ADVERTISEMENT
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

பாலாஜி வேணுகோபால் ‘லிவ்-இன்’ ரிலேஷன்ஷிப் கான்செப்ட்டை வர இருக்கும் தனது புதிய இணையத்தொடர் ‘பானி பூரி’

by Tamil2daynews
June 5, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

பாலாஜி வேணுகோபால் ‘லிவ்-இன்’ ரிலேஷன்ஷிப் கான்செப்ட்டை வர இருக்கும் தனது புதிய இணையத்தொடர் ‘பானி பூரி’

 

திரைப்பட இயக்குநர் பாலாஜி வேணுகோபால் ‘லிவ்-இன்’ ரிலேஷன்ஷிப் கான்செப்ட்டை வர இருக்கும் தனது புதிய இணையத்தொடரில் இதற்கு முன்பு வந்துள்ள செல்லுலாய்டு மற்றும் தொலைக்காட்சி தொடர்களை விஞ்சும் வகையில் புதிய உயரத்திற்கு எடுத்து வர உள்ளார். இந்தத் தொடருக்கு ‘பானி பூரி’  என்று பெயரிடப்பட்டுள்ளது. எட்டு எபிசோடுகள் கொண்ட இந்தத் தொடர், ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் சேர்ந்து வாழும் இரு நபர்களுக்கு இடையில் இருக்கும் லிவ்- இன் உறவு குறித்து ஆராய்வது மட்டுமல்லாமல், அவர்களுக்கு இடையில் செயற்கை நுண்ணறிவு தலையீடும் இருப்பதனால் என்ன ஆகிறது என்பது குறித்தும் இதில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பாலாஜி வேணுகோபால் உருவாக்கியுள்ள இந்தத் தொடரின் கதையில் உள்ள திருப்பங்கள் மற்றும் தங்களுடன் தொடர்பு படுத்திக் கொள்ளும் கதாபாத்திரங்கள் மூலம் குடும்பப் பார்வையாளர்களையும் வசீகரிக்கும் அனுபவமாக இது அமையும் என்று உறுதியளிக்கிறது.
‘பானி பூரி’ தொடரில் லிங்கா, சம்பிகா, இளங்கோ குமரவேல், கனிகா மற்றும் வினோத் சாகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். செயற்கை நுண்ணறிவு, குடும்ப உறவினர்கள் மற்றும் பக்கத்து வீடு காரணமாக ஒரு ஜோடி தங்கள் உறவில்  எதிர்கொள்ளும் சவால்களையும் பிரச்சினைகளையும் இந்த கதை சொல்கிறது. பாலாஜி தனது டிரேட்மார்க்கான கதை சொல்லல் முறை, நகைச்சுவையான ஒன்-லைனர் மற்றும் அனைத்து வயதுடைய பார்வையாளர்களும் தொடர்புபடுத்திக் கொள்ளும் வகையில் இந்தத் தொடரை அமைத்துள்ளார்.
‘பானி பூரி’ தொடருக்கு நவ்நீத் சுந்தர் இசையமைத்துள்ளார். பிரவீன் பாலு ஒளிப்பதிவை கையாண்டுள்ளார். இந்தத் தொடரை ஃபுல் ஹவுஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது. நம்பிக்கைக்குரிய வகையில், வளர்ந்து வந்து கொண்டிருக்கும் தமிழ் ஓடிடியான ஷார்ட்ஃபிலிக்ஸில் இது (Shortflix) ஸ்ட்ரீம் செய்யப்பட உள்ளது. வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
நடிகர்கள்
லிங்கா,
சம்பிகா,
இளங்கோ குமரவேல்,
கனிகா,
வினோத் சாகர்,
ஸ்ரீகிருஷ்ண தயாள்,
கோபால்
தொழில்நுட்பக்குழு விவரம்:
எழுத்து, இயக்கம்: பாலாஜி வேணுகோபால்,
இசையமைப்பாளர்:
நவ்நீத் சுந்தர்,
ஒளிப்பதிவு: பிரவீன் பாலு,
படத்தொகுப்பு: பி.கே,
ஒலி வடிவமைப்பு & கலவை: ராஜேஷ் முக்கத்,
தயாரிப்பு வடிவமைப்பாளர்:
சரவணன் வசந்த்,
ஆடைகள்: தீபிகாஷி,
நிர்வாக தயாரிப்பாளர்: செல்லதுரை,
கிரியேட்டிவ் தயாரிப்பாளர்:
கருப்பையா சி ராம்,
தயாரிப்பு: ஃபுல் ஹவுஸ் எண்டர்டெய்ன்மெண்ட்
Previous Post

மனோஜ் பாஜ்பாய் நடிப்பில், ZEE5 தளத்தின் ஒரிஜினல் திரைப்படமான சிர்ஃப் ஏக் பண்டா காஃபி ஹை ( Sirf Ek Bandaa Kaafi Hai) தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது !!

Next Post

உலக சுற்றுசூழல் தினம்: “கட்டிஸ் கேங்” படக்குழுவினருடன் மரக்கன்றுகள் நட்ட நடிகர் சௌந்தரராஜா

Next Post

உலக சுற்றுசூழல் தினம்: "கட்டிஸ் கேங்" படக்குழுவினருடன் மரக்கன்றுகள் நட்ட நடிகர் சௌந்தரராஜா

Popular News

  • இயக்குநர் பாலாவின் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு

    0 shares
    Share 0 Tweet 0
  • பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • திருவிழா போல நடைபெற்ற மன்சூர் அலிகானின் ‘சரக்கு’ இசை விழா..!

    0 shares
    Share 0 Tweet 0
  • நாகேஷ் எனும் மகா கலைஞன்..!

    0 shares
    Share 0 Tweet 0
  • மூன்று நண்பர்களை காதலிக்கும் நாயகியாக மேக்னா நடிக்கும் ‘நான் வேற மாதிரி’..!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

இயக்குநர் பாலாவின் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு

September 20, 2023

“சீரன்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

September 20, 2023

திருவிழா போல நடைபெற்ற மன்சூர் அலிகானின் ‘சரக்கு’ இசை விழா..!

September 20, 2023

நயன்தாரா நடிப்பில் உருவாகும் மண்ணாங்கட்டி சின்ஸ் 1960

September 20, 2023
மோகன்லால் நடிக்கும் ‘மலைக்கோட்டை வாலிபன்’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

மோகன்லால் நடிக்கும் ‘மலைக்கோட்டை வாலிபன்’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

September 18, 2023

கே.எஸ்.ரவிக்குமார் வெளியிட்ட “பூங்கா நகரம்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

September 18, 2023
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2023 Tamil2daynews.com.

No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2023 Tamil2daynews.com.

error: Content is protected !!