• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

குட்வில் என்டர்டெயின்மென்ட்ஸின் ‘ஆபரேஷன் டிரால்’ படத்தில் இணைந்த முரளி ஷர்மா…அவரது பிறந்தநாளில் அறிவிப்பு வெளியிட்ட படக்குழு!

by Tamil2daynews
August 12, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

குட்வில் என்டர்டெயின்மென்ட்ஸின் ‘ஆபரேஷன் டிரால்’ படத்தில் இணைந்த முரளி ஷர்மா…அவரது பிறந்தநாளில் அறிவிப்பு வெளியிட்ட படக்குழு!

 

இந்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் தனது திறமையான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்த நடிகர் முரளி ஷர்மா, விரைவில் வெளியாகவுள்ள பான்-இந்தியன் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் திரைப்படமான ‘ஆபரேஷன் டிரால்’ படத்தில் நடிக்கிறார். நடிகர் முரளி ஷர்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு, இப்படத்தில் அவர் இணைந்திருப்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ‘ஆபரேஷன் டிரால்’ திரைப்படத்தில் ஜெயசூர்யா கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தை ரதீஷ் வேகா எழுதி இயக்குகிறார்.

பல மொழிகளில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வரும் முரளி ஷர்மா, இந்திய சினிமாவின் பன்முகத்தன்மை கொண்ட நடிகர்களில் ஒருவராக தன்னை நிலைநிறுத்தியுள்ளார். அழுத்தமான உணர்வுப்பூர்வமான கதாபாத்திரங்கள் முதல் ஆக்‌ஷன் கதாபாத்திரங்கள் வரை, தனது தனித்துவமான நடிப்பால் திரையில் தனக்கென தனியிடத்தை உருவாக்கியுள்ளார். ‘ஆபரேஷன் டிரால்’ படத்தில் அவர் இணைந்திருப்பது படத்திற்கு பலம் சேர்த்திருப்பதுடன் பான்-இந்திய அளவில் படம் மீதான எதிர்பார்ப்பையும் மேலும் வலுப்படுத்தியுள்ளது.

‘ஆபரேஷன் டிரால்’ படத்தில் முரளி ஷர்மா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதில் ஜெயசூர்யாவுடன் ரித்திகா சிங், காவ்யா ஷெட்டி, ஆன்சன் பால், நந்தலால் கிருஷ்ணமூர்த்தி, வினய் ராய், சித்திக், சாய் குமார் மற்றும் சிராஜுதீன் உள்ளிட்டோர் இணைந்து நடிக்கின்றனர்.

மாக உருவாகி வரும் ‘ஆபரேஷன் டிரால்’, தேசிய உளவுத்துறை நடவடிக்கைகளைப் பின்னணியாகக் கொண்ட இன்வஸ்டிகேஷன் த்ரில்லர் திரைப்படமாகும். ஜம்மு காஷ்மீரின் டிரால் பகுதியில் இந்திய பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற மோதலைத் தழுவி உருவாகியுள்ள இப்படம், ஆக்‌ஷன், உளவுத்துறை நடவடிக்கைகள் மற்றும் தேசப்பற்று ஆகியவற்றை பேசுகிறது.
கேரளா, கோயம்புத்தூர், புதுடெல்லி, குலு, மணாலி, முசோரி மற்றும் லடாக் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. குட்வில் என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் ஜாபி ஜார்ஜ் தாடதில் தயாரிக்கும் இப்படம், மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகத் தயாராகி வருகிறது.

இப்படத்தில் ஜெயசூர்யா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ரதீஷ் வேகா கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார். சுனிமோல் ஜாபி இணை தயாரிப்பாளராக உள்ளார்.

ஒளிப்பதிவை நஜோஸ் மேற்கொள்ள, படத்தொகுப்பை ஷஃபீக் வி.பி. கவனிக்கிறார். இசை மற்றும் பின்னணி இசையை ரதீஷ் வேகாவே அமைத்துள்ளார். திட்ட வடிவமைப்பை நோபிள் ஜேக்கப் மேற்கொண்டுள்ளார். தயாரிப்பு வடிவமைப்பை சஜீஷ் தாமரச்சேரியும், கலை இயக்கத்தை சுனீஷ் சோதரனும் கவனித்துள்ளனர். ஆடை வடிவமைப்பை சமீரா சனீஷ் மற்றும் சரிதா ஜெயசூர்யா மேற்கொண்டுள்ளனர். ரோனெக்ஸ் சேவியர் நடிகர்களின் ஒப்பனையை கவனித்துள்ளார்.

முரளி ஷர்மா தனது பிறந்தநாளை கொண்டாடும் இந்த வேளையில், ‘ஆபரேஷன் டிரால்’ படக்குழு, அவருக்கு தங்களது அன்பான பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது. மேலும், நாடு முழுவதும் உள்ள ரசிகர்களுக்கு அவரது சிறப்பான நடிப்பை கொண்டு சேர்க்க ஆவலுடன் காத்திருப்பதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.

Previous Post

விசாகப்பட்டினத்தில் பிரம்மாண்டமாக ‘AAA சினிமாஸ்’ தொடங்கி, தனது பொழுதுபோக்கு சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தும் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன்!

Next Post

விஜய் சேதுபதி நடிக்கும் ‘ஸ்லம் டாக் : 33 டெம்பிள் ரோடு’ திரைப்படத்தில் நடிகை தபுவின் ‘கேரக்டர் கிளிம்ப்ஸ்’ வெளியீடு

Next Post

விஜய் சேதுபதி நடிக்கும் 'ஸ்லம் டாக் : 33 டெம்பிள் ரோடு' திரைப்படத்தில் நடிகை தபுவின் 'கேரக்டர் கிளிம்ப்ஸ்’ வெளியீடு

Popular News

  • இந்த சுதந்திர தினத்தில், 26/11 பயங்கரவாத தாக்குதலின்போது தைரியமாக நின்று போராடிய பெயரிடப்படாத நாயகர்களின் சொல்லப்படாத கதையை கொண்டுவருகிறது இந்தி ZEE5-இன் பாரத் பாக்ய விதாதா

    0 shares
    Share 0 Tweet 0
  • துல்கர் சல்மானின் ‘ஐ ம் கேம்- I Am Game’ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு: ஆகஸ்ட் 20ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் !

    0 shares
    Share 0 Tweet 0
  • குட்வில் என்டர்டெயின்மென்ட்ஸின் ‘ஆபரேஷன் டிரால்’ படத்தில் இணைந்த முரளி ஷர்மா…அவரது பிறந்தநாளில் அறிவிப்பு வெளியிட்ட படக்குழு!

    0 shares
    Share 0 Tweet 0
  • விஜய் சேதுபதி நடிக்கும் ‘ஸ்லம் டாக் : 33 டெம்பிள் ரோடு’ திரைப்படத்தில் நடிகை தபுவின் ‘கேரக்டர் கிளிம்ப்ஸ்’ வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • அர்கா மீடியா ஒர்க்ஸ் மற்றும் ஷோயிங் பிசினஸ் நிறுவனங்களின் “ டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் ” ( Don’t Trouble the Trouble ) மின்னல் வேக ஃபர்ஸ்ட் சிங்கிள் “கேக்கு வாக்கு” ( Cakeu Walku ) இசை வீடியோ வெளியாகியுள்ளது.

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லரை வெளியிட்ட Netflix – வித்தியாசமான ட்விஸ்டுடன் வரும் முழுமையான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம்!

August 12, 2026

நடிகர் வைபவ்வின் ‘மாறுவேஷம்’ திரைப்படம் யூ/ஏ சான்றிதழுடன் அக்டோபர் 1 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது!

August 12, 2026

‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லர் வெளியீட்டு விழா !

August 12, 2026

‘அடடா’ பாடல் மூலம் தமிழ் சினிமா நினைவுகளை ராப் இசையில் கொண்டு வரும் கில்லா கே மற்றும் பால் டப்பா

August 12, 2026

அட்லி வழங்கும், விஜய் சேதுபதி நடிக்கும் ‘பத்தா’ – அக்டோபர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியீடு!

August 12, 2026

‘சேயோன்’ திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வருகிறது, அதன் இரண்டாவது கட்டப் படப்பிடிப்பு மதுரையில் இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது.

August 12, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.