• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் ‘காளிதாஸ் 2’ – தமிழ் சினிமாவுக்கு மேலும் ஒரு பெருமை !

by Tamil2daynews
July 1, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் ‘காளிதாஸ் 2’ – தமிழ் சினிமாவுக்கு மேலும் ஒரு பெருமை !

தமிழ் சினிமாவின் தரமான திரில்லர் படைப்புகளில் ஒன்றாகப் பாராட்டப்பட்ட ‘காளிதாஸ்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து உருவான ‘காளிதாஸ் 2’, தற்போது சர்வதேச அளவில் மேலும் ஒரு முக்கிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய திரைப்பட விழாவாக  கருதப்படும் 28-வது ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழா (Shanghai International Film Festival – SIFF 2026)-வில் திரையிடப்பட்ட ஏழு இந்திய திரைப்படங்களில் ஒன்றாக ‘காளிதாஸ் 2’ தேர்வாகியுள்ளது.

சீனாவின் ஷாங்காயில் ஜூன் 12 முதல் 21 வரை நடைபெற்ற இந்த திரைப்பட விழாவின் சிறப்பு திரையிடல்கள் ஜூன் 28 வரை நகரின் பல்வேறு திரையரங்குகளில் நடைபெற்றன. உலகம் முழுவதிலிருந்தும் திரைப்பட இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், விமர்சகர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்கள் பங்கேற்கும் இந்த விழாவில், இந்தியாவிலிருந்து சாதனை அளவில் ஏழு திரைப்படங்கள் திரையிடப்பட்டன. அவற்றில்  தென்னிந்தியாவிலிருந்து ஒரே ஒரு திரைப்படமாக ‘காளிதாஸ் 2’ இடம்பெற்றிருப்பது, படக்குழுவிற்கும் தமிழ்த் திரைப்பட உலகிற்கும் பெருமை சேர்த்துள்ளது.

காளிதாஸ் திரைப்படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகத்தை ஸ்ரீ செந்தில் இயக்கியுள்ளார். பரத் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில், அஜய் கார்த்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், சங்கீதா, பவானி ஸ்ரீ, அபர்ணிதி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். சுரேஷ் பாலா ஒளிப்பதிவு செய்துள்ள நிலையில், புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பை கவனித்துள்ளார். மேலும் அரவிந்த் ஆனந்த் கூடுதல் திரைக்கதை எழுதியுள்ளார்.

இந்த திரைப்படத்தை ஸ்கை பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் விநியோகஸ்தரும் தயாரிப்பாளருமான ஃபைவ் ஸ்டார் செந்தில் மற்றும் டாக்டர் என். யோகேஸ்வரன் இணைந்து தயாரித்துள்ளனர். ‘காளிதாஸ் 2’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் பெரும்  பாராட்டைப் பெற்றது.

தற்போது சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டிருப்பது, ‘காளிதாஸ் 2’ திரைப்படத்தின் கலைத்திறன் மற்றும் தொழில்நுட்ப தரத்திற்கு கிடைத்த முக்கிய அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது. உலக திரைப்பட ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள இந்த சாதனை, தமிழ்ச் சினிமாவின் உலகளாவிய பயணத்தில் மேலும் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.

Previous Post

விஷன் சினிமா ஹவுஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் டப்பிங் பணியை தொடங்கிய நடிகர் ஏகன்!

Next Post

மைத்ரி மூவி மேக்கர்ஸின் ‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழுவீச்சில் தொடங்கியது!

Next Post

மைத்ரி மூவி மேக்கர்ஸின் 'மொத ராத்திரி' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழுவீச்சில் தொடங்கியது!

Popular News

  • ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழா! ஓவியர் ஜீவானந்தனுக்கு ரூ. 1 லட்சம் விருது, மாணவர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு ரூ. 13.78 லட்சம் நிதியுதவி!

    0 shares
    Share 0 Tweet 0
  • சுஹாஸ் (Suhas) நடிக்கும் ‘ஹைட் & சில்க்’ (‘Hide & Silk’ ) படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஃபேண்டஸி உலகத்துக்குள் அழைத்துச் செல்லும் ‘டிரோன்ஸ்’ டிரெய்லர் வெளியானது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ZEE தமிழின் weekend-ஐ கலக்க வருது ‘சரிகமப’ & ‘மாஸ் பசங்க Vs கிளாஸ் பொண்ணுங்க’!

    0 shares
    Share 0 Tweet 0
  • சென்னையில் ‘தி புட்டு – Dhe Puttu’ உணவகத்தின் கிளையை தொடங்கிய நடிகர் திலீப் – காவ்யா மாதவன் தம்பதிகள்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ஹைக்கூ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

October 12, 2026

கற்பனை உலகில் புதிய அனுபவம் தரும் ‘டிரோன்ஸ்’ – பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

October 12, 2026
‘சிக்னல் அட் 11:30’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை புஜிதா பொன்னாடா!

‘சிக்னல் அட் 11:30’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை புஜிதா பொன்னாடா!

October 12, 2026

‘ராமாயணா’ திரைப்படத்தின் முதல் பாகம் நவம்பர் 5 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது!

October 12, 2026

ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழா! ஓவியர் ஜீவானந்தனுக்கு ரூ. 1 லட்சம் விருது, மாணவர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு ரூ. 13.78 லட்சம் நிதியுதவி!

October 12, 2026

சிலம்பரசன் TR வெளியிட்ட ‘டெலிவரி பாய்’ டிரைலர்… காதல், ஆக்ஷன், காமெடி என கமர்ஷியல் அம்சங்களுடன் கவனம் ஈர்க்கும் லியோ சிவக்குமாரின் புதிய படம்!

October 12, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.