ஹாலிவுட் தரத்தில் அரவிந்த்சாமி நடிக்கும் தமிழ் படம்..!
விக்ரம் தமன்னா நடிப்பில் உருவாகி மாபெரும் வெற்றிபெற்ற ஸ்கெட்ச் படத்தை தயாரித்த மூவிங் பிரேம்ஸ் படநிறுவனம் தற்போது அரவிந்த்சாமி ரெஜினா நடித்துள்ள ” கள்ளபார்ட் ” படத்தை மிகுந்த பொருட்செலவில் தயாரித்துள்ளது.என்னமோ நடக்குது, அச்சமின்றி போன்ற படங்களை இயக்கிய ராஜபாண்டி இந்த படத்தை இயக்கியுள்ளார்.கதாநாயகனாக அரவிந்த்சாமி நடித்துள்ளார் கதாநாயகியாக ரெஜினா கசாண்ட்ரா நடித்துள்ளார். பார்த்தி, ஆதேஷ் பாலா, பேபி மோனிகா, ஹரிஷ் பெறாடி ஆகியோர் முக்கிய பத்திரத்தில் நடித்துள்ளனர்.

படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் கள்ளபார்ட் என்பது பொருந்தும் அதனாலேயே படத்திற்கு கள்ளபார்ட் என்று பெயர் வைத்துள்ளோம்.ஹைஸ்ட் திரில்லரில் நடக்கும் உணர்வு பூர்வமான ஒரு போராட்டம் தான் இந்த படத்தின் திரைக்கதை.
இதுவரை யாரும் தொடாத ஒரு கதைகளைதை இதில் பார்க்கலாம்
