ADVERTISEMENT
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

இளையராஜா இசையில் ஆதிராஜன் இயக்கும் “நினைவெல்லாம் நீயடா” படத்தின் மோஷன் போஸ்டர்! இயக்குநர் கௌதம் மேனன் வெளியிட்டார்!!

by Tamil2daynews
January 19, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
இளையராஜா இசையில் ஆதிராஜன் இயக்கும் “நினைவெல்லாம் நீயடா” படத்தின் மோஷன் போஸ்டர்! இயக்குநர் கௌதம் மேனன் வெளியிட்டார்!!
இசைஞானி இளையராஜாவின் 1417 வது படமாக உருவாகி வருகிறது “நினைவெல்லாம் நீயடா”.
லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராயல் பாபு பிரமாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு, சிலந்தி, ரணதந்த்ரா, சமீபத்தில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்ட அருவா சண்ட ஆகிய படங்களை இயக்கிய ஆதிராஜன்  கதை திரைக்கதை வசனங்களை எழுதி இயக்கி வருகிறார். பிரஜன் கதாநாயகனாக நடிக்க மனிஷா யாதவ் மற்றும் சினாமிகா கதாநாயகிகளாக நடிக்கின்றனர். இளம் நாயகன் நாயகியாக ரோஹித் – யுவலட்சுமி ஜோடி நடிக்க, முக்கிய கதாப்பாத்திரங்களில் ரெட்டின் கிங்ஸ்லி, மனோபாலா, மதுமிதா,  டைரக்டர் ஆர்.வி. உதயகுமார், முத்துராமன், பி எல் தேனப்பன், ரஞ்சன் குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.
பொங்கல் திருநாளை முன்னிட்டு இந்த படத்தின் மோஷன் போஸ்டரை, இளம் ரசிகர்களின் இதயம் கவர்ந்த இயக்குநரும், தனது மாறுபட்ட நடிப்பால் முன்னணி நடிகராக உயர்ந்து வருபவருமான கௌதம் வாசுதேவன் மேனன் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
தமிழர்களை பெருமைப்படுத்திய பாரதப் பிரதமருக்கு நன்றி!! இளையராஜா பெயரில் இசைப் பல்கலைக்கழகம் வேண்டும்!! திரைப்பட இயக்குநர் ஆதிராஜன் ...
“இந்த படத்திற்காக அசத்தலான ஐந்து பாடல்களை உருவாக்கி தந்திருக்கிறார் இசைஞானி. அதில் “இதயமே …இதயமே…” என்று தொடங்கும் பாடலை இளையராஜா எழுத “யங் மேஸ்ட்ரோ’ யுவன் சங்கர் ராஜா பாடியிருக்கிறார்.  இந்த பாடல் நிச்சயமாக ரசிகர்களின் இதயங்களை கொள்ளையடிப்பது உறுதி. பழநிபாரதி, சினேகன் எழுதியிருக்கும் மற்ற பாடல்களும் ரசிகர்களின் இதயங்களில் சிம்மாசனம் போட்டு அமரும். மனசுக்குள் தோன்றிய முதல் காதல் மண்ணுக்குள் போகும் வரை மறக்காது என்ற கருத்தை மையமாக வைத்து இளமை துள்ள இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறேன். பள்ளி பருவத்து காதலை கொண்டாடிய அழகி ஆட்டோகிராப் பள்ளிக்கூடம் காதல் 96 படங்களின் வரிசையில் ‘நினைவெல்லாம் நீயடா’ படமும் நீங்கா இடம் பிடிப்பது உறுதி. விரைவில் முதல் பாடல் வெளியிடப்பட இருக்கிறது” என்று தெரிவித்தார் இயக்குனர் ஆதிராஜன்.
இந்த படத்திற்கு ராஜா பட்டாசார்ஜி ஒளிப்பதிவு செய்ய, ஆஷிஷ் ஜோசப் படத்தொகுப்பை கவனித்திருக்கிறார். முனிகிருஷ்ணன் கலை அமைக்க சண்டை காட்சிகளை பிரதீப் தினேஷ் அமைக்க, நடன காட்சிகளை தினேஷ் மற்றும் தீனா மாஸ்டர்கள் வடிவமைத்திருக்கின்றனர். தயாரிப்பு நிர்வாகம் இளங்கோ.
Previous Post

“இரண்டு படங்களின் ரிலீஸையும் உதயநிதி அழகாக கையாண்டார்” ; நன்றி தெரிவித்த ஷாம்

Next Post

விக்ரம் பிரபு – ஸ்ரீ திவ்யா நடிக்கும் ‘ரெய்டு’ ..!

Next Post

விக்ரம் பிரபு - ஸ்ரீ திவ்யா நடிக்கும் 'ரெய்டு' ..!

Popular News

  • பழந்தமிழர் மருத்துவ கண்டுபிடிப்புகள்‌ பற்றி பேசும்‌ “பெல்‌”

    0 shares
    Share 0 Tweet 0
  • பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் நாசர் ன் தம்பி ஜவஹர் விஜய் நடிக்கும் லியோ படத்தில் முக்கிய வேடம் ஏற்று நடித்து உள்ளார்.

    0 shares
    Share 0 Tweet 0
  • வெளியானது தோனி என்டெர்டெய்ன்மென்ட் எல்.ஜி.எம். செகண்ட் லுக் போஸ்டர்

    0 shares
    Share 0 Tweet 0
  • மே-30ஆம் தேதி கோவையில் பிரமாண்டமாக நடைபெறும் ‘ரெஜினா’ டீசர் வெளியீட்டு விழா

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘போர் தொழில்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

June 1, 2023

கோவையில் நடைபெற்ற ‘ரெஜினா’ டீசர் வெளியீட்டு விழாவில் கதை பற்றி வெளிப்படையாக பேசிய சுனைனா

June 1, 2023

ரேகா நடிக்கும் ‘மிரியம்மா’

June 1, 2023

‘துரிதம்’ – விமர்சனம்

June 1, 2023

பழந்தமிழர் மருத்துவ கண்டுபிடிப்புகள்‌ பற்றி பேசும்‌ “பெல்‌”

May 31, 2023

டக்கர்’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

May 31, 2023
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2023 Tamil2daynews.com.

No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2023 Tamil2daynews.com.

error: Content is protected !!