• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

நவம்பர் 29ல் திரைக்கு வரும் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.

by Tamil2daynews
November 12, 2019
in சினிமா செய்திகள்
0
நவம்பர் 29ல் திரைக்கு வரும் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.
0
SHARES
22
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

எல்லையற்ற பொழுதுபோக்கு அம்சங்கள் நிரம்பிய இயக்குநர் சரண் படங்கள், எப்போது பார்த்தாலும் புத்துணர்ச்சியூட்டுவதாகவே அமைந்திருக்கும். சரண் இயக்கத்தில் ஆரவ் மற்றும் காவ்யா தபார் பிரதான வேடங்களில் நடித்திருக்கும் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்டத்துக்கு கிடைத்த அபரிமிதமான வரவேற்புக்குப் பிறகு, எதிர்வரும் நவம்பர் 29ஆம் தேதி முதல் ரசிகர்களை திரையரங்குகளுக்கு ஈர்க்க வருகிறது மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.

இது குறித்து பேசிய தயாரிப்பாளர் சுரபி பிலிம்ஸ் மோகன், நவம்பர் 29ஆம் தேதி படத்தை வெளியிடவிருக்கும் செய்தியை மகிழ்ச்சியுடன் பகிரந்து கொள்கிறேன். தயாரிப்பாளர் என்பதைத் தாண்டி, இயக்குநர் சரண் வெகுஜன ரசனைக்கேற்ற வகையில் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். படத்தை உருவாக்கியிருப்பதைப் பார்த்து மகிழச்சியடைகிறேன். உண்மையில் சொல்லப்போனால், தற்கால ரசிகர்களின் ரசனைக்கேற்ற பொழுதுபோக்குப் படத்தை தனது பாணியிலிருந்து விலகாமல், மேம்பட்ட வடிவில் கொடுத்திருக்கிறார். படத்தின் துவக்கத்திலிருந்து இறுதிவரை ரசிகர்கள் இப்படத்தை வெகுவாக ரசிப்பார்கள் என்று திடமாக நம்புகிறேன்.

அப்பழுக்கற்ற நடிப்பை இப்படத்தில் வழங்கியிருக்கும் ஆரவ், சில சமயங்களில் ஆச்சரியம் ஏற்படுத்தும் வகையில் நடிப்பில் புதிய பரிணாமங்களைத் தொட்டிருக்கிறார். தனித்துவம் வாய்ந்த உடல் மொழி, மேனரிசம், ஆகியவற்றுடன் இரண்டு வகையான வேடங்களில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் ஆரவ். சில சமயங்களில் இரண்டு வகையான பாத்திரங்களையும் ஒரே நாளில் படமாக்கப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டபோதுகூட பெரு முயற்சி செய்து, பரிபூரணமாக அவற்றைச் செய்தது குறிப்படத்தக்கது என்றார்

ராதிகா சரத்குமார், ரோகிணி, நாசர், நிகிஷா படேல், ஆதித்யா, தேவதர்ஷினி, பாகுபலி புகழ் பிரபாகர், முனீஷ்காந்த், சாயாஜி ஷிண்டே, பிரதீப் ராவத், சாம்ஸ் மற்றும் சில முக்கிய நடிக நடிகையரும் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். சைமன் கே.கிங் இசை ஏற்கெனவே பெரிய அளவில் வரவேற்பு பெற்றிருக்கும் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். படத்தின் ஒளிப்பதிவை கே.வி.குகன் கவனிக்க, கோபி கிருஷ்ணா படத்தொகுப்பு செய்திருக்கிறார். சரண் எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தை சுரபி பிலிம்ஸ் சார்பில் எஸ்.மோகன் தயாரித்திருக்கிறார்.

Tags: AravMarket Raja MBBSRadhika SarathkumarSaran
Previous Post

Ashima Narwal’s inspiring and cherishing travel diaries 

Next Post

ACTION MOVIE STILLS

Next Post
ACTION MOVIE STILLS

ACTION MOVIE STILLS

Popular News

  • அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி! ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிக்கும் ‘டாக்ஸிக்(Toxic): எ ஃபேரி டேல் ஃபார் கிரோன் -அப்ஸ்’ (A Fairy Tale for Grown-Ups)— முதலில் அறிவித்தபடியே மார்ச் 19, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது !

    0 shares
    Share 0 Tweet 0
  • “அதிரடியான மற்றும் பொழுதுபோக்கு அம்சம் கொண்ட அட்வென்ச்சர் ” என பிரிடேட்டர்: பேட்லேட்ண்ஸ் திரைப்படத்தை விமர்சகர்கள் பாராட்டி வருகின்றனர்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆர்யன் – விமர்சனம் ரேட்டிங் – 4 / 5

    0 shares
    Share 0 Tweet 0
  • ஒற்றுமையை வலியுறுத்தும் ‘RAGE OF KAANTHA’ தமிழ்-தெலுங்கு ராப் பாடல் டீசர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று இணையத்தில் டிரெண்டாகியுள்ளது!

    0 shares
    Share 0 Tweet 0
  • கபடி வீராங்கனை கார்த்திகாவிற்கும், கண்ணகிநகர் கபடிகுழுவிற்கும் 10 லட்சம் காசோலை வழங்கிய இயக்குநர் மாரிசெல்வராஜின் பைசன் படக்குழு

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

கும்கி 2 படத்தின் முதல் சிங்கிள் “பொத்தி “பொத்தி உன்ன வச்சு” பாடல் வெளியானது !!

November 2, 2025

‘மெட்ராஸ் மாஃபியா கம்பெனி’ படத்தின் இசை & முன்னோட்ட வெளியீட்டு விழா !!

November 2, 2025

தேசிய தலைவர் – விமர்சனம்

November 2, 2025

Verus Productions வழங்கும் கெளதம் ராம் கார்த்திக் நடிப்பில் “ROOT” – படப்பிடிப்பு நிறைவு!

November 2, 2025

BR Talkies Corporation சார்பில் பாஸ்கரன் B, ராஜபாண்டியன் P, டேங்கி தயாரிப்பில், சுரேஷ் ரவி, யோகிபாபு நடிக்கும், புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, போஸ்ட் புரடக்சன் பணிகள் நடந்து வருகிறது.

November 2, 2025

தடை அதை உடை – விமர்சனம் ரேட்டிங் – 3 / 5

November 2, 2025
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.