது. வெளியிடப்பட்டுள்ள புதிய போஸ்டர் சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்று வருகிறது.

போஸ்டரில் மணமக்கள் கோலத்தில் கதாநாயகன் பாரி இளவழகன் மற்றும் கதாநாயகி ரம்யா ரங்கநாதன் காரின் மீது அமர்ந்திருக்க, அவர்களைச் சுற்றி குடும்பத்தினரும் நண்பர்களும் மகிழ்ச்சியுடன் நிற்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. தெரு முழுவதும் திருவிழா அலங்காரங்கள், வண்ணக் கொடிகள், இசை மற்றும் கொண்டாட்ட சூழல் நிரம்பியிருப்பது, படத்தின் ஜாலியான மற்றும் குடும்ப உறவுகளை மையமாகக் கொண்ட தன்மையை வெளிப்படுத்துகிறது. இந்த அழகான போஸ்டர் ரசிகர்களிடையே படத்தின் மீதான ஆர்வத்தை மேலும் அதிகரித்துள்ளது.

‘ஜமா’ படத்தின் மூலம் கவனம் பெற்ற பாரி இளவழகன், இப்படத்தில் கதாநாயகனாக நடித்ததுடன் கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். அவருக்கு ஜோடியாக, ‘நீக்’ (NEEK) திரைப்படத்தின் மூலம் இளைஞர்களின் மனதைக் கவர்ந்த ரம்யா ரங்கநாதன் கதாநாயகியாக நடித்துள்ளார்.‘குட் நைட்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ போன்ற மனதை வருடும் வெற்றிப் படங்களைத் தொடர்ந்து, மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் வழங்கும் மற்றுமொரு இதயப்பூர்வமான படைப்பாக ‘அன்பே டயானா’ உருவாகியுள்ளது. இப்படத்தை யுவராஜ் கணேசன், சத்யா கரிகாலன் மற்றும் இரா. சரவணன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். காதல், குடும்பம் மற்றும் ஒன்றாக இருப்பதன் மகிழ்ச்சியை கொண்டாடும், மனம் நிறைந்த பொழுதுபோக்கு திரைப்படமாக இது உருவாகியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

சென்னையின் பெரம்பூர் பகுதியை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தத் திரைப்படம், குறிப்பாக, வெவ்வேறு கலாச்சாரப் பின்னணியைச் சேர்ந்த இருவரின் காதலை மையமாகக் கொண்ட Cross-Cultural Love Story ஆகவும், வடசென்னை மிடில்கிளாஸ் குடும்ப வாழ்க்கை, காதல், மற்றும் நகைச்சுவை கலந்த சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. குடும்ப உறவுகள், காதல் மற்றும் உணர்வுகளுடன் கூடிய முழுமையான பொழுதுபோக்கு திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை ரோஜா நீண்ட இடைவெளிக்குப் பிறகு முக்கியமான முழுநீள கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது கதாபாத்திரத்தை ரசிகர்கள் வெகுவாக கொண்டாடுவார்கள் என படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் சேத்தன், பரிதாபங்கள் கோபி, இஸ்மத் பானு, சுதர்சன் காந்தி, செல் முருகன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

‘மண்டேலா’, ‘மாவீரன்’ படங்களின் இசையமைப்பாளர் பரத் சங்கர் இசையமைத்துள்ள இப்படத்திற்கு, ‘அருவி’ புகழ் ஷெல்லி கேலிஸ்ட் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பை பார்த்தா மேற்கொண்டுள்ள நிலையில், கலை இயக்கத்தை மகேந்திரன் கவனித்துள்ளார். பாடல்களை மோகன்ராஜன், முத்தமிழ் மற்றும் பாக்கியம் சங்கர் எழுதியுள்ளனர்.

ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள ‘அன்பே டயானா’, வரும் ஜூலை 17, 2026 அன்று உலகம் முழுவதும் வெளியாகி குடும்ப ரசிகர்களை கவரும் ஜாலியான காதல்-குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக அமையும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது

Previous Post

நடிகர் சனந்த் நடிக்கும் ‘ஹார்ட்டின் ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

Next Post

சென்னையில் நடைபெற்ற “எங்கள் தங்கம்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

Next Post

சென்னையில் நடைபெற்ற “எங்கள் தங்கம்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

Popular News

  • ஃபேண்டஸி உலகத்துக்குள் அழைத்துச் செல்லும் ‘டிரோன்ஸ்’ டிரெய்லர் வெளியானது!

    ஃபேண்டஸி உலகத்துக்குள் அழைத்துச் செல்லும் ‘டிரோன்ஸ்’ டிரெய்லர் வெளியானது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழா! ஓவியர் ஜீவானந்தனுக்கு ரூ. 1 லட்சம் விருது, மாணவர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு ரூ. 13.78 லட்சம் நிதியுதவி!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • கற்பனை உலகில் புதிய அனுபவம் தரும் ‘டிரோன்ஸ்’ – பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘சிக்னல் அட் 11:30’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை புஜிதா பொன்னாடா!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ஹைக்கூ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

October 12, 2026

கற்பனை உலகில் புதிய அனுபவம் தரும் ‘டிரோன்ஸ்’ – பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

October 12, 2026
‘சிக்னல் அட் 11:30’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை புஜிதா பொன்னாடா!

‘சிக்னல் அட் 11:30’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை புஜிதா பொன்னாடா!

October 12, 2026

‘ராமாயணா’ திரைப்படத்தின் முதல் பாகம் நவம்பர் 5 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது!

October 12, 2026

ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழா! ஓவியர் ஜீவானந்தனுக்கு ரூ. 1 லட்சம் விருது, மாணவர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு ரூ. 13.78 லட்சம் நிதியுதவி!

October 12, 2026

சிலம்பரசன் TR வெளியிட்ட ‘டெலிவரி பாய்’ டிரைலர்… காதல், ஆக்ஷன், காமெடி என கமர்ஷியல் அம்சங்களுடன் கவனம் ஈர்க்கும் லியோ சிவக்குமாரின் புதிய படம்!

October 12, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.