முகமூடி அணிந்து மக்களை காக்கும் சூப்பர் ஹீரோ படங்கள் ஹாலிவுட்டில் மிகபிரபலம். உலகம் முழுதும் வசூலை வாரிகுவிக்கும் இந்த வகை படங்கள் இந்தியாவில் அதிகம் வருவதில்லை. அந்த குறையை போக்க வந்திருக்கிறது “ஹீரோ”திரைப்படம். தமிழில் ஒரு புதிய முயற்சியாக, பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
KJR Studios தயாரிப்பில் சிவகார்த்திகேயன், அர்ஜீன் நடிப்பில் இயக்குநர் மித்ரன் இயக்கியிருக்கும் சூப்பர்ஹீரோ படம் “ஹீரோ”. ஃபர்ஸ்ட்லுக் முதல் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தின் டிரெய்லர் வெளியீடு பத்திரிகையாளர்கள் முன்னிலையில் கோலகலமாக இன்று நடைபெற்றது. விழாவில் படக்குழுவினர் அனைவரும் பங்கு கொண்டனர்.
விழாவில் பேசிய
படத்தொகுப்பாளர் ரூபன் பேசியது..
இன்றைய விழா நாயகன் யுவன் சார் தான் அவர் கூட வேலை பாக்கறதே சந்தோஷம். ஏன்னா எடிட்டிங்கல நிறைய பாடல்கள நீளம் கருதி நான் கட் பண்ணிடுவேன். நிறைய இசையமைப்பாளர்கள் டென்சாயிடுவாங்க. ஆனா அந்த டார்ச்சர பொறுத்துகிட்டு மியூஸிக் பண்ணியிருக்கார். இந்தப்படமே ஒரு விஷன் தான் இதப் புரிஞ்சுகிட்டு பண்ணினதுக்கு சிவகார்த்திகேயனுக்கு நன்றி. ஏன்னா இந்தபடத்தில எல்லாமே கேரக்டர்கள் தான் யாரும் ஹீரோ கிடையாது அத புரிஞ்சுகிட்டு சிவா படம் பண்ணியிருக்கார். அவர் என் நண்பர் என்பதில் எப்பொதும் பெருமை. மித்ரன் ஒரு விஷன் டைரகடர்னு சொல்லலாம் அப்படி இருப்பது கஷ்டம் அந்த மாதிரி கதை சொல்லும்போது சில விசயம் மிஸ்ஸாகிடும் ஆனா அத சரியா பண்றதுல மித்ரன் கில்லாடி. இந்தப்படம் யூத்துக்கான படம் மோசமான படம் பண்ணிட்டு அத யூத்துக்கான படம்னு சொல்லல இதுல டிரிங் ஸீன்,சிகரெட் கிடையாது , வயலன்ஸ் இல்ல, நாங்க தைரியமா இத நல்ல படம்னு சொல்லுவோம். ஈகோ இல்லாம எல்லோரும் உழைச்சிருக்கோம். படம் நல்லா வந்திருக்கு எல்லோருக்கும் நன்றி.
ரோபோ சங்கர் பேசியது….
தயாரிப்பாளர் மைதா மாவு மாதிரி அவ்வளவு அழகா இருக்காரு. படம் ஆரம்பிக்கிறதுக்கு இரண்டு மாசத்துக்கு முன்னாடியே மொத்த சம்பளமும் கொடுத்துட்டாரு. அவ்வளவு நல்ல தயாரிப்பாளர். மித்ரன் ரொம்ப பிரமாண்டமான இயக்குநர். இரும்புத்திரைல எல்லோரையும் செல்போன பார்த்து பயப்பட வச்சார். இப்ப வேற ஒரு பெரிய மேட்டர் தொட்டிருக்கார். சென்சார் போர்டையே கலங்கடிப்பவர். இன்னொரு தம்பி சிவகார்த்திகேயன் ஆரம்பத்துல என்னிடம் எப்படி பழகினாரோ அப்படியே இப்ப வரைக்கும் இருப்பவர் என்னிடம் மட்டுமல்ல எல்லோரிடமும் அப்படிதான். அன்பான மனிதர். யுவன் சார் பின்னணி இசைக்கே பிறந்தவர் மாதிரி இசையமைச்சிருக்கார். இரும்புத்திரை மாதிரி பன்மடங்கு வெற்றி தரும் படமா இந்தப்படம் இருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.
நடன அமைப்பாளர் சதீஷ் பேசியது…
இந்தப்படத்தில் வேலை பார்த்தது சந்தோஷமா இருக்கு. சிவகார்த்திகேயன் கூட வேலை பாக்குற முதல் படம். மித்ரன் யுவன் சார் இருக்குற படம் இந்தப்படத்தில் நானும் இருக்குறது சந்தோஷம். படம் கொஞ்சம் பெருசா இருந்தா முதல்ல பாட்ட தான் தூக்குவேனு டைரக்டர் சொல்வார். இப்பக்கூட பாட்ட முழுசா தான் வச்சிருக்காரானு சந்தேகமா இருக்கு. இந்தபடத்தில் பாடல்களுக்கு கொஞ்ச டைம் தான் கொடுத்தாங்க ஆனா கஷ்டப்பட்டு எடுத்திருக்கோம். படம் நல்லா வந்திருக்கு பாடல் இருக்கனும்னு எனக்காக எல்லோரும் வேண்டிக்கோங்க நன்றி.
நாயகி கல்யாணி ப்ரியதர்ஷன் பேசியது…
இந்தப்படம் சூப்பர் ஹீரோ படம்னு தெரியும். உங்களுக்கு தெரியாத விசயம் இந்தபடத்துக்கு பின்னாடி நாலு ஹீரோ இருக்காங்க. மித்ரன் சார் உங்க கதைகள் நிங்க பண்ற விதம் கிரேட் என்ன நடிக்க வச்சதுக்கு உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது. சினிமால ஜெயிக்கிறது மட்டும் பத்தாது. எந்த நேரத்தில எந்த புராஜக்ட்ல யார் கூட வேலை பார்க்கிறோம்கிறதும் முக்கியம். நான் சிவா ஃபேன் அவர நீங்க இதுல வித்தியாசமா பார்க்கலாம் அவர் கூட வேலை பார்த்ததுல நான் சிரிச்சுகிட்டே இருந்தேன். என்ன சந்தோஷமா வச்சிருந்தார். அவருக்கு நன்றி. யுவன் சார் அவரோட பின்னணி இசை பிரமாதம். ஜார்ஜ் வில்லியம்ஸ் சார் அவரோட கேமரா கண்களால என்ன அழகா காட்டியிருக்கார். எல்லோருக்கும் ஒரு வேண்டுகோள் இந்தப்படத்த எல்லோரும் தியேட்டர்ல பாருங்க, இது தியேட்டர்ல பார்க்க வேண்டிய படம் நன்றி.
இயக்குநர் மித்ரன் பேசியதாவது..
இந்தப்படம் உருவாக முக்கிய காரணம் என் நண்பர்கள் தான். ரூபன், ஜார்ஜ். நம்ம தட்டிக்கொடுக்குற ஆட்கள் மட்டுமல்ல, நாம தலைகால் புரியாம ஆடும்போது நம்மள கொட்டி நல்ல வழிக்கு திருப்பி விடுறவங்களும் நல்ல நண்பர்கள் தான். அந்த மாதிரியானவர்கள் தான் ரூபனும் ஜார்ஜும் அவங்களாலதான் இந்தபடமே. அவங்களுக்கு நன்றி. சிவா கூட 10 வருஷம் முன்னாடி ஒரு குறும்படம் வேலை பார்த்திருக்கேன் இப்ப இவ்வளவு பெரிய படம் பண்ணுவோம்னு நினைச்சு கூட பார்க்கல. நாங்க படம் பண்ணலாம்னு முடிவு பண்ணிணப்போ ரெண்டு பேருக்கும் வேறு வேறு ஐடியா இருந்தது. ஆனா இந்தப்படம் உருவாகிடுச்சு. இந்தப்படம் இவ்வளவு பிரமாண்டமா உருவாக எந்த தடங்கலும் இல்லாம உருவாக தயாரிப்பாளர் ராஜேஷ் தான் காரணம் அவர் வச்ச நம்பிக்கை தான் இந்தப்படம். யுவன் சாருக்கு நான் பெரிய ஃபேன் அவர் படம் முடியும் போது எனக்கு திருப்தி தந்த படம்னு சொன்னார் அது எனக்கு மிகப்பெரிய சந்தோஷம் தந்த்தது. அர்ஜீன் சார் அவரே கேட்டு தான் இந்தப்படத்துக்குள் வந்தார் அவருக்கு நன்றி. உழைச்சதுக்கு பலன் கண்டிப்பா கிடைக்கும் கண்டிப்பா எல்லோருக்கும் படம் பிடிக்கும் நன்றி.
தயாரிப்பாளர் கொட்டாப்பாடி ராஜேஷ் பேசியது…
இன்னொருத்தரோட கனவ நான் நிறைவேத்தியிருக்கேன் அவ்வளவு தான். இந்தப்படத்தில் எல்லோரும் கடுமையா உழைச்சிருக்காங்க, அபய் தான் வில்லன்னு நினைச்சேன் ஆனா ஊர் முழுக்க வில்லன்கள் இருக்காங்க. தல அஜித்துக்கு விஸ்வாசம் எப்படி தந்தோமோ அதே மாதிரி இந்தப்படம் சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய ஹிட்டா இருக்கும். மித்ரன் தமிழ்நாட்டின் இன்னொரு ஷங்கர். பெரிய ஆளா வருவார் வந்திருந்த எல்லோருக்கும் நன்றி.
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பேசியது…
இப்ப ஒரு ஹீரோ தேவை. நம்ம சமுதாயத்துக்கு ஒரு ஹீரோ தேவை அதை சரியா இந்தப்படம் சொல்லிருக்கு. நிறைய படம் ரீ ரெக்கார்டிங் பண்ணிருக்கேன் ஆனா இந்தப்படத்தில் 18 நிமிஷம் ஒரு ஸ்கோர் பண்ணிருக்கேன் இந்தியால இதுவரைக்கும் யாரும் பண்ணிருக்காங்களானு தெரியல. எனக்கு அந்த வாய்ப்பு மித்ரன் தந்திருக்கார். எனக்கு சமீபத்தில் மிகத்திருப்தி தந்த படம் “ஹீரோ” படம். டிரெய்லர் படம் எப்படி இருக்கும்னு சொல்லிருக்கும் படம் பாருங்க எல்லோருக்கும் நன்றி.
சிவகார்த்திகேயன் பேசியது…
10 வருஷம் முன்னாடியே மித்ரன் தெரியும். கேமராமேன் ஜார்ஜ் தான் அறிமுகப்படுத்தினார். அந்த டீமே ஒரு சூப்பரான டீம். இரும்புத்திரைக்கு முன்னாடியே இந்தப்படம் பண்ண முடிவு பண்ணிட்டோம். இந்தப்படம்
நடந்ததற்கும் ஜார்ஜ் தான் காரணம். இந்தபடத்துக்கு பின்னாடி ஜார்ஜ்ஜோட ஃபேனா ஆகிட்டேன் அலட்டிக்காம அவ்வளவு அழகா பண்ணிடுறாரு. எனக்கு ரெமோ பட டிரெய்லர் பிடிக்கும் கனாவும் பிடிக்கும் நிறைய டிரெய்லர் நாம பார்த்திருக்கோம் நமக்கு அந்த மாதிரி டிரெய்லர் அமையறது பெரிய விசயம் இந்த டிரெயலர்ல என் முகம் தெரியுதானு தான் முதல்ல கேட்டேன். டீஸர்ல என் முகத்தையே காட்டல. டிரெய்லர்ல காட்டிட்டாங்க. இப்ப இப்படியான பிரமாண்ட முயற்சிகள் நடக்க ஷங்கர் சாரும் முக்கியம் அவர் போட்ட விதைதான் இது. இந்தபடத்தில் எல்லோருமே ரொம்பவும் கஷ்டப்பட்டுருக்காங்க. அர்ஜீன் சார் நான் திரையில் பார்த்து ரசிச்ச் நடிகர்களோடலாம் நான் நடிக்கிறது எனக்கு கிடைச்ச வரம். அர்ஜீன் சார் கூட நடிக்கும்போது நிறைய நடிக்க கத்துகிட்டேன். அது எனக்கு நடிக்கும்போது நிறைய உதவியா இருந்தது. மித்ரன் அவஙக டீமே பரபரனு உழைச்சிருக்காங்க வாழ்த்துக்கள். என்ன இந்தபடத்தில பெண்டு நிமித்தினுது டான்ஸ் மாஸ்டர் சதீஷ் தான். யுவனோட இசைக்கு என்ன படுத்தி எடுத்துட்டார். இந்தப்படத்துக்கு ரைட்டர்ஸா வேலை பார்த்தவங்களுக்கு நன்றி. அவங்களும் சீக்கிரம் படம் பண்ணுவாங்க. என்னோட தயாரிப்பாளர் லைஃப்ல என்ன கஷ்டம் வந்தாலும் சந்திக்கலாம்னு நிக்கிறவர். அவரோட அடுத்த படமும் இணைந்து பண்றேன். படத்த அழகா புரமோட் பண்றார். உங்களுக்கு இந்தப்படம் பிடிக்கும், பிடிக்கும் பட்சத்தில் “ஹீரோ” இரண்டாம் பாகமும் வரும். யுவன் சார் உங்களுக்கு நிகர் இங்கு யாரும் இல்ல. இந்தப்படத்தில் பின்னணி இசை கலக்கியிருக்கிறார். உங்களுடன் வேலை பார்த்தது எனக்கு பெருமை. எல்லோரும் உங்க திறமைய நம்புங்க நீங்களும் ஹீரோவா மாறலாம். படம் பாருங்க எல்லோருக்கும் பிடிக்கும் நன்றி
தொழில் நுட்ப கலைஞரகள் விபரம்
தயாரிப்பு – கோட்டப்பாடி ராஜேஷ்
இயக்கம் – P S மித்ரன்
இசை – யுவன் சங்கர் ராஜா
ஒளிப்பதிவு – ஜார்ஜ் C. வில்லியம்ஸ்
படத்தொகுப்பு – ரூபன்
கலை – செல்வகுமார்
சண்டைப்பயிற்சி – திலீப் சுப்பராயன்
ஒலி வடிவமைப்பு – தபஸ் நாயக்
வசனம் – M R பொன் பார்த்திபன், அந்தோணி பாக்கியராஜ், சவரிமுத்து
பாடல்கள் – பா விஜய், ரோகேஷ்
நடனம் – ராஜு சுந்தரம்
ஆடை வடிவமைப்பு – பல்லவி சிங்
புகைப்படம் – ஆன்ந்த் G
ஒப்பனை – கணபதி
உடைகள் – பெருமாள் செல்வம்
நிர்வாக தயாரிப்பு – ஏழுமலையான்
தயாரிப்பு மேற்பார்வை – கணேஷ் P.S