• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

கலகலப்பான பொலிடிகல் காமெடி கமர்ஷியல் படமான “TN 2026” வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி திரைக்கு வருகிறது!!

by Tamil2daynews
April 2, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

நடிகர்கள் ஜெயசூர்யா, பிரபுதேவா, அனுஷ்கா ஷெட்டி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கத்தனார்’ திரைப்பட டிரெய்லர் ரசிகர்களுக்கு விஷூவல் விருந்தாக வெளியாகியுள்ளது!

 

KRG Kannan Ravi Group சார்பில் கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி தயாரிப்பில், உமாபதி ராமையா இயக்கத்தில், நட்டி நாயகனாக நடிக்க, பரபரப்பான பொலிடிகல் காமெடி கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள திரைப்படம் “TN 2026”. இப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.

அரசியல் பகடி கலந்து, சமூக அக்கறை மிக்க கருத்துக்களுடன் அனைவரும் ரசிக்கும் கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகியுள்ளது.

தற்போது வெளியாகியிருக்கும் போஸ்டரில், நட்டி நடுநாயகமாக மேடையின் மீது கையை உயர்த்தி நிற்க, அருகில் முக்கிய கதாப்பாத்திரங்கள் கோஷமிட, சுற்றிலும் பெரும் கூட்டம் கொடிகள் மற்றும் பகடியான வசன பதாகைகளுடன் சூழ்ந்து நிற்கிறது. பார்த்தவுடன் ஈர்க்கும் இந்த போஸ்டர் இணையம் முழுவதும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
தம்பி ராமையா கதை எழுதியுள்ள இப்படத்தை திரைக்கதை அமைத்து இயக்கியுள்ளார் உமாபதி ராமையா. தமிழ் திரையுலகில் தரமான வெற்றிப் படங்களை தொடர்ந்து வழங்கி வரும் KRG Kannan Ravi Group சார்பில் கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி இப்படத்தை தயாரித்துள்ளனர்.

நட்டி நட்ராஜ் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில், சிருத்தா ராவ், சாந்தினி தமிழரசன், யாஷிகா ஆனந்த் நாயகிகளாக நடித்துள்ளனர். எம். எஸ். பாஸ்கர், இளவரசு, தம்பி ராமையா ஆகியோர் முதல் முறையாக இணைந்து நடித்துள்ளனர். மேலும் ரெடின் கிங்ஸ்லி, லொள்ளு சபா மாறன், பிக்பாஸ் முத்துக்குமரன், ஆதித்யா கதிர், சித்ரா லட்சுமணன், தலைவாசல் விஜய், வையாபுரி, வடிவுக்கரசி, விஜி சந்திரசேகர், ஸ்ரீஜா ரவி, இந்திரஜா ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். சாண்டி கேமியோ கதாபாத்திரத்தில் தோன்றியுள்ளார்.

இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில், வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

தொழில்நுட்பக் குழு:

திரைக்கதை & இயக்கம் – உமாபதி ராமையா
கதை – தம்பி ராமையா
இசை – தர்புகா சிவா
ஒளிப்பதிவு – பி. ஜி. முத்தையா
எடிட்டிங் – அருள் R. தங்கம்
கலை – NK ராகுல்
ஸ்டண்ட் – மகேஷ் மேத்யூ
நடனம் – சாண்டி, பிரவீன்
தயாரிப்பு மேற்பார்வை – ஶ்ரீநாத் விஸ்வநாதன்
தயாரிப்பு – கண்ணன் ரவி, தீபக் ரவி
மக்கள் தொடர்பு – AIM சதீஷ்

 

Previous Post

நடிகர்கள் ஜெயசூர்யா, பிரபுதேவா, அனுஷ்கா ஷெட்டி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கத்தனார்’ திரைப்பட டிரெய்லர் ரசிகர்களுக்கு விஷூவல் விருந்தாக வெளியாகியுள்ளது!

Next Post

லெஜெண்ட் சரவணன் நடிக்கும் ‘லீடர்’ படத்தின் இசை & ஆக்ஷ‌ன் டீசர் வெளியீடு

Next Post

லெஜெண்ட் சரவணன் நடிக்கும் 'லீடர்' படத்தின் இசை & ஆக்ஷ‌ன் டீசர் வெளியீடு

Popular News

  • சர்தார் 2 – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • இந்திய ரசிகர்களுக்கு மிகப்பிடித்த ஃபேமிலி திரில்லர் திரைப்படமான ‘த்ரிஷ்யம் தி கன்குலூஷன்’ (Drishyam The Conclusion) அக்டோபர் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • “இம்மார்டல்” வெற்றியை கொண்டாடிய தயாரிப்பாளர் – ஜிவி பிரகாஷுக்கு RX100 பைக் பரிசு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஒரு புதிய துணிச்சலான Zee 5-ஐ அறிமுகப்படுத்துகிறது: இந்தியாவின் ஸ்ட்ரீமிங் அனுபவத்தை மறுவரையறை செய்கிறது

    0 shares
    Share 0 Tweet 0
  • குரு சோமசுந்தரம் – அனுமோல் நடிக்கும் ‘பாரிஸ் கஃபே’ செப்டம்பர் 18ஆம் தேதி வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

குரு சோமசுந்தரம் – அனுமோல் நடிக்கும் ‘பாரிஸ் கஃபே’ செப்டம்பர் 18ஆம் தேதி வெளியாகிறது!

September 11, 2026

“இம்மார்டல்” வெற்றியை கொண்டாடிய தயாரிப்பாளர் – ஜிவி பிரகாஷுக்கு RX100 பைக் பரிசு!

September 11, 2026

சர்தார் 2 – விமர்சனம்

September 11, 2026

இந்திய ரசிகர்களுக்கு மிகப்பிடித்த ஃபேமிலி திரில்லர் திரைப்படமான ‘த்ரிஷ்யம் தி கன்குலூஷன்’ (Drishyam The Conclusion) அக்டோபர் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

September 11, 2026

ஒரு புதிய துணிச்சலான Zee 5-ஐ அறிமுகப்படுத்துகிறது: இந்தியாவின் ஸ்ட்ரீமிங் அனுபவத்தை மறுவரையறை செய்கிறது

September 10, 2026

‘என்ன விலை’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

September 10, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.