• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

பின்னணி குரல் பதிவில் “மழை பிடிக்காத மனிதன்”…

by Tamil2daynews
March 14, 2022
in சினிமா செய்திகள்
0
பெண்களின் பாதுகாப்பிற்காக “எதற்கும் துணிந்தவன்”  விமர்சனம்
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
விஜய் மில்டன் – தமிழ் திரையுலகின் பன்முக ஆளுமை, 37 திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு,  மற்றும் 8 திரைப்படங்களை இயக்கி, மிக சிறந்த திரைக்கலைஞராக வலம் வருபவர். மிக வித்தியாசமான கதைக்கரு, ரசிகர்களை ஈர்க்கக்கூடிய திரைக்கதை, கண்களை கவரும் உருவாக்கம் ஆகியவற்றில் வித்தகராக  நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், பார்வையாளர்கள் மற்றும் வர்த்தக வட்டாரத்தில் உள்ள அனைவரின் மத்தியிலும் பாராட்டைப் பெற்றுள்ளவர். தற்போது அவர் அடுத்ததாக இயக்கும் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் இறுதிக்கட்ட பணிகளை செய்து வருகிறார். கமல் போரா, லலிதா தனஞ்செயன், பிரதீப் B பங்கஜ் போரா மற்றும் Infiniti Film Ventures சார்பில் S.விக்ரம் ஆகியோர் இந்தப் படத்தை இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தில் கதாநாயகியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். நடிகர் சரத்குமார் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார், கேப்டன் விஜயகாந்த் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு சிறப்பு வேடத்தில் இப்படத்தின் மூலம் மீண்டும் திரைக்கு வருகிறார்.
இப்படத்தின் ‘மழை பிடிக்காத மனிதன்’ என்ற தலைப்பு, படம்  எப்படியானதாக இருக்கும் என்ற பெரும் ஆர்வத்தை பார்வையாளர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் இத்தலைப்பு குறித்து இயக்குநர்.., பல்வேறு தொழில்களின் அடிப்படையில் மக்கள் மழையை ஒரு வரம் அல்லது சாபமாக உணர்கிறார்கள் ஆனால், இங்கே கதாநாயகன் ஒரு விதிவிலக்கானவன், மழையை  விரும்பாததற்கு அவனுக்கு தகுந்த  காரணமும் உள்ளது. ஆனால் அதற்கு பின்னணி கதை எதுவும் இல்லை, மழையுடன் தொடர்புடைய நினைவுகள் சில அவனில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன, ஆனால் இறுதியில் இவையெல்லாவற்றிலும் ஒரு மாற்றம் ஏற்படுகிறது. இந்தப் படத்தில் மேகா ஆகாஷின் கதாபாத்திரம் வழக்கமான ஒன்றாக இருக்காது, ஆனால் யதார்த்தமான பெண்ணின் சாயல்களை கொண்டிருக்கும். சரத்குமார் மிக முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார். இப்படத்தின் பெரும்பகுதியை தியூ – தாமன் பகுதியில் படக்குழுவினர் எடுத்துள்ளனர், அந்த கவர்ச்சியான இடங்களில் படமாக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் இதுவாகும். கன்னட திரையுலகில் மிகவும் கொண்டாடப்படும் தனஞ்செயா மற்றும் பிருத்வி அம்பர் இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்கள். மற்ற நட்சத்திர நடிகர்கள் சரண்யா பொன்வண்ணன், முரளி சர்மா, தலைவாசல் விஜய், சுரேந்தர் தாக்கூர், ப்ரணிதி, இயக்குனர் ரமணா மற்றும் இன்னும் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடிக்கிறார்கள்.
படத்தின் சிறு சிறு பகுதிகள்  தவிர படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது, மேலும் 2022 கோடையில் இப்படம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் டப்பிங் பணிகள் பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது, மற்றும் பிற போஸ்ட் புரடக்சன் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Previous Post

சொந்த மண்ணுக்கு நல்லது செய்வதற்காக நடிகராக மாறிய சிதம்பரம்

Next Post

படப்பிடிப்புடன் தொடங்கிய பிரபுதேவாவின் ‘ரேக்ளா’

Next Post
பெண்களின் பாதுகாப்பிற்காக “எதற்கும் துணிந்தவன்”  விமர்சனம்

படப்பிடிப்புடன் தொடங்கிய பிரபுதேவாவின் ‘ரேக்ளா’

Popular News

  • குரு சோமசுந்தரம் – அனுமோல் நடிக்கும் ‘பாரிஸ் கஃபே’ செப்டம்பர் 18ஆம் தேதி வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • என்ன விலை – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • “என்ன விலை திரைப்படம் ரசிகர்களுக்கு நிச்சயம் மறக்க முடியாத அனுபவம் கொடுக்கும்” -நடிகை நிமிஷா சஜயன்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘பத்தா’ படத்தின் ‘வேர்ல்ட் ஆஃப் பத்தா’ டீசர் வெளியீடு –ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் விஜய் சேதுபதியின் வித்தியாசமான பரிமாணங்கள்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘பாரத ரத்னா’ எம் எஸ் சுப்புலட்சுமியின் சுய சரிதையான ‘எம் எஸ் : எ லெகஸி ஆன் ஸ்கிரீன்- M.S. : A LEGACY ON SCREEN ‘ திரைப்படத்தின் தொடக்க விழா

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

அர்ஜுன் தாஸ் நடிக்கும் புரொடக்ஷன் No.1 (Production No.1) – பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்!

September 17, 2026

நவம்பர் 20-ம் தேதி பிரமாண்டமாக வெளியாகும் துல்கர் சல்மானின் ‘AOT’

September 17, 2026

‘பாரத ரத்னா’ எம் எஸ் சுப்புலட்சுமியின் சுய சரிதையான ‘எம் எஸ் : எ லெகஸி ஆன் ஸ்கிரீன்- M.S. : A LEGACY ON SCREEN ‘ திரைப்படத்தின் தொடக்க விழா

September 17, 2026

‘கன்னடத்து பைங்கிளி’ படத்திற்காக டி. ராஜேந்தரின் இசையில் முதல் முறையாக பாடிய இசைஞானி இளையராஜா

September 17, 2026

‘பத்தா’ படத்தின் ‘வேர்ல்ட் ஆஃப் பத்தா’ டீசர் வெளியீடு –ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் விஜய் சேதுபதியின் வித்தியாசமான பரிமாணங்கள்!

September 17, 2026

‘தி டார்க் ஹெவன்’. – விமர்சனம்

September 17, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.