‘சூப்பர் ஸ்டார்’ வெளியிட்ட ‘காவி ஆவி நடுவுல தேவி’..!
இன்றைக்கு தமிழ் சினிமாவில் இருக்கிற இயக்குனர்கள் மத்தியில அன்றைய காலகட்டத்தில் இருந்த இயக்குனர்கள் ஒரு நேர்கோட்டாக படத்தை இயக்குவதிலும் ஒரு தரமான திரைக்கதையுடன் ஒரு படத்தை தருவதிலும் கவனமாக இருந்துள்ளனர்.
அப்படிப்பட்ட அந்த காலகட்டத்தில் இருந்த ஒரு சில இயக்குனர்கள்ல மிகவும் முக்கியமா கவனிக்கப்பட வேண்டிய ஒரு வசனகர்த்தாவும், இயக்குனருமான திரு வி சி குகநாதன் அவர்கள்.
எழுச்சி இயக்குனர் என்று அனைவராலும் போற்றப்பட்டவர் தான் இந்த வி.சி.குகநாதன் அவரின் எழுத்தில் உருவாகி உள்ள ” காவி ஆவி நடுவுல தேவி” திரைப்படத்தின் டிரெய்லரை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள், ” இன்ட்ரஸ்டிங் வெரி இன்ட்ரஸ்டிங்” என்று பாராட்டு தெரிவித்து வெளியிட்டார்.
ரஜினிகாந்த் அருகில் வி.சி.குகநாதன், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.இராமசாமி என்கிற முரளி இராமநாராயணன், பிலிம்சேம்பர் மற்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் என். விஜயமுரளி எடிட்டர் மார்ட்டின் ஆகியோர் உள்ளனர்.