• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

மறுபிறந்தாள்” ( அவளது மறுபிறப்பு ) யுவன் சங்கர் ராஜா U1 Records அறிமுகப்படுத்தும் அடுத்த இசை ஆல்பம் ! 

by Tamil2daynews
December 14, 2019
in சினிமா செய்திகள்
0
மறுபிறந்தாள்” ( அவளது மறுபிறப்பு ) யுவன் சங்கர் ராஜா U1 Records அறிமுகப்படுத்தும் அடுத்த இசை ஆல்பம் ! 
0
SHARES
39
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

யுவன் சங்கர் ராஜாவின் U1 Records நிறுவனம் தொடர்ச்சியாக புதிய இசையை, புத்தம் புது திறமைகளை அறிமுகப்படுத்துவதில் முன்னணியில் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் சமீபத்திய அறிமுகம் தான் ஷஹானி ஹஃபீஸ்ன் “மறுபிறந்தாள்” ( அவளது மறுபிறப்பு ). யெல்தோ P ஜான் இசையில் ருக்‌ஷீனா முஸ்தபா வரிகளில் அம்மா, மகள் கூட்டணியான Dr ஷஹானி ஹஃபீஸ்,ரெஹயா ஃபாத்திமா பாடியுள்ள வீடியோ பாடலே “மறுபிறந்தாள்”.  Dr ஷஹானி ஹஃபீஸ் இந்த இசை ஆல்பத்தின் திரைவடிவத்தின் கருவை உருவாக்கி,  தயாரித்துள்ளார். மேலும் ஆதர்ஷ் N கிருஷ்ணாவுடன் இந்த இசை ஆலபத்தை இயக்கியுள்ளார் Dr ஷஹானி ஹஃபீஸ்.

பிரபல மேக்கப் ஆர்டிஸ்ட், சமூக செயற்பாட்டாளர், மேடை நாடக கலைஞர், திருநங்கை ரெஞ்சு ரெஞ்சிமார், ரோஸ் ஷெரீன் அன்சாரியுடன் இணைந்து நடித்திருக்கும் இந்த ஆல்பம் பாடல், திருநங்கை தாயுக்கும் அவரது வளர்ப்பு மகளுக்கும் உள்ள உறவை மையப்படுத்தி உருவாகியுள்ளது. ஆணாதிக்கம் மாறாத இவ்வுலக சமுதாயத்தில் அனைத்து குற்றங்களுக்கும் குற்றவாளியாக பெண்ணையே கை காட்டுகிறது. பெண்ணின் ஒழுக்கம் காக்க சொல்லும் சமுதாயம்  அவளை அடக்குவதிலேயே தான்  அதிக ஆர்வம் கொண்டிருக்கிறது. ஆனால் இங்கு மாற வேண்டியது சமுதாயமே. பெண்ணிற்கான உரிமையை அளிப்பதான சமூகமாக,   நாம் அனைவரும் இணைந்தே இந்த சமுதாயத்தை  உருவாக்க வேண்டும் எனும்  கருத்தை தான் இந்த பாடல் சொல்கிறது.

Link : https://youtu.be/A6NNARFewFs

 

இந்த ஆல்பம் பாடலுக்கு அபி ரெஜி ஒளிப்பதிவை கையாள ப்ரேம்சாய் முகுந்தன் படத்தொகுப்பு செய்துள்ளார்.

இந்த ஆல்பம் பாடலை உருவாக்கிய  Dr ஷஹானி ஹஃபீஸ் ஒரு ஆயூர்வேத நிபுணர். கேராளாவில் இயங்கி வ்ரும் ஆயூர்வேத மருந்துகள் தயாரிக்கும் Ayurveda Naturals நிறுவனத்தை நிறுவியவர். இது தவிர கேரளாவை தலைமையிடமாக கொண்டு வரும்  Ayurveda Media company ன் நிறுவனராகவும் நிர்வாக பங்குதாரராகவும் உள்ளார். கவிதைகள், இலக்கியம், இசை மீது அதீத ஆர்வம் கொண்டு தன்னை அவ்வுலகில் இணைத்துகொண்டுள்ளார். தற்போது சமூக நல நோக்குடன் கூடிய கருத்தை மையமாக கொண்டு ஒரு குறும்படம் இயக்கி வருகிறார்.

மறுபிறந்தாள் ( அவளது மறுபிறப்பு ) உலகம் முழுதும் திரைவிழாக்களில் பாராட்டுக்களை குவித்து வருகிறது.
சிறந்த வீடியோ பாடல் விருதை International Thai Film Festival, Bangkok ல் பெற்றுள்ளது.  (இந்தியாவிலிருந்து அதிகாரபூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே மியூசிகல் வீடியோ என்பது குறிப்பிடதக்கது ), Calcutta International Cult Film Festival ( Entry for Golden Fox Awards), Buddha International Film Festival – Pune, Festigious International Film Festival, Los Angeles, ( Bronze medalist) Global Music Awards, California, Semi Finalist to Rome Prisma Awards – Italy.  ஆகிய இடங்களில் கலந்து கொண்டுள்ளது. மேலும் இந்தியாவில் International Documentary & Short Film Festival of Kerala, AAB International Film Festival, Punjab, LGBTQ Shorts Film Festival – United States, International Short Film Festival of Pune, Chambal International Film Festival, Rajasthan and Jaipur International Film Festival 2020 ஆகிய இந்திய திரைவிழாக்களுக்கும் இந்த வீடியோ பாடல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

Tags: Maru PiranthnaalYUvan Shankar Raja
Previous Post

“ஹீரோ” டிரெய்லர் வெளியீடு ! 

Next Post

Alli Press Meet and Movie Stills

Next Post
Alli Press Meet and Movie Stills

Alli Press Meet and Movie Stills

Popular News

  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகை சிம்ரனின் நெகிழ்ச்சியான மனிதநேய செயல் – மாற்றுத்திறனாளி சிறுமியின் கனவை நனவாக்கிய மறக்க முடியாத தருணம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே காம்போவின் ‘ஸ்ரீ ஸ்ரீ’ அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி – ஆர்யா இணைந்து வெளியிட்ட நடிகை ப்ரியா பவானி சங்கரின் ‘ஹாட் ஸ்பாட் 2 மச்’ படத்தின் முன்னோட்டம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘மூன்வாக்’ மூலம் நடிகராக அறிமுகமாகும் ஏ.ஆர். ரஹ்மான்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்பட டிரெய்லர்: நோவா சென்டினியோ, ஜேசன் மோமோவா மற்றும் வித்யுத் ஜமால் இணையும் அதிரடி ஆக்‌ஷன்!

July 31, 2026

நடிகை சிம்ரனின் நெகிழ்ச்சியான மனிதநேய செயல் – மாற்றுத்திறனாளி சிறுமியின் கனவை நனவாக்கிய மறக்க முடியாத தருணம்!

July 31, 2026

ஏழு மாநிலங்களை சேர்ந்த 1000 ரசிகர்களுடன் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக நேரம் செலவிட்டு மகிழ்ந்த நடிகர் அல்லு அர்ஜுன்!

July 31, 2026

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது!

July 31, 2026
நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் ஐந்து இந்திய மொழிகளில் உலகளவில் வெளியீடு!

நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் ஐந்து இந்திய மொழிகளில் உலகளவில் வெளியீடு!

July 31, 2026

பிரைம் வீடியோ, ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ சீரிஸிலிருந்து துள்ளலான புதிய ‘தெய்வா’ பாடலை வெளியிட்டது !

July 31, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.