ADVERTISEMENT
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

இரண்டு பாகங்களாக தயாராகும் வெற்றி மாறனின் ‘விடுதலை’..!

by Tamil2daynews
September 4, 2022
in சினிமா செய்திகள்
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

இரண்டு பாகங்களாக தயாராகும் வெற்றி மாறனின் ‘விடுதலை’..!

 

RS Infotainment & Red Giant Movies, எல்ரெட் குமார்  & உதயநிதி ஸ்டாலின் வழங்கும்,இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில்,  Vetrimaaran directorial விஜய்சேதுபதி வாத்தியார் பாத்திரத்திலும் & சூரி முதன்மை பாத்திரத்திலும் நடிக்கும் “விடுதலை” படம் இரண்டு பாகங்களாக தயாராகிறது!!!

படத்தின் அறிவிப்பு வெளியான நொடியிலிருந்தே திரையுலகத்தினரிடமும், ரசிகர்களிடமும் பேராவலை தூண்டியிருக்கும் இயக்குநர் வெற்றி மாறனின் “விடுதலை” திரைப்படம் இரண்டு பாகங்களாக தயாராவதாக தயாரிப்பு தரப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழ் திரைப்படத்தின் தரத்தினை உலக அளவில் தூக்கிப்பிடித்த, தேசியவிருது இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் ‘விடுதலை’ படத்தில் விஜய்சேதுபதி வாத்தியார் பாத்திரத்திலும் & சூரி முதன்மை பாத்திரத்திலும் நடிக்கிறார்கள். RS Infotainment சார்பில் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் இப்படத்தினை பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக  தயாரிக்கிறார்.
சூரி நாயகன் என்பதில் ஆரம்பித்து இப்படத்தின் ஒவ்வொரு அறிவிப்பும் ரசிகர்களிடம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது. தற்போது அடுத்த அதிரடியாக இப்படத்தின் இரண்டு பாகங்களையும்  Red Giant Movies சார்பில் உதயநிதி வழங்குகிறார் என தயாரிப்பு தரப்பு அறிவித்துள்ளது. தொடர் வெற்றிப்படங்களின் பிராண்டாக மாறியிருக்கும் Red Giant Movies நிறுவனம் “விடுதலை” படத்தினை வெளியிடுவது கூடுதல் சிறப்பாக அமைந்துள்ளது.
விடுதலை- பாகம் 1 இன் படப்பிடிப்பு முழுமையாக முடிந்த நிலையில் போஸ்ட் புரடக்சன் ‌ பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விடுதலை 2 ஆம் பாகத்தில் இன்னும் சில காட்சிகள் மட்டுமே படமாக்கப்படவேண்டியுள்ளது.

தற்போது சிறுமலை மற்றும் கொடைக்கானலில் விடுதலை- பாகம் 2 படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வருகிறது.

சமீபத்தில் தமிழில் ஒரு முழுமையான திரை அனுபவம் தரும் படைப்பாக, பெரும் பட்ஜெட்டில் பிரமாண்டமாக மாறி நிற்கும் விடுதலை படம் பார்வையாளர்களிடம் பெரும் அலையை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக  சமீபத்தில்  அமைக்கப்பட்ட 10-கோடி மதிப்பிலான ரயில் மற்றும் ரயில்வே பாலத்தின் செட் இப்படத்தின் பிரமாண்டத்தை கூட்டியுள்ளது. ரயில் பெட்டிகள் மற்றும் பாலம் ஆகியவை அச்சு அசலாக தோற்றமளிக்க, பாலம் மற்றும் ரயிலின் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் அதே பொருட்களைக் கொண்டு  இந்த செட் உருவாக்கப்பட்டுள்ளது. முன்னதாக, சிறுமலையில் ஜாக்கி தலைமையிலான கலைத்துறை ஒரு  கிராமத்தினை அச்சு அசலாக உருவாக்கியது குறிப்பிடதக்கது.

தற்போது, கொடைக்கானலில் ஆக்‌ஷன் காட்சியை படமாக்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. பிரபல ஸ்டண்ட் இயக்குநர் பீட்டர் ஹெய்ன் இந்த ஆக்‌ஷன் காட்சியை அமைக்கிறார். பல்கேரியாவில் இருந்து ஏற்கனவே தமிழகம் வந்திருக்கும் திறமையான ஸ்டண்ட் டீம் இந்த ஆக்‌ஷன் ப்ளாக்கில்  பங்கேற்கிறார்கள்.

விடுதலை படத்தில் பிரமாண்டமான நட்சத்திர கூட்டணி அமைந்துள்ளது.  விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், கவுதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் ஆகியோருடன் மற்றும் பல முன்னணி  நடிகர்கள் இப்படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். விடுதலை படத்திற்கு மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.

விடுதலை பாகம் 1 & விடுதலை பாகம் 2 ஆகிய இரு  படங்களையும் Red Giant Movies உதயநிதி ஸ்டாலின் வெளியிடும் நிலையில், முதல் பாகத்தினை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடுவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
Previous Post

‘ஷூ’ திரைப்பட இசை வெளியீட்டு விழா!

Next Post

ரசிகர்களின் அன்பு வலையில் அருண் விஜய்..!

Next Post

ரசிகர்களின் அன்பு வலையில் அருண் விஜய்..!

Popular News

  • பழநி தல வரலாறு

    பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • மஞ்சக்குருவி – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • 83 வயது பி.வி.நம்பிராஜன் கதையின் நாயகனாக நடிக்கும் ” அஸ்திவாரம்”

    0 shares
    Share 0 Tweet 0
  • எனக்கு  கற்பழிப்பு மிரட்டல் – நடிகை குஷ்பூ வெளியிட்ட ஆதாரம்..! – ரசிகர்கள் அதிர்ச்சி..!

    0 shares
    Share 0 Tweet 0
  • *இது கொஞ்சம் கூட சரியில்லை … மகேஷ் பொய்யாமொழி மீது சீறும் மு.க.ஸ்டாலின்..!*

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

தலைக்கூத்தல் – விமர்சனம்

February 6, 2023

கதை நாயகனாக யோகி பாபு நடிக்கும் புதிய படம் ‘லக்கி மேன்’..!

February 6, 2023

நடிகர் சந்தானத்துக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கும் வடக்குபட்டி ராமசாமி

February 6, 2023

பாடகி வாணி ஜெயராம் மறைவு ” மலை ” படக்குழுவினர் வருத்தம்.

February 6, 2023

“கருமேகங்கள் கலைகின்றன” படத்தில் பாரதிராஜாவுடன் நடித்த தங்கர் பச்சான்.

February 6, 2023

சித்தார்த் என்ற புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு பிரசாத் லேபில் இன்று காலை 11மணிக்கு மிக எளிய முறையில் பூஜையுடன் துவங்கப்பட்டது…

February 6, 2023
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2023 Tamil2daynews.com.

No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2023 Tamil2daynews.com.

error: Content is protected !!