• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

அமெரிக்க ராணுவத்தில் இணைந்த நடிகை அகிலா நாரயணனின் புதிய சாதனை!

by Tamil2daynews
February 28, 2022
in சினிமா செய்திகள்
0
நயன்தாரா – விக்னேஷ் சிவனின் அடுத்தப் பயணம் ஆரம்பம்..!
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
akilanarayanan -Actress Akila narayanan photoshoot pictures & News - www.mykollywood.com
திரைத்துறை உள்ளிட்ட கலைத்துறையில் ஈடுபடுவதையே பலர் சாதனையாக கருதும் நிலையில், கலைத்துறையில் மட்டும் இன்றி ராணுவத்திலும் இணைந்து தமிழ் நடிகை ஒருவர் சாதித்திருக்கிறார்.கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’காதம்பரி’. சமூக கருத்தை வலியுறுத்தி உருவான திகில் திரைப்படமான இப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானர் அகிலா நாராயணன். அமெரிக்கா வாழ் தமிழ் பெண்ணான இவர் கலை மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக தனது தனிப்பட்ட முயற்சியால் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். நடிப்போடு பிரபல பாடகியாகவும் வலம் வந்த அகிலா நாராயணன், கலைத்துறையோடு தனது சாதனை பயணத்தை  நிறுத்திக்கொள்ளாமல், ராணுவத்தில் இணைய வேண்டும் என்று முடிவு செய்தார்.
மிக கடினமான பயிற்சிகளை கொண்ட அமெரிக்க ராணுவத்தில் பட்டம் பெறுவது என்பது மிக சவாலானது என்றாலும், தனது மகளின் விருப்பத்துக்கு அகிலாவின் குடும்பத்தாரும் சம்மதம் தெரிவிக்க, கடுமையான பல மாத பயிற்சிகளை வெற்றிகரமாக முடித்து பட்டம் பெற்ற அகிலா நாராயணன், அமெரிக்க ராணுவத்தில் வழக்கறிஞராக இணைந்துள்ளார்.இதன் மூலம் அமெரிக்க ராணுவத்தில் இணைந்த முதல் தமிழ் நடிகை என்ற பெருமையை பெற்றிருக்கும் அகிலா நாராயணன், அமெரிக்க ராணுவத்தின் பலவிதமான கடின பயிற்சிகளை வெற்றிகரமாக முடித்து வீரமும், விவேகமும், பலமும் கொண்ட பெண்மணியாக தன்னை நிரூபித்துள்ளார்.
மேலும், இளைய சமூகத்தினருக்கு ஊக்கமளிக்கும் வகையில் சமூகத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் அகிலா நாராயணன், தான் கற்றதை பிறருக்கும் கற்பிக்கும் வகையில், ‘நைட்டிங்கிள் ஸ்கூல் ஆஃப் மியூசிக்’ (Nightingale School of Music) என்ற இசைப் பள்ளியை ஆன்லைன் மூலம் நடத்தி வருகிறார்.அமெரிக்க ராணுவ வீரர்களுக்கான சட்ட ஆலோசகராக செயலாற்ற இருக்கும் அகிலா நாராயணன், தான் வாழும் நாட்டுக்காக சேவை செய்வதற்காகவே இத்துறையில் இணைந்துள்ளார். அவரது இத்தகைய  சேவை மனப்பான்மைக்கு பலர் பாராட்டு தெரிவித்து வருவதோடு, அவரது குடும்பத்தாரையும் வாழ்த்தி வருகிறார்கள்.
இதன் மூலம், நடிகை அகிலா நாராயணன் மட்டும் இன்றி அவருடைய குடும்பத்தை சார்ந்த , சுமதி நாராயணன், நாராயணன் நரசிங்கம், ஐஸ்வர்யா நாராயணன், சேகர் குழந்தைவடிவேலு, உமா சேகர், ஆதித்யா சேகர், அரவிந்த் சேகர் என அனைவரும் தங்களை ராணுவ குடும்பம் என்று பெருமையாக சொல்லிக்கொள்வதோடு, அமெரிக்க ராணுவத்திற்கு சேவை செய்வதை தங்களது கடமையாகவும் கருதுகிறார்கள்.
Previous Post

அஜித்தின் வலிமையை பார்த்து ரசித்த மலேசிய அமைச்சர்!

Next Post

இங்கு தயாரிப்பாளர்களுக்கு மதிப்பில்லை. கே.டி . குஞ்சுமோன் ..!

Next Post
நயன்தாரா – விக்னேஷ் சிவனின் அடுத்தப் பயணம் ஆரம்பம்..!

இங்கு தயாரிப்பாளர்களுக்கு மதிப்பில்லை. கே.டி . குஞ்சுமோன் ..!

Popular News

  • வரலாற்றில் முதல் முறையாக இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான இலங்கைத் தமிழ்த் திரைப்படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘வேட்டுவம்’ பா.இரஞ்சித்தின் பிரம்மாண்ட அபோகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம்.

    0 shares
    Share 0 Tweet 0
  • பீப் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • பாரிஸ் கபே – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கிறிஸ்டினா கதிர் வேலன்’ திரைப்பட இயக்குனரின் புதிய படம்: “ஸ்கார்” (SCAR)

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

#Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

September 20, 2026

பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!

September 20, 2026

வரலாற்றில் முதல் முறையாக இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான இலங்கைத் தமிழ்த் திரைப்படம்

September 20, 2026

பீப் – விமர்சனம்

September 20, 2026

‘வேட்டுவம்’ பா.இரஞ்சித்தின் பிரம்மாண்ட அபோகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம்.

September 20, 2026

‘மீசைய முறுக்கு 2’ இசைக் கலைஞர்களின் வாழ்க்கை, போராட்டம், கனவுகளைப் பேசும் உலகளாவிய கதை – ஹிப்ஹாப் தமிழா ஆதி

September 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.