• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

‘அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் “கல்லா நிக்கிறியே” பாடல் வெளியானது !!

by Tamil2daynews
September 14, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
‘அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் “கல்லா நிக்கிறியே” பாடல் வெளியானது !!

காதலின் வலியையும் காதலியின் பெருமையையும் பேசும் மனதை வருடும் மெலடி – “கல்லா நிக்கிறியே”!

முன்னணி இளம் நடிகர் அசோக்செல்வன் நடிப்பில், ஆர்.கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடலான “கல்லா நிக்கிறியே” வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

அழகான காதல் கதையாக உருவாகி வரும் இப்படத்திற்காக கோவிந்த் வஸந்தா இசையில் உருவாகியுள்ள “கல்லா நிக்கிறியே” பாடலுக்கு பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா வரிகளை எழுதியுள்ளார். பாடலை சித் ஸ்ரீராம் தனது தனித்துவமான குரலில் பாடியுள்ளார்.

முதல் சிங்கிளான “ஆசை வரமே” காதலின் நெருக்கத்தையும், இனிமையான காதல் தருணங்களையும் அழகாகப் பதிவு செய்திருந்த நிலையில், “கல்லா நிக்கிறியே” காதலின் மற்றொரு பக்கத்தைப் பேசுகிறது. காதலின் வலி, காதலியின் பெருமை, பிரிவின் ஏக்கம் என உணர்வுகளை தாங்கி நிற்கும் இப்பாடல், காதல் உலகிற்குள் கேட்பவர்களை மெல்ல இழுத்துச் செல்கிறது.

கார்த்திக் நேத்தாவின் வரிகள் காதலின் ஆழமான உணர்வுகளை அழகாகக் கடத்த, கோவிந்த் வஸந்தாவின் இசை அந்த உணர்வுகளுக்கு உயிர் கொடுக்கிறது. குறிப்பாக சித் ஸ்ரீராமின் உணர்வுப்பூர்வமான குரல், பாடலின் ஒவ்வொரு வரியையும் மனதுக்குள் ஊடுருவச் செய்கிறது. காதலின் வலியை உணர்ந்தவர்களின் மனதில் இப்பாடல் நிச்சயம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

பாடலுடன் வெளியாகியுள்ள விஷுவல்களும் கூடுதல் கவனம் ஈர்க்கின்றன. இசையமைப்பாளர் கோவிந்த் வஸந்தா மற்றும் பாடகர் சித் ஸ்ரீராம் இடம் பெறும் காட்சிகளுடன், ‘அன்பில் அவன்’ படத்தின் அழகான காட்சிகளும் இணைக்கப்பட்டுள்ளன. பாடலின் உணர்வுகளோடு படத்தின் விஷுவல்களும் ஒன்றிணைவதால், “கல்லா நிக்கிறியே” பாடலை மீண்டும் மீண்டும் பார்க்கவும் கேட்கவும் தூண்டும் வகையில் அமைந்துள்ளது.

‘அன்பில் அவன்’ திரைப்படத்தில் அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன், சபு மோன், அப்துல் சமத், கதிர் பாலு, மஹா டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் கதையை ‘போர் தொழில்’ பட இயக்குநர் விக்னேஷ் ராஜா எழுதியுள்ளார். கௌதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவை மேற்கொள்ள, கோவிந்த் வஸந்தா இசையமைக்கிறார். படத்தொகுப்புப் பணிகளை ஆர்.கே. செல்வா கவனிக்கிறார். மணிகண்டன் ஸ்ரீனிவாசன் கலை இயக்கத்தை மேற்கொண்டுள்ளார்.

பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய அழகான காதல் கதையாக உருவாகியுள்ள இப்படத்தை ஐங்கரன் இன்டர்நேஷனல் மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் கே. கருணா மூர்த்தி, அசோக் செல்வன், அபிநயா செல்வம் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘அன்பில் அவன்’ திரைப்படம்  வரும் செப்டம்பர் மாதம் 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

https://www.youtube.com/watch?v=b-IJaMCIhm8
Previous Post

“ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைக்கும் கிரைம் த்ரில்லர்…” ; ‘பீப்’ படம் குறித்து மனம் திறந்த நடிகர் ராகவ்!

Next Post

செப்டம்பர் 24-இல் வெளியாகிறது! நேச்சுரல் ஸ்டார் நானியின் ‘தி பாரடைஸ்’ – டிரெய்லர் இன்றி புதிய முயற்சி

Next Post

செப்டம்பர் 24-இல் வெளியாகிறது! நேச்சுரல் ஸ்டார் நானியின் 'தி பாரடைஸ்' – டிரெய்லர் இன்றி புதிய முயற்சி

Popular News

  • இந்திய ரசிகர்களுக்கு மிகப்பிடித்த ஃபேமிலி திரில்லர் திரைப்படமான ‘த்ரிஷ்யம் தி கன்குலூஷன்’ (Drishyam The Conclusion) அக்டோபர் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • மரகத நாணயம் படப்புகழ் இயக்குநர் ARK சரவணன் இயக்கத்தில், நடிகர் ஹிப் ஹாப் ஆதி

    0 shares
    Share 0 Tweet 0
  • இசை கலைஞர் பால் டப்பாவின் புதிய மியூசிக் வீடியோ ஆல்பம் ‘ஏரோபிளேன்’ வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர்கள் ராஜ் அய்யப்பா, டெல்னா டேவிஸ் நடிப்பில் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கும் ‘லவ் இங்க்’ திரைப்படத்தின் வில்லனாக சுனில் ரெட்டி!

    0 shares
    Share 0 Tweet 0
  • “அக்கா’வில் நடிப்பதற்கு முன்பு என்னால் ஒரு கேங்க்ஸ்டராக நடிக்க முடியும் என நம்பவில்லை” கீர்த்தி சுரேஷ்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

இசை கலைஞர் பால் டப்பாவின் புதிய மியூசிக் வீடியோ ஆல்பம் ‘ஏரோபிளேன்’ வெளியீடு

October 30, 2026

நடிகர்கள் ராஜ் அய்யப்பா, டெல்னா டேவிஸ் நடிப்பில் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கும் ‘லவ் இங்க்’ திரைப்படத்தின் வில்லனாக சுனில் ரெட்டி!

October 30, 2026

“அக்கா’வில் நடிப்பதற்கு முன்பு என்னால் ஒரு கேங்க்ஸ்டராக நடிக்க முடியும் என நம்பவில்லை” கீர்த்தி சுரேஷ்!

October 30, 2026

ஜீவாவின் ‘தகப்பன்’ படத்திலிருந்து ‘தங்கப்புள்ள’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!

October 30, 2026

‘வேட்டுவம்’ – பொங்கல் 2027-ல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது!

October 30, 2026
அமல் அஜித் – பிரியங்கா ராஜகுமாரன் நடிக்கும் புதிய திரைப்படம்  ‘ப்ளாக் நைட் பாய்ஸ்’! பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது!

அமல் அஜித் – பிரியங்கா ராஜகுமாரன் நடிக்கும் புதிய திரைப்படம் ‘ப்ளாக் நைட் பாய்ஸ்’! பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது!

October 27, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.