ரசிகர்களின் அன்பு வலையில் அருண் விஜய்..!
நடிகர் அருண் விஜய் நடிப்பில் விரைவில் வெளிவரவுள்ள “சினம்” படத்தின் வெளியீட்டை முன்னிட்டு நடிகர் அருண் விஜய் தமிழ்நாடு முழுவதும் 13 நகரங்களுக்கு 3 நாள் பயணமாக ரசிகர்களை சந்திக்க பயணித்தார். வழியெங்கும் ரசிகர்கள் தந்த வரவேற்பிலும், பேரன்பிலும் மிதந்த அருண் விஜய் பெரும் மகிழ்ச்சியில் உள்ளார்.

கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், திண்டுக்கல், மதுரை, திருச்சி, கும்பகோணம், கடலூர், பாண்டிச்சேரி, விழுப்புரம், திருவண்ணாமலை, & வேலூர் ஆகிய நகரங்களில் (ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1 & செப்டம்பர் 2, 2022) நடந்த இந்த பயணம் வெற்றிகரமாக முடிவடைந்ததது. இந்த நகரங்களில் உள்ள திரையரங்குகளுக்கு நடிகர்கள் வருகை தந்தது ரசிகர்களை பெரு மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. ஆர்பரித்த கூட்டத்தின் நடுவே ரசிகர்களிடம் அன்போடு பழகிய அருண் விஜய் குணம் அனைவரையும் கவர்ந்தது. செப்டம்பர் 16, 2022 அன்று வெளியாகும் “சினம்” திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெருமளவில் அதிகரித்துள்ளது.

