• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

கெவி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

by Tamil2daynews
February 2, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
13
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

கெவி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்  வெளியீடு

 

ஆத்யக் புரடக்சன்ஸ் சார்பில் கௌதம் சொக்கலிங்கம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘கெவி’. தமிழ் தயாளன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். மண்டேலா, பேட்டைக்காளி புகழ் ஷீலா ராஜ்குமார் மற்றும் விஜய் டிவி புகழ் ஜாக்குலின் இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.. அறிமுக நடிகர் ஆதவன் இந்த படத்தில் கதை நாயகனாக நடிக்கிறார். மெட்ராஸ் படத்தில் வில்லனாக நடித்த சார்லஸ் வினோத், தர்மதுரை புகழ் திருநங்கை ஜீவா ஆகியோர்  நடித்துள்ளனர்.
மேலும்  உமர் ஃபரூக், விவேக் மோகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்கள் மலையாளத்தில் ’வே ஃபாரர்’ என்ற படத்திலும்  நடித்துள்ளனர்.
மேற்கு தொடர்ச்சி மலை, தேன் ஆகிய படங்களுக்கு வசனம் எழுதிய ராசி தங்கதுரை இந்த படத்தின் வசனங்களை எழுதி உள்ளார்
படத்தின் ஒளிப்பதிவை ஜெகன் ஜெயசூர்யா கவனிக்க, ஏ.ஆர் ரகுமான், அனிருத் ஆகியவரின் ஆர்கெஸ்ட்ராவில் பணிபுரிந்த பாலசுப்பிரமணியன் இசையமைத்துள்ளார். படத்தொகுப்பை அஸ்வத் நாராயணன் மேற்கொள்கிறார்.
800 ஆண்டு கால தமிழக வரலாற்றில் எவ்வளவோ அரசியல் மாற்றங்கள் நடந்தாலும் மாறாத இடம் ஒன்று உள்ளது. அங்கு நடைபெற்ற உண்மை சம்பவங்களின் அடிப்படையில் இந்த படம் உருவாகி வருகிறது.
இந்த படம் பற்றி இயக்குநர் தமிழ் தயாளன் கூறும்போது, “கெவி என்பதற்கு அடிவாரம் அல்லது பள்ளம் என்று பொருள். மலை எப்போதுமே பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் அதன் இன்னொரு இருட்டு பக்கம் யாருக்கும் தெரியாது. இத்தனை ஆண்டு கால தமிழக வரலாற்றில் எத்தனையோ ஆட்சிகள் மாறி இருக்கின்றன. எத்தனையோ விஷயங்கள் மாறி உள்ளன. ஆனால்  இந்த மலைப்பகுதியில் இன்னும் மாறாத விஷயங்கள் இப்போதும் தொடர்ந்து வருகின்றன. இதை மையப்படுத்தி இந்த படம் ஒரு முக்கிய சமூக பிரச்சனையை பேசுகிறது.
ஒரு சாமானிய மனிதனின் வாழ்க்கையை அருகில் இருந்து பார்க்கும்போது எவ்வளவோ அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருப்பதை கண்கூடாக பார்க்க முடிகிறது.. அவர்களுடைய வலியை அருகில் இருக்கும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. இதை சினிமா மூலமாக வெகுஜனத்தின் பார்வைக்கு கொண்டு செல்லும்போது ஏதாவது மாற்றம் நிகழ்ந்து விடாதா என்கிற நோக்கில் தான் இந்த படத்தை உருவாக்கியுள்ளோம்.
இந்த படத்தில் மலை கிராமத்து பெண்ணாக ஷீலா ராஜ்குமாரும், படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் ஜாக்குலினும் நடித்துள்ளனர். இந்த இருவரும் சேர்ந்து பல பிரச்சனைகளை எதிர்கொண்டு ஒரு இக்கட்டான சூழலை எப்படி சமாளிக்கின்றனர் என்பதை விறுவிறுப்பு கலந்து கூறியுள்ளோம்.
இந்த படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றது. படப்பிடிப்பின்போது புயல், மழை, கடும் குளிர் என வெவ்வேறு சீதோஷ்ண பிரச்சனைகளையும் எதிர்கொண்டு படப்பிடிப்பை நடத்தி முடித்தோம். குறிப்பாக இரவு நேர படப்பிடிப்பின்போது குளிர் தாங்காமல் நடிகை ஷீலா ராஜ்குமார் மிகப்பெரிய அளவில் சிரமப்பட்டார். பனியில் அவரது கை கால்கள் விரைத்துக்கொண்டு விட,  ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு அவரை நடந்தே தூக்கிச் சென்று சிகிச்சை அளித்து குணப்படுத்தினோம். அதன்பிறகு மீண்டும் வந்து படப்பிடிப்பில் தொடர்ந்து நடித்து மிகப்பெரிய  ஒத்துழைப்பைக் கொடுத்தார்.
அதேபோல படத்தின் நாயகன் ஆதவன் இந்தப்படத்திற்காக இரண்டு வருடம் வேறு எந்த படங்களையும் ஒப்புக்கொள்ளாமல் கடுமையான அர்ப்பணிப்புடன் உழைத்தார். படப்பிடிப்பு நடக்கும் லொக்கேசன்களுக்கு முன்கூட்டியே சென்று அந்த பகுதி மக்களின் வாழ்வியல் நடைமுறைகளுடன் பழகி, அவற்றை தனது நடிப்பில் பிரதிபலித்துள்ளார். “ என்று கூறியுள்ளார்.
இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர்கள் யோகிபாபு,  கலையரசன் ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.
தொழில்நுட்பக் கலைஞர்கள் விவரம்
தயாரிப்பு ; கௌதம் சொக்கலிங்கம்
இணை தயாரிப்பு ; கார்த்திகேயன் & FJ
இயக்கம் ; தமிழ் தயாளன்
ஒளிப்பதிவு ; ஜெகன் ஜெயசூர்யா
இசை : பாலசுப்பிரமணியன்
படத்தொகுப்பு ; அஸ்வத் நாராயணன்
வசனம் ; ராசி தங்கதுரை
கலை ; சரவணன்
சண்டை பயிற்சி ; டான் அசோக்
மக்கள் தொடர்பு ; A. ஜான்
Previous Post

“குற்றம் புரிந்தால்” நீதியை கையில் எடுக்கும் ஹீரோ!

Next Post

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கிளாப் அடித்து துவக்கி வைத்த ஒய் ஜி மகேந்திரா இயக்கி நடிக்கும் ‘சாருகேசி’ திரைப்படம்

Next Post

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கிளாப் அடித்து துவக்கி வைத்த ஒய் ஜி மகேந்திரா இயக்கி நடிக்கும் 'சாருகேசி' திரைப்படம்

Popular News

  • ஆகஸ்ட் 14 ல் திரைக்கு வரும் ஃபிளாக் திரைப்படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • “உலகம் முழுவதும் உள்ள அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் விதமாக சிரிப்பும் காதலும் கலந்த திரைப்படமாக ‘மிஸ்டர் பாரத்’ உருவாகியுள்ளது”-நடிகர் பாரத்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கிறிஸ்டினா கதிர் வேலன்’ திரைப்பட இயக்குனரின் புதிய படம்: “ஸ்கார்” (SCAR)

    0 shares
    Share 0 Tweet 0
  • பிளாஸ்ட் – விமர்சனம் ரேட்டிங் – 4/5

    0 shares
    Share 0 Tweet 0
  • திரைப்பட இயக்குநராக இருந்து நடிகராக மாறிய பாலாஜி சக்திவேல், பைலட் திரைப்படமான ‘ஆஃப் தி ரெக்கார்ட்’டில் கதாநாயகனாக நடித்துள்ளார்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஆகஸ்ட் 14 ல் திரைக்கு வரும் ஃபிளாக் திரைப்படம்

July 24, 2026

“நீட் தேர்வு களத்தில் மாணவர்களுக்கு நீதி, பொறுப்பேற்றல் மற்றும் சமமான வாய்ப்பு கிடைக்க வேண்டும்”~ தீப்ஷிகா

July 24, 2026

கோலாகலமாக நடைபெற்ற ‘கான் சிட்டி’ திரைப்படத்தின் நன்றி அறிவிப்பு விழா

July 23, 2026

டாக்ஸிக்’-Toxic திரைப்படத்தின் ‘தடுமாறுதே ‘ பாடல் மூலம் ராயா மற்றும் ரெபெக்கா கதாபாத்திரத்தின் புதிய பரிமாணத்தை ‘ராக்கிங் ஸ்டார்’ யாஷ் மற்றும் தாரா சுதாரியா வெளிப்படுத்துகின்றனர்.

July 23, 2026

நயன்தாரா- கவின் இணைந்து நடித்திருக்கும் ‘ஹாய்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு

July 23, 2026

காகங்கள்’ படப்பிடிப்பு நிறைவு – யோகி பாபுவின் பிறந்தநாளுடன் இணைந்த இரட்டை மகிழ்ச்சி

July 23, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.