• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ஆஹா ஒரிஜினல் படைப்பு ‘பயணிகள் கவனிக்கவும்’ டிரைலர் வெளியீடு

by Tamil2daynews
April 24, 2022
in சினிமா செய்திகள்
0
பிரபபல திரைப்பட தயாரிப்பாளர் காலமானார்..!
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

                                                     ஆஹா ஒரிஜினல் படைப்பு ‘பயணிகள் கவனிக்கவும்’ டிரைலர் வெளியீடு

நடிகர் விதார்த் முதன்மையான கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் ‘பயணிகள் கவனிக்கவும்’ படத்தின் முன்னோட்டம் வெளியானது. இதனை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, இயக்குநர் வெங்கட் பிரபு ஆகியோர் தங்களது இணையப்பக்கத்தில் வெளியிட்டனர்.
இயக்குநர் எஸ். பி. சக்திவேல் இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் ‘பயணிகள் கவனிக்கவும்’. இந்த திரைப்படத்தில் நடிகர் விதார்த், கருணாகரன், லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி, மாசூம் சங்கர், சரித்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எஸ். பாண்டி குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஷாம்நாத் நாக் இசை அமைத்திருக்கிறார். மலையாளத்தில் ‘விக்ருதி’ என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்ற படத்தின் தமிழ் பதிப்பான ‘பயணிகள் கவனிக்கவும்’ படத்தை ஆல் இன் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படம் ஆஹா டிஜிட்டல் தளத்தில் ஏப்ரல் 29 ஆம் தேதியன்று  வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிரப்படும் செய்தி மற்றும் புகைப்படங்கள் எம்மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை உண்மைச் சம்பவங்களின் அடிப்படையாக வைத்து இதன் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. சமூக வலைத்தளங்களை பயன்படுத்துபவர்களின் பொறுப்புணர்வு குறித்தும் இதில் விவரிக்கப்பட்டிருக்கிறது. இது போன்ற தரமான படைப்புகளைத் தொடர்ச்சியாக தேர்வு செய்து ‘ஆஹா ஒரிஜினல்ஸ்’ படைப்பாக தங்களின் பிரத்யேக பார்வையாளர்களுக்காக வெளியிடுகிறது.
ஆஹா ஒரிஜினல்ஸின் ‘பயணிகள் கவனிக்கவும்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இன்று இப்படத்தின் முன்னோட்டம் வெளியானது. சமூக வலைத்தளங்களைப் பற்றிய திரைக்கதை என்பதால் இப்படத்தை பற்றிய எதிர்பார்ப்பு இணையவாசிகளிடத்திலும், பார்வையாளர்களிடத்திலும் ஏற்பட்டிருக்கிறது. இதனிடையே திரையரங்குகளில் வெளியாகி வெற்றியைப் பெற்ற ‘செல்ஃபி’, ‘மன்மத லீலை’ போன்ற திரைப்படங்களும்,‘ஆஹா’ டிஜிட்டல் தளத்தில் வெளியாகி, பார்வையாளர்களின் பேராதரவைப் பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

அரியணையில் அமர்கிறார் உதயநிதி ஸ்டாலின்..!

Next Post

ரமலான் இப்தார் நிகழ்வில் தமிழக முதல்வர்..!

Next Post
பிரபபல திரைப்பட தயாரிப்பாளர் காலமானார்..!

ரமலான் இப்தார் நிகழ்வில் தமிழக முதல்வர்..!

Popular News

  • ‘சிக்மா’ திரைப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வு!

    0 shares
    Share 0 Tweet 0
  • கவித்துவமான காதல், கண்கவரும் காட்சிகள், ரசிக்க வைக்கும் கெமிஸ்ட்ரியுடன் மனம் வருடும் அழகிய காதல் கவிதையாக வெளியாகியுள்ளது ‘ஹைக்கூ’ திரைப்பட டீசர்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ’ஐகான் ஸ்டார்’ அல்லு அர்ஜுன் ரசிகர்கள் இந்தியா முழுவதும் 3 லட்சம் மாணவிகளிடம் HPV விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘பத்தா’ படத்தின் முதல் சிங்கிள் ‘மகளே’ – மனதை வருடும் அழகான மெலடி!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஒரு புதிய துணிச்சலான Zee 5-ஐ அறிமுகப்படுத்துகிறது: இந்தியாவின் ஸ்ட்ரீமிங் அனுபவத்தை மறுவரையறை செய்கிறது

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஒரு புதிய துணிச்சலான Zee 5-ஐ அறிமுகப்படுத்துகிறது: இந்தியாவின் ஸ்ட்ரீமிங் அனுபவத்தை மறுவரையறை செய்கிறது

September 10, 2026

‘என்ன விலை’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

September 10, 2026

நடிகரும் இயக்குநருமான ரிஷப் ஷெட்டி வெளியிட்ட ‘பிக்காசோ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

September 10, 2026

‘அன்பில் அவன்’ செப்டம்பர் 25- முதல், உலகமெங்கும் திரையரங்குகளில் !

September 10, 2026

‘சேயோன்’ திரைப்படத்தில் இணைகிறார் சீமான்!

September 10, 2026

இசைஞானி இளையராஜா இசையில் மாரி செல்வராஜின் ‘மஞ்சணத்தி’ படப்பிடிப்பு தொடங்கியது!

September 10, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.