• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ஆர்எஸ் இன்ஃபோடெயின்மெண்ட், தயாரிப்பாளர் எல்ரெட் குமார் வழங்கும் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்சேதுபதி & சூரி நடிக்கும் ‘விடுதலை பார்ட் 1’ படத்தில் இருந்து முதல் பாடலான ‘உன்னோட நடந்தா’ வெளியாகிய குறைந்த நேரத்திலேயே 2+ மில்லியன் வியூஸ்களைப் பெற்றுள்ளது

by Tamil2daynews
February 9, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ஆர்எஸ் இன்ஃபோடெயின்மெண்ட், தயாரிப்பாளர் எல்ரெட் குமார் வழங்கும் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்சேதுபதி & சூரி நடிக்கும் ‘விடுதலை பார்ட் 1’ படத்தில் இருந்து முதல் பாடலான ‘உன்னோட நடந்தா’ வெளியாகிய குறைந்த நேரத்திலேயே 2+ மில்லியன் வியூஸ்களைப் பெற்றுள்ளது

 

மெலோடி பாடல் விரும்பிகள் இசைஞானி இளையராஜாவின் இசைமழையில் நனையும் நேரம் இது! ஆர்எஸ் இன்ஃபோடெயின்மெண்ட் எல்ரெட் குமார் தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்சேதுபதி மற்றும் சூரி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும்  ‘விடுதலை பார்ட் 1’ படத்தில் இருந்து ‘உன்னோட நடந்தா’ முதல் பாடல் வெளியாகியுள்ளது. இதன் அறிவிப்பு வந்ததில் இருந்து  பாடல் குறித்தான எதிர்பார்ப்பு அதிகம் நிலவியது. குறிப்பாக இசைஞானி இளையராஜா மற்றும் தனுஷ் இருவரின் பாடல் பதிவு செய்யும் புரோமோ வீடியோவுக்கான காட்சிகளும் இளையராஜா மற்றும் தனுஷ் இருவரின் நகைச்சுவைப் பேச்சும் என இந்த பாடலுக்கான எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகியது.
நீண்ட காலமாக மனதை மயக்கும் மெலோடி பாடலை எதிர்பார்த்து காத்திருந்த இசை ஆர்வலர்களுக்கு இந்த ‘உன்னோட நடந்தா’ பாடல் உடனடி இசை போதையாக மாறியிருக்கிறது. தனுஷின் கவர்ச்சியான குரல், பாடலாசிரியர் சுகாவின் மயக்கும் வரிகள், அனன்யா பட்டின் தேன் கலந்த குரல், வசீகரிக்கும் இசை போன்றவை இந்தப் பாடலை மேலும் பிடிக்கச் செய்திருக்கிறது.
Image
உலக அளவில் இந்தப் பாடல் வெற்றிப் பெற்றிருப்பதோடு இப்போதைய தலைமுறையும் இசைஞானியின் இசை விருந்தை கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். 2கே கிட்ஸ் மத்தியில் இசைஞானி இளையராஜாவின் இசைக்கு குறைந்த வரவேற்பு இருக்கிறது என்ற செய்தியை இந்தப் பாடலின் வெற்றி, அது பொய் செய்தி என நிரூபித்து இருக்கிறது. பாடல் வெளியாகி 24 மணி நேரத்திற்குள்ளேயே 2 மில்லியனுக்கும் அதிகமான வியூஸ்களை பெற்றுள்ளது. ’உன்னோட நடந்தா’ பாடலுக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வரவேற்பைப் பார்த்து, ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மெண்ட், தயாரிப்பாளர் எல்ரெட் குமார் மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் இருவரும் இசைஞானி இளையராஜாவை நேரில் சந்தித்து  மலர்கொத்துகளைக் கொடுத்து நன்றி தெரிவித்தனர். இப்போது வெளியாகியுள்ள இந்தப் பாடல் படத்தில் இருந்து வெளியாக இருக்கும் மற்ற பாடல்கள் மீதான எதிர்பார்ப்பையும் கூட்டியுள்ளது. அவையும் வெகுவிரைவில் வெளியாக இருக்கிறது.
‘விடுதலை பாகம் 1’ படத்தின் டப்பிங் பணிகள் சமீபத்தில் தொடங்கி, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விஜய் சேதுபதி மற்றும் சூரி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
ரெட் ஜெயண்ட் மூவிஸ் இப்படத்தை வெளியிட, ஆடியோ, ட்ரெய்லர் மற்றும் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடுவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
படத்தின் தொழில்நுட்ப குழு விவரம்:
பேனர்: ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட்,
தயாரிப்பு: எல்ரெட் குமார்,
இணை தயாரிப்பாளர்: வி.மணிகண்டன்,
வெளியீடு: ரெட் ஜெயண்ட் மூவிஸ்,
நிர்வாகத் தயாரிப்பாளர்: ஜி.மகேஷ்,
இயக்கம்: வெற்றி மாறன்,
ஒளிப்பதிவு: ஆர். வேல்ராஜ்,
படத்தொகுப்பு: ஆர்.ராமர்,
கலை: ஜாக்கி,
கதை: ஜெயமோகன்,
சண்டைப்பயிற்சி: பீட்டர் ஹெய்ன்,
பாடல் வரிகள்: சுகா & யுகபாரதி,
ஒலி வடிவமைப்பு: பிரதாப்,
ஒலிப்பதிவாளர்: டி.உதய குமார்,
தயாரிப்பு நிர்வாகி: சொக்கலிங்கம்,
ஸ்டில்ஸ்: பாஸ்கர்,
விளம்பர வடிவமைப்பு: சசி & சசி
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா & ரேகா D’One
Previous Post

இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிப்பில் அதியன் ஆதிரை இயக்கும் ‘தண்டகாரண்யம்’

Next Post

வாரிசுக்கு பிறகு நிறைய வில்லன் வேடம் வருகிறது..! – கணேஷ் வெங்கட்ராம்.

Next Post

வாரிசுக்கு பிறகு நிறைய வில்லன் வேடம் வருகிறது..! - கணேஷ் வெங்கட்ராம்.

Popular News

  • திமுக பிரமுகரின் காம லீலைகள்

    திமுக பிரமுகரின் காம லீலைகள்

    0 shares
    Share 0 Tweet 0
  • அறிமுக இயக்குனர் பெருமாள் காசி இயக்கத்தில் என்ஜாய்.

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் அஜித் குமாரின் கமர்ஷியல் பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘அமர்க்களம்’ ஏப்ரல் 24 அன்று திரையரங்குகளில் மீண்டும் வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஜமா’ புகழ் பாரி இளவழகன் – ரம்யா ரங்கநாதன் நடிக்கும் ‘அன்பே டயானா’ முதல் சிங்கிள் ‘பெரம்பூர் கானா’ வெளியானது !

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் சதீஷ் நினாசம் நடிக்கும் ‘ரைஸ் ஆஃப் அசோகா ‘ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

சென்னை ரசிகர்களை உற்சாகப்படுத்த வரும் பாடகர்கள் வேடன், அறிவு, அசல் கோலார்

April 17, 2026

ரூம்பாய் – விமர்சனம்

April 17, 2026

துல்கர் சல்மானின் “ஐ அம் கேம்” ( I Am Game ) – படப்பிடிப்பு நிறைவு, ஆகஸ்ட் 2026 உலகமெங்கும் வெளியாகிறது !!

April 17, 2026

மிஸ்டர் எக்ஸ் – விமர்சனம்

April 17, 2026

“கான் சிட்டி” முதல் சிங்கிள் வெளியீடு…, வைரலாகும் கொரியன் ஃபேமிலி சாங் “ரா ரா ரங்கையா” குத்துப்பாடல்!

April 17, 2026

சீயான் பிறந்தநாள் கொண்டாட்டமாக அறிவிக்கப்பட்ட “சீயான் 63” புதிய படம் !!

April 17, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.