நடிகர் விக்ராந்த் நடிப்பில் ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸாக உருவாகியுள்ள ‘LBW – லவ் பியாண்ட் விக்கெட்’ என்ற புதிய தமிழ் தொடருக்கான அறிமுக புரோமோவை ஜியோஹாட்ஸ்டார் அதன் சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது!
’ஹார்ட்பீட்’, ’போலீஸ் போலீஸ்’ மற்றும் ’ஆஃபீஸ்’ போன்ற லாங்-ஃபார்மேட் வெப் சீரிஸ் வெற்றியை தொடர்ந்து தற்போது கிரிக்கெட்டை மையமாகக் கொண்ட ‘LBW – லவ் பியாண்ட் விக்கெட்’ என்ற புதிய வெப்சீரிஸை ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் அறிமுகப்படுத்துகிறது. பிளாக்பஸ்டர் ’ஹார்ட்பீட்’ வெப்சீரிஸை தயாரித்த அட்லீஃபேக்டரி தயாரித்திருக்கும் இந்தத் தொடர் மூலம் நடிகர் விக்ராந்த் ஓடிடி தளத்தில் அறிமுகமாகிறார். ஜனவரி 1, 2026 முதல் LBW ப்ரீமியர் ஆகிறது. சமீபத்தில் நடைபெற்ற, ஜியோஹாட்ஸ்டார் சவுத் அன்பவுண்ட் நிகழ்வில் அறிவிக்கப்பட்டதன்படி ப்ரீமியர் ஆகும் முதல் அசல் தமிழ் தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தொடர் குறித்து நடிகர் விக்ராந்த் சந்தோஷ் பகிர்ந்து கொண்டதாவது, ”ஜியோஹாட்ஸ்டாருடன் முதன் முதலாக இணைகிறேன். எனக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட்டுடன் ஓடிடி தளத்தில் அறிமுகவாது இன்னும் மகிழ்ச்சியாக உள்ளது. கிரிக்கெட் எப்போதும் என் மனதிற்கு மிகவும் நெருக்கமானது. கிரிக்கெட்டுடன் இருக்கும் ஆழமான தொடர்பை உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்த LBW எனக்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. நிச்சயம் பார்வையாளர்களுக்கும் இது பிடித்தமானதாக இருக்கும்” என்றார்.அருணா ராக்கி திரைக்கதை எழுதியிருக்க கணேஷ் கார்த்திகேயன் இயக்கியுள்ள இந்தத் தொடரில் சிந்து ஷியாம், நியதி, ஹரிஷ், அயாஸ் கான், அக்ஷதா, நவீன், நிகில் நாயர் மற்றும் விஸ்வ மித்ரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
வலுவான கதைசொல்லல் மற்றும் கதாபாத்திரங்களுடன், ’LBW – லவ் பியாண்ட் விக்கெட்’ தொடர் தலைமுறைகள் கடந்து பார்வையாளர்களை ஈர்க்கும் ஸ்போர்ட்ஸ் கதையாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஜனவரி 1, 2026 முதல் ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் தமிழில் ’LBW – லவ் பியாண்ட் விக்கெட்’ ப்ரீமியர் ஆகிறது.








