விஜய்க்கு கதை சொன்னேன்..! விஜய் என்ன சொன்னார்..! – ஆர்.ஜே.பாலாஜி.
ரேடியோ உலகில் இருந்து வெகு ஜனங்களை கவர்ந்தவர் தான் நம்ம ஆர்.ஜே.பாலாஜி .
தனது இடைவிடாத நகைச்சுவை பேச்சின் மூலமும், டயலாக் டெலிவரி மூலமும் மக்களிடையே பிரபலமடைந்தவர்தான் ஆர் ஜே பாலாஜி .பிறகு ரேடியோ உலகில் சினிமா துறை சம்பந்தப்பட்ட இயக்குனர்கள், நடிகர்கள், பட விளம்பரத்துக்காக இவர் பேட்டி மூலம் சினிமா உலகில் தனது நட்பு வட்டத்தை பெரிதாக்கி கொண்டார் ஆர் ஜே பாலாஜி.
இந்த சினிமா உலகில் யாருக்கு எந்த மாதிரி முன்னேற்றம் அமைகிறது என்று எவராலும் கணிக்க முடியாதபடி திடீரென ஆர் ஜே பாலாஜி புது கட்சி தொடங்குகிறார்.அந்த கட்சியின் பெயர் எல்கேஜி என்ற பெயரின் மூலம் இரண்டு வருடங்களுக்கு முன்பு கோடம்பாக்கத்தை கலக்கியது அனைவருக்கும் தெரியும்.
அப்பொழுது பலரின் தவறான விமர்சனத்துக்கு ஆளானார் ஆர் ஜே பாலாஜி இவருக்கு எல்லாம் ஒரு நேரம் இவரெல்லாம் கட்சி ஆரம்பிக்கிற என்று இவர் தனது சினிமா பட விளம்பரத்துக்காக அடித்து ஒட்டப்பட்ட போஸ்டருக்கு வித்தியாசம் தெரியாத சிலர் இவரை வருத்து எடுத்தனர்.அதன் பிறகுதான் இவர் கதாநாயகனாக நடித்து வெளிவர இருக்கும் திரைப்படத்தின் பெயர் தான் எல்கேஜி என்று. முதல் படத்திலேயே இவருக்கென தனி முத்திரை பதித்து அடுத்து தடாலடியாக நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் என்ற படத்தை எடுத்து அதிலும் வெற்றி கண்டார் ஆர் ஜே பாலாஜி.
மிகப்பெரிய வசூலை வாரிக்குவித்த வீட்ல விசேஷங்க திரைப்படத்தின் வெற்றி விழாவில் பேசிய ஆர் ஜே பாலாஜி இனி வருங்காலத்தில் திரைப்படங்கள் இயக்கமும் நல்ல கதைகளை நடிக்கவும் ஆர்வமாக உள்ளேன் என்றும் சமீபத்தில் தளபதி விஜய் அவர்களை சந்தித்து ஒரு 40 நிமிட கதையை அவரிடம் தெரிவித்தேன் அசராமல் கதையை கேட்ட விஜய் கேட்டு முடித்த பின் அசந்து போனார் என்றும் மீதி கதைய எப்ப சொல்லுவீங்க என்று கேட்டார் நான் அதுக்கு ஒரு ஆறு மாதம் முதல் ஒரு வருடம் வரை நேரம் எடுத்துக்கிறேன் சொன்னேன் உடனே நல்ல டெவலப் பண்ணிட்டு வாங்கன்னு சொல்லி அனுப்பினார்.