• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ஒரே சமயத்தில் மூன்று திரைப்படங்கள் தயாரித்து தமிழ் சினிமாவில் வலுவாக தடம் பதிக்கும் லெமன் லீஃப் கிரியேஷன்

by Tamil2daynews
June 8, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ஒரே சமயத்தில் மூன்று திரைப்படங்கள் தயாரித்து தமிழ் சினிமாவில் வலுவாக தடம் பதிக்கும் லெமன் லீஃப் கிரியேஷன்

 

தயாரிப்பாளர்கள் ஆர். கணேஷ் மூர்த்தி மற்றும் ஜி சௌந்தர்யா தங்களது நிறுவனமான லெமன் லீஃப் கிரியேஷன் பிரைவேட் லிமிடெட் மூலம் ஒரே சமயத்தில் மூன்று திரைப்படங்களை தயாரிக்கின்றனர்.

இவற்றில் முதல் திரைப்படமான யோகி பாபு, லக்ஷ்மி மேனன் முதன்மை இடங்களில் நடிக்கும் ‘மலை’ அனைத்து பணிகளும் முடிந்து வெளியீட்டுக்கு தயாராக உள்ள நிலையில், அசோக் செல்வன், சாந்தனு மற்றும் கீர்த்தி பாண்டியன் உள்ளிட்டோர் நடிக்கும் ‘ப்ளூ ஸ்டார்’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், லெமன் லீஃப் கிரியேஷன் பிரைவேட் லிமிடெட்டின் மூன்றாவது திரைப்படம் இன்று (ஜூன் 7) சென்னையில் உள்ள அருள்மிகு காளிகாம்பாள் திருக்கோயிலில் பூஜை உடன் இனிதே தொடங்கியது.
Imageஇயக்குநர்கள் சுசீந்திரன் மற்றும் சற்குணம் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த ரமேஷ் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் இத்திரைப்படத்தில், விக்ரம் பிரபு, ஈசா ரெப்பா, ‘பர்மா’ படத்தில் நாயகனாக நடித்த மைக்கேல் தங்கதுரை ஆகியோர் நடிக்கின்றனர்.

ஜிப்ரான் இசை அமைக்கும் இத்திரைப்படத்திற்கு, ‘துப்பாக்கி முனை’ மற்றும் ‘கபடதாரி’ படங்களின் ஒளிப்பதிவாளர் ராசாமதி ஒளிப்பதிவு செய்கிறார்.
‘விக்ரம் வேதா’ மற்றும் ‘சுழல்’ புகழ் ரிச்சர்ட் கெவின் படத்தொகுப்பை மேற்கொள்ள உள்ளார். சண்டை காட்சிகளுக்கு ‘ராட்சசன்’ மற்றும் ‘சூரரை போற்று’ புகழ் விக்கியும், கலை இயக்கத்திற்கு ‘சுல்தான்’ மற்றும் ‘மலை’ திரைப்படங்களின் கலை இயக்குநர் ஜெயச்சந்திரனும் பொறுப்பேற்றுள்ளனர்.
Imageயோகி பாபு, லக்ஷ்மி மேனன் நடிக்கும் ‘மலை’ மற்றும் அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன் நடிக்கும் ‘ப்ளூ ஸ்டார்’ ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து தயாரிப்பாளர்கள் ஆர். கணேஷ் மூர்த்தி மற்றும் ஜி சௌந்தர்யாவின் லெமன் லீஃப் கிரியேஷன் பிரைவேட் லிமிடெட்டின் மூன்றாவது தயாரிப்பான ரமேஷ் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, ஈசா ரெப்பா நடிக்கும் புதிய திரைப்படம் இன்று பூஜையுடன் தொடங்கிய நிலையில் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

Previous Post

‘தேஜாவு’ வெற்றி பட இயக்குனரின் ‘தருணம்’ அடுத்த பட பூஜை..!

Next Post

தண்டட்டி இசை வெளியீட்டு விழா ஹைலைட்ஸ்

Next Post

தண்டட்டி இசை வெளியீட்டு விழா ஹைலைட்ஸ்

Popular News

  • தளபதி விஜய் உடன் பிறந்த தங்கையை  இதுவரை யாரும் பார்த்திராத அவரின் அறிய புகைப்படம்..!

    தளபதி விஜய் உடன் பிறந்த தங்கையை  இதுவரை யாரும் பார்த்திராத அவரின் அறிய புகைப்படம்..!

    0 shares
    Share 0 Tweet 0
  • “துடிக்கும் கரங்களுக்கு முன்.. துடிக்கும் கரங்களுக்கு பின்..” ; உண்மையை உடைத்து பேசிய விமல்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஜெயில்’ படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் வெளியிடுகிறது

    0 shares
    Share 0 Tweet 0
  • Pushkar Films Pushkara Mallikarjunaiah Presents Avane Srimannarayana Press Meet

    0 shares
    Share 0 Tweet 0
  • உலக மகளிர் தின கொண்டாட்டம்…!!!

    32 shares
    Share 32 Tweet 0

Recent News

வாரி வாரி பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்த பாப் நட்சத்திர பாடகி தீ (DHEE)

May 2, 2026

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் நடிக்கும் குடும்ப ஆக்ஷன் திரில்லர் ‘பிளாஸ்ட்’

May 2, 2026

‘இரண்டு வானம்’ திரைப்படத்தின் உணர்ச்சிமிகு பயணத்தை வெளிப்படுத்தும் கவித்துவமான ‘வெள்ளிச்சுடரே’ பாடல்!

May 2, 2026

பிரைம் வீடியோ தனது தமிழ் ஒரிஜினல் சஸ்பென்ஸ் டிராமா சீரிஸான ‘எக்ஸாம்’ (Exam) சீரிஸின் உலகளாவிய வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது — மே 15 முதல் ஸ்ட்ரீமாகிறது

May 2, 2026

காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே நடிக்கும் ‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!

May 2, 2026

நடிகர் சூர்யாவின் ‘கருப்பு ‘ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

May 2, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.