• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

பூசாண்டி வரான் விமர்சனம்.

by Tamil2daynews
April 1, 2022
in விமர்சனம்
0
டூப் இல்லாமல் நடித்த  “காதல் காளை” கார்த்திக்..!
0
SHARES
15
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
பூசாண்டி வரான் விமர்சனம்.
மலேசியாவை சேர்ந்தவர்கள் தமிழில் எடுத்திருக்கும் படம் பூச்சாண்டி வரான்.

தொல் பொருட்களை வாங்கி விற்கும் நபர், அவருக்கு உதவியாக இருவர். இவர்கள் பெரிய பங்களாவில் தங்கி இருக்கின்றனர்.

இவர்களிடம், ஒருவர் பழங்கால நாணயத்தை விற்கிறார்.

அது வந்தபிறகு, அந்த வீட்டில் அமானுஷ்யமான சம்பவங்கள் நடக்கின்றன. மூவரில் ஒருவர் கொல்லப்படுகிறார்.

இதையடுத்து மீதமுள்ள இருவரும், பேய்கள் குறித்து ஆராய்ச்சி செய்யும் ஒருவரும் சேர்ந்து நாணயத்தில் நதி மூலம், ரிசிமூலம் தேடிப் புறப்படுகிறார்கள்.

தொடர்ந்து பல திகில் சம்பவங்களை சந்திக்கிறார்கள். அவர்கள் தங்களுக்கான விடையை தேடிக் கண்டடைந்தார்களா இல்லையா என்பதுதான் கதை.

தற்போதைய சூழலில்  நடக்கும் திகில் கதையை, சிறப்பான திரைக்கதை மூலம், வரலாற்று காலத்தை இணைத்திருக்கிறார் இயக்குநர் ஜே.கே.விக்கி.

  ‘பூச்சாண்டி’ என்ற தலைப்பு கிடைக்காததால் பூசாண்டி என வைத்திருக்கிறார்கள்.

மன்னர் காலத்தில் சைவ வைணவ போட்டிகள் ஏராளம். அந்த சூழலில் ஆட்சிக்கு வந்த வைணவ மன்னன், சைவர்கள் மீது கடும் கட்டுப்பாடுகள் விதிக்கிறான். முக்கியமாக,  சிவனடியார்கள் நெற்றியில் திருநீறு அணியக்கூடாது என்று கட்டளை இட்டுகிறான்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, சிவனடியார்கள் நெற்றியை விட்டுவிட்டு உடல்முழுதும் திருநீறு பூசிக்கொள்கிறார்கள்.

அப்படிப் பூசிக்கொண்ட ஆண்டிகள்தாம் மக்களால் பூச்சாண்டிகள் என்றழைக்கப்பட்டனர்.

அரசனும் அவனது ஆட்சியும்,  அவர்களைக் குற்றவாளிகள் போல் நடத்தியிருக்கிறது.

இதன் மூலம், சைவம், வைணவம் இரண்டும் வேறு வேறு மதங்கள் என்கிற வரலாற்றையும் சொல்லி இருக்கிறார் இயக்குநர்.

(இன்று இந்து மதத்தின் இரு பிரிவுகளாக சைவம், வைணவம் என சொல்கிறோம் அல்லவா, இவை இரண்டு மட்டுமல்ல.. சாக்தம், கௌமாரம்,சௌரம், கணாபத்தியம், ஸ்மார்த்தம்   என பல பிரிவுகள் உண்டு. இவை தனித்தனி மதங்களாக இருந்தவை. வெள்ளையர் ஆட்சியில் இவற்றை இணைத்து இந்து மதம் என பெயர் சூட்டினர்.

தினேஷ் சாரதி கிருஷ்ணன், லோகன்நாதன், கணேசன் மனோகரன் உள்ளிட்ட அனைவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். மிகையற்ற நடிப்பு.

தொல்பொருள் ஆராய்ச்சி மாணவியாக முக்கிய வேடமேற்றிருக்கு ஹம்சினி பெருமாள் படத்துக்குத் திருப்புமுனையாக இருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் முகமதுஅலி இதுவரை பார்த்திராத மலேசியப்பகுதிகளை  கண்முன் நிறுத்துகிறார்.

ஷாவின் இசையும் ஜேசனின் ஒலிவடிவமைப்பும் திகிலை மேலும் கூட்டுகின்றன.

ஆவிகள் பற்றி எழுதும் பத்திரிகையாளராக நடித்திருக்கும் மிர்ச்சி ரமணாவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

சிறு காட்சியாக வந்தாலும், மலேசியாவுக்கும், தமிழ்நாட்டுக்குமான தொடர்பை சிறப்பாக வெளிப்படுத்தி  இருக்கிறார்கள்.

பிரம்மாண்ட படமான, கமல்ஹாசனுடைய தசாவதாரம் கொடுத்த அதிர்வுகளை, சாதாரண பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு இருக்கும் பூசாண்டி அளிக்கிறது. அத்தனை சிறப்பான திரைக்கதை.

 படக்குழுவினர் அனைவரும் – ஒருவரைத் தவிர – மலேசியாவைச் சேர்ந்தவர்கள்.

தமிழ்நாட்டு படத்துக்கு இணையாக, சுவாரஸ்யமாக எடுத்திருக்கிறார்கள்.

இந்த மலேசியா புதிய வரவுகளை தமிழ் ரசிகர்கள் நிச்சயமாக வரவேற்பார்கள்.
Previous Post

ஏப்ரல்-8 முதல் “டாணாக்காரன்”

Next Post

‘மாஸ் மகாராஜா’ ரவிதேஜாவின் ‘டைகர் நாகேஸ்வரராவ்’ படப்பிடிப்பு தொடக்கம்

Next Post
டூப் இல்லாமல் நடித்த  “காதல் காளை” கார்த்திக்..!

'மாஸ் மகாராஜா' ரவிதேஜாவின் 'டைகர் நாகேஸ்வரராவ்' படப்பிடிப்பு தொடக்கம்

Popular News

  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • சூர்யாவின் தயாரிப்பில் உருவான ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் (ராரா) தமிழ் திரைப்படத்தின் ‘காசு’ எனும் தலைப்பிலான புதிய பாடலை AMAZON PRIME VIDEO வெளியிட்டது

    0 shares
    Share 0 Tweet 0
  • மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி – ஆர்யா இணைந்து வெளியிட்ட நடிகை ப்ரியா பவானி சங்கரின் ‘ஹாட் ஸ்பாட் 2 மச்’ படத்தின் முன்னோட்டம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ரெட்ரோ வெற்றி, மீடியா நண்பர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த சூர்யா!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்பட டிரெய்லர்: நோவா சென்டினியோ, ஜேசன் மோமோவா மற்றும் வித்யுத் ஜமால் இணையும் அதிரடி ஆக்‌ஷன்!

July 31, 2026

நடிகை சிம்ரனின் நெகிழ்ச்சியான மனிதநேய செயல் – மாற்றுத்திறனாளி சிறுமியின் கனவை நனவாக்கிய மறக்க முடியாத தருணம்!

July 31, 2026

ஏழு மாநிலங்களை சேர்ந்த 1000 ரசிகர்களுடன் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக நேரம் செலவிட்டு மகிழ்ந்த நடிகர் அல்லு அர்ஜுன்!

July 31, 2026

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது!

July 31, 2026
நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் ஐந்து இந்திய மொழிகளில் உலகளவில் வெளியீடு!

நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் ஐந்து இந்திய மொழிகளில் உலகளவில் வெளியீடு!

July 31, 2026

பிரைம் வீடியோ, ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ சீரிஸிலிருந்து துள்ளலான புதிய ‘தெய்வா’ பாடலை வெளியிட்டது !

July 31, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.