ADVERTISEMENT
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

அரியணையில் அமர்கிறார் உதயநிதி ஸ்டாலின்..!

by Tamil2daynews
April 24, 2022
in சினிமா செய்திகள்
0
பிரபபல திரைப்பட தயாரிப்பாளர் காலமானார்..!
0
SHARES
83
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
அரியணையில் அமர்கிறார் உதயநிதி ஸ்டாலின்..!

சென்னை: முதல்வர் ஸ்டாலின் மேற்கொள்ள இருக்கும் வெளிநாட்டு பயணத்தை முன்னிட்டு திமுக அமைச்சரவையிலும், நிர்வாகத்திலும் சில அதிரடி மாற்றங்கள் நடக்க போவதாக தகவல்கள் வந்துள்ளன.

அமெரிக்கா, லண்டன் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு செல்ல ஸ்டாலின் திட்டமிட்டிருப்பது ஏற்கனவே ஒன் இண்டியா வாசகர் அறிந்ததே ! இந்த வருடத்தின் இறுதியில் அந்த பயணம் இருக்கும் என தெரிகிறது.

முன்னதாக முதல்வர் ஸ்டாலின் அமீரகத்திற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டார். இதில் பல்வேறு நிறுவனங்களுடன் தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், செப்டம்பர் அல்லது அக்டோபரில் அடுத்த வெளிநாட்டு பயணத்தை வைத்துக்கொள்ள ஆலோசிக்கப்பட்டிருக்கிறது. இதில் இங்கிலாந்தில் முக்கியமான சில நிறுவனங்களை முதல்வர் சந்திக்க உள்ளார். இந்த பயணம் மூலம் தமிழ்நாட்டில் மேலும் முதலீடுகள் அதிகரிக்கும் என்று தகவல்கள் வந்துள்ளன. இதற்கான திட்டமிடல் இப்போதே செய்யப்பட்டு வருகின்றது.
Suited and booted: Photos of MK Stalin's UAE visit | The Times of India
இந்த பயணம் ஒரு பக்கம் இருக்க திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் நடித்து முடிக்க வேண்டிய படங்களின் படப்பிடிப்பு டிசம்பரில் முடிவதாக உள்ளது. அதனை செப்டம்பருக்குள் முடிக்க வேண்டும் என்று சம்மந்தப்பட்ட படங்களின் இயக்குநர்களுக்கு சொல்லப்பட்டிருக்கிறதாம். அதனால் உதயநிதி தொடர்பான காட்சிகளை முடிக்க வேண்டி மற்ற நடிகர்-நடிகைகளின் கால்சீட்டுகள் மாற்றியமைக்க சம்மந்தப்பட்ட நடிகர்-நடிகைகளிடம் பேசி வருகின்றனர்.
படப்பிடிப்பை சீக்கிரம் முடிக்க வேண்டும். வேறு சில பணிகள் உள்ளன என்று உதயநிதி தரப்பு தனது இயக்குனர்களுக்கு தெரிவித்து உள்ளதாம். உதயநிதியின் படப்பிடிப்பை முன்னதாக அவசரம் அவசரமாக முடிக்க வேண்டியதன் அவசியம் ஏன் என்று அறிவாலய தரப்பில் விசாரித்தபோது பல முக்கிய தகவல்களை அவர்கள் குஷியாக பகிர்ந்து கொண்டனர். ”முதலமைச்சர் ஸ்டாலின் இரண்டாவது வெளிநாடு பயணம் செல்வதற்கு முன்பு அமைச்சரவையில் மாற்றம் செய்து உதயநிதியை அமைச்சராக்கி விட்டு செல்வது என தலைவர் குடும்பம் யோசிக்கிறது.
തമിഴ്നാട് മുഖ്യമന്ത്രി എംകെ സ്റ്റാലിൻ ദുബായിയിൽ; ദക്ഷിണേന്ത്യയിൽ നിക്ഷേപം നടത്താൻ ​ഗൾഫ് രാജ്യങ്ങൾക്ക് ക്ഷണം | Tamilnadu chief minister MK Stalin visit Dubai ...
இதை  உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ அவர்கள் “தி வாரியர்” படத்தில் முதல் பாடல் வெளியீட்டு விழாவில் கூட இயக்குனர் லிங்குசாமி தங்களது நிறுவனத்தில் இந்த படத்தை வாங்கிக்கோங்க என்று சொன்னபோது இல்ல இல்ல நான் படம் பாத்துட்டு வாங்கிக்கிறேன்.

 நான் கண்டிப்பா உங்களுக்கு ஒரு படம் பண்றேன் ஆனா நான் பண்ண முடியாது என்னுடைய நிறுவனமான ரெட் ஜெயிண்ட் பண்ணலாம்.நான் இனிமேல் இருக்கிற படத்த முடிச்சனா  போதும்  என்று  பதில் சொல்லியிருப்பார்.

அமைச்சரவை மாற்றம் பல நாட்களாக கார்டில் இருக்கும் விஷயம்தான். இதை ஊடகங்களும் ஏற்கனவே சொல்லிவிட்டன. விரைவில் அந்த மாற்றம் நடக்க உள்ளது. முதல்வர் ஸ்டாலினின் வெளிநாட்டு பயணத்திற்கு முன் இந்த மாற்றம் நடக்கும் என்று அறிவாலய வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். அது ஏன் வெளிநாட்டு பயணத்திற்கு முன்பாக மாற்றம் செய்கிறார்கள் என்ற கேள்விக்கும் அறிவாலய வட்டாரத்தில் இருந்து பதில் கிடைத்துள்ளது.
Dubai trip was a success - Chief Minister MK Stalin

அதன்படி முதல்வரின் இந்த பயணத்தில் உதயநிதி இருக்க மாட்டார். அதனால் அமைச்சராக்கி நிர்வாகத்தை கவனிக்கும்படி பொறுப்புகளை உதயநிதியிடம் கொடுக்கப்படலாம்” என்கிறது அறிவாலயம் தரப்பு. வெளிநாடுகளுக்கு சென்றாலும் அங்கிருந்தபடியே நிர்வாகத்தை ஸ்டாலினால் கவனிக்க முடியும். துபாய் சென்ற போது, அங்கிருந்தே முக்கிய உத்தரவுகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.

இங்கே இருந்த சில அமைச்சர்கள், அதிகாரிகள் மூலம் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. இருந்தாலும் இந்த முறை வெளிநாடு பயணம் என்பது குறைந்தபட்சம் 10 நாட்களாவது இருக்கப் போகிறது. இந்த பயணம் கொஞ்சம் நீண்ட பயணமாக இருக்கிறது. அதனால்தான் நிர்வாகத்தை கவனிக்க ஆள் தேவை என்பதாலேயே உதயநிதி அமைச்சராக்கப்படுவார் என்கின்றனர். இதனால் விரைவில் அமைச்சரவை மாற்ற அறிவிப்பு வரலாம் என்கிறார்கள் எது எப்படியோ நாடு நலமாகவும் வளமாகவும், செல்வம் ,செழிப்பாக இருந்தால் எல்லோருக்கும் நல்லது
Previous Post

இளையராஜாவை கைப்பற்ற நினைப்பது அரசியல் சூழ்ச்சி. – பா.இரஞ்சித்

Next Post

ஆஹா ஒரிஜினல் படைப்பு ‘பயணிகள் கவனிக்கவும்’ டிரைலர் வெளியீடு

Next Post
பிரபபல திரைப்பட தயாரிப்பாளர் காலமானார்..!

ஆஹா ஒரிஜினல் படைப்பு ‘பயணிகள் கவனிக்கவும்’ டிரைலர் வெளியீடு

Popular News

  • இரண்டு பாகங்களாக தயாராகும் “பொன்னியின் செல்வன்” ..!

    0 shares
    Share 0 Tweet 0
  • பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • தென்னகத்தில் கால்பதிக்கும் Applause Entertainment நிறுவனம் சென்னையில் புதிய அலுவலக கிளையினை திறந்துள்ளது.

    0 shares
    Share 0 Tweet 0
  • “கேசினோ” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட விக்னேஷ் சிவன்..!

    0 shares
    Share 0 Tweet 0
  • “ராக்கெட்ரி” விமர்சனம்.

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“கேசினோ” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட விக்னேஷ் சிவன்..!

July 6, 2022

பொதுத்தேர்வில் வென்ற மாணவர்களுக்கு தங்க நாணயம் பரிசளித்து கவுரவித்த தளபதி விஜய் மக்கள் இயக்கம்

July 6, 2022

பன்னிக்குட்டி” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு!

July 6, 2022

தணிக்கை குழுவினரின் பாராட்டை பெற்ற ‘மெய்ப்பட செய்’! – ஜூலை 15 ஆம் தேதி வெளியாகிறது

July 5, 2022

உலக அங்கீகாரத்தின் ஆரம்பத்தில் “இரவின் நிழல்” ..!

July 5, 2022

தென்னகத்தில் கால்பதிக்கும் Applause Entertainment நிறுவனம் சென்னையில் புதிய அலுவலக கிளையினை திறந்துள்ளது.

July 5, 2022
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Tamil2daynews.com.

No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2022 Tamil2daynews.com.