• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home செய்திகள்

அநாகரிக வார்த்தைகளால் வாய்ப்பூட்டு போட முடியாது

by Tamil2daynews
September 28, 2021
in செய்திகள்
0
அநாகரிக வார்த்தைகளால் வாய்ப்பூட்டு போட முடியாது
0
SHARES
20
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
தமிழகத்தில் சமீபகாலங்களில் அரசியல்வாதிகள், சமூக விரோதிகளின் தாக்குதல்களுக்கு எளிய இலக்காகப்  பத்திரிகையாளர்கள் ஆளாகி வரும் கொடுமையான போக்கு அதிகரித்து வருகிறது. இது மிக ஆபத்தானது மட்டுமல்ல, கருத்துரிமையில் நம்பிக்கை உள்ள அத்தனை ஜனநாயக சக்திகளும் கண்டிக்க வேண்டிய மிக முக்கியமான ஒன்றாகும்.
*செய்தியாளர்களைச் சந்திக்கும் பல சந்தர்ப்பங்களில், வாய்க்கு வந்தபடி வசவுச் சொற்களைப் பண்பாடு இன்றிப் பயன்படுத்தி வருகிறார் பாஜக பிரமுகர் எச்.ராஜா. நேற்றைய தினம்  (27-09-2021 ) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த நிகழ்வில் எச்.ராஜா, செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லி இருக்கலாம் அல்லது தவிர்த்திருக்கலாம். ஆனால், நிதானம் தவறி , Presstitute – ஊடக வேசிகள் எனத் தரம் தாழ்ந்து ஏசியுள்ளார். எச்.ராஜாவின் இந்த அநாகரிகப் பேச்சை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாகக் கண்டிக்கின்றது. *
எச்.ராஜா மட்டுமல்ல வேறு சிலரும் , செய்தியாளர்கள் மற்றும் ஊடகத்துறையினர் மீது அவதூறு , நேர்மையற்ற விமர்சனங்கள், அநாகரிகச் சொற்களைப் பயன்படுத்தும் போக்கு அதிகரித்துள்ளது. இது கண்டிக்க மட்டுமல்ல தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
*எச்.ராஜா அவர்களின் இதுபோன்ற பேச்சுகளை பாஜக தலைமை கண்டுகொள்ளாமல் இருப்பது, அவர்கள் எச்.ராஜாவின் இவ்விமர்சனங்களை ஏற்கிறார்களோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது. தொடர்ந்து பொதுவெளியில் இத்தகைய ஆபாச விமர்சனங்களைச் செய்துவரும் எச்.ராஜா மீது பாஜக தலைமை நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம்.*
பத்திரிகையாளார்கள், ஊடகங்கள் விமர்சனங்களுக்கு உட்பட்டதே. ஆனால், அவை நேர்மையானதாக,  தரமானதாக இருக்கட்டும். மாறாக, அவதூறுகளால், மிரட்டல்கள், வாய்ப்பூட்டு போட நினைத்தால் அது ஒருபோதும் நடக்காது.
தொடர்ந்து ஊடகத்துறையினர் மீது தொடுக்கப்படும் இதுபோன்ற தாக்குதல்களைத் தடுத்து நிறுத்த ஊடக நிர்வாகிகள் தீர்க்கமான முடிவுகளை எடுக்க வேண்டியது மிக அவசியம்.
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.
பாரதிதமிழன்,
இணைச்செயலாளர்,
*சென்னை பத்திரிகையாளர் மன்றம்.*
28-09-2021.
Previous Post

100 பார்வையற்ற பாடகர்களுக்கு உதவித்தொகை கலப்பை P.T. செல்வகுமார் நடத்திய S.P.B நினைவஞ்சலியில் T.ராஜேந்தர் உருக்கமான பேச்சு!

Next Post

தாமதிக்கப்பட்ட நீதி… மறுக்கப்பட்ட நீதிக்குச் சமமானது!’ – செவிலியர் போராட்டத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன்   

Next Post
தாமதிக்கப்பட்ட நீதி… மறுக்கப்பட்ட நீதிக்குச் சமமானது!’ – செவிலியர் போராட்டத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன்   

தாமதிக்கப்பட்ட நீதி… மறுக்கப்பட்ட நீதிக்குச் சமமானது!' - செவிலியர் போராட்டத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன்   

Popular News

  • ‘டிமான்டி காலனி 3 – தி எண்ட் இஸ் டூ ஃபார்’ திரைப்படம் உலகம் முழுவதும் செப்டம்பர் 11, 2026 அன்று வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ கிரிக்கெட் ரசிகர்களின் உணர்வை உயிர்ப்பிக்கும்; ஜூன் 26 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

    0 shares
    Share 0 Tweet 0
  • ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் விக்ரம் பிரபுவின் 26வது படம் – யுவன் சங்கர் ராஜா இசையில் புதிய கமர்ஷியல் விருந்து!

    0 shares
    Share 0 Tweet 0
  • 18 படங்களில் நடித்தாலும் ‘லப்பர் பந்து’ தான் எனக்கு முதல் படம் போல ; நகைச்சுவை நடிகர் டிஎஸ்கே

    0 shares
    Share 0 Tweet 0
  • என் அம்மாவை திரும்பி பார்க்க வேண்டும் என்று தான் இந்த கதையை எழுதினேன்; – இயக்குனர் ஸ்ரீகார்த்திக்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

அட்டாக்கர் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது

June 25, 2026

இரண்டு மணி நேரம் குடும்பத்துடன் ஜாலியாக ரசிக்கலாம்; கான் சிட்டி அப்படிப்பட்ட படம்” – அர்ஜுன் தாஸ்

June 25, 2026

’ஹபீபி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!

June 25, 2026

‘டிமான்டி காலனி 3 – தி எண்ட் இஸ் டூ ஃபார்’ திரைப்படம் உலகம் முழுவதும் செப்டம்பர் 11, 2026 அன்று வெளியாகிறது!

June 25, 2026

குறுகிய நாட்களில் மில்லியன் பார்வையாளர்களை கடந்த விஷாலின் ‘மகுடம்’ படத்தின் லிங்கா பாடல்! – உற்சாகத்தில் ராப் பாடகர் வினோத் (V7h)

June 25, 2026

‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ கிரிக்கெட் ரசிகர்களின் உணர்வை உயிர்ப்பிக்கும்; ஜூன் 26 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

June 25, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.