• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

நான் கடவுள் இல்லை! S.A.சந்திரசேகருடன் முதல் முறையாக கைகோர்க்கும் சமுத்திரகனி !

by Tamil2daynews
January 23, 2021
in சினிமா செய்திகள்
0
நான் கடவுள் இல்லை! S.A.சந்திரசேகருடன் முதல் முறையாக கைகோர்க்கும் சமுத்திரகனி !
0
SHARES
39
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
நீதிக்கு தண்டனை, சாட்சி, சட்டம் ஒரு இருட்டறை, நான் சிகப்பு மனிதன் என சமூக சீர்கேடுகளை தன் எழுத்தின் மூலம் திரைப்படங்களில் துணிச்சலாக பிரதிபலித்த புரட்சி இயக்குநர் S.A.சந்திரசேகரன் மீண்டும் தனது புரட்சிகரமான கருத்துகளுடன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் திரைப்படம் “நான் கடவுள் இல்லை” . இதில் சமுத்திரகனி CB CID அதிகாரியாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக வாகை சூடவா, மௌனகுரு படத்தில் நடித்த நாயகி இனியா நடிக்க மற்றும் ஒரு துணிச்சல் மிக்க பெண் போலீஸ் அதிகாரியாக பிக்பாஸ் புகழ் சாக்க்ஷி அகர்வால் நடிக்கிறார். வில்லனாக மிகவும் மிரட்டலான கதாபாத்திரத்தில் பருத்திவீரன் சரவணன் நடிக்கிறார்.
ஓய்வு பெற்ற வழக்கறிஞராக S.A.சந்திரசேகரரும், அழுத்தமான அர்த்தமுள்ள கதாபாத்திரத்தில் நடிகை ரோகிணியும், ராணுவ அதிகாரி கதாபாத்திரத்தில் மயில்சாமியின் இரண்டாவது மகன் யுவனும்  கதையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்லும் முக்கிய கதாபாத்திரத்தில் துணிச்சல் மிக்க இளைஞனாக அபி சரவணனும் அவருக்கு ஜோடியாக இளம் நாயகியாக அறிமுகமாகிறார்  ப்ரியங்கா. சமுத்திரகனியின் தாயாக மதுரையை சேர்ந்த மாயக்கா நடிக்கிறார். சமுத்திரகனியின் மகள்களாக டயாணா ஸ்ரீ மற்றும் ஷாஷாவும் நடித்திருக்கிறார்கள், இவர்களின் கதாபாத்திரங்கள் பலர் மனதில் நீங்காமல் இடம் பிடிக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் நகைக்சுவை கதாபாத்திரத்தில் இமான் அண்ணாச்சியும், ‘சூப்பர் ஜீ’ புகழ் முருகானந்தமும் நடிக்கிறார்கள்.
மகேஷ் கே.தேவ் ஒளிப்பதிவு செய்ய, “இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா” படத்தின் புகழ் சித்தார்த் விபின் இசையமைக்க, படத்தொகுப்பை பிரபாகரனும், கலையை வனராஜூம் கவனிக்கிறார்கள்.
“நான் கடவுள் இல்லை” படத்தை பற்றி இயக்குநர் S.A.சந்திரசேகரன் கூறியதாவது:  “குழந்தைகளை மையமாக வைத்து நான் இயக்கிய
ஒரு குறும்படத்தை தற்செயலாக சமுத்திரகனி பார்த்தார். பார்த்துவிட்டு குறும்படத்தை பற்றி நெகிழ்ந்து பேசி பாராட்டினார். இதை பெரும் படமாக இயக்கும் எண்ணம் இருந்தால் தான் நடிப்பதாக தன் விருப்பத்தை தெரிவித்து இக்குறும்படத்தை பெரும்படமாக இயக்கும் எண்ணத்தை என்னூள் வித்திட்டார். சில நாட்களில் முழு நீள க்ரைம் த்ரில்லர் கதையாக மாற்றி அவரிடம் விரிவாக சொன்னேன், கதையை கேட்டவர் “சார் எத்தனை நாள் என்னுடைய டேட் வேண்டுமென்று” கேட்டதோடு இல்லாமல் தனது தமிழ், தெலுங்கு என தொடர் படப்பிடிப்புக்கு மத்தியில் இரவு பகல் பாராது ஒரே மூச்சில் இந்த படித்தில் நடித்துக்கொடுத்தார்” என்றார்.
மேலும் இத்திரைப்படம் சமுத்திரகனி அவர்களுக்கு வித்தியாசமான படமாக அமையும் என்றும் கூறினார். மேலும் அவரை ஒரு நடிகராக மட்டுமில்லாமல், அவருக்குள் இருக்கின்ற மனிதநேயமும் சமூக அக்கரையும் பாராட்டப்பட வேண்டியது என்றார்.
இதன் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்து இறுதிக்கட்டப்பணிகள் நடந்துக்கொண்டிருக்கிறது.
Previous Post

இயக்குனர் பா.இரஞ்சித்துடன் கைகோர்க்கும் யோகிபாபு.

Next Post

தெருக்கோடியில் பிறந்து நாகரீக வாழ்க்கைக்கு ஏங்கும்                          ஒருவனின் கதை “ முன்னா “       

Next Post
தெருக்கோடியில் பிறந்து நாகரீக வாழ்க்கைக்கு ஏங்கும்                           ஒருவனின் கதை “ முன்னா “       

தெருக்கோடியில் பிறந்து நாகரீக வாழ்க்கைக்கு ஏங்கும்                          ஒருவனின் கதை “ முன்னா “       

Popular News

  • ‘டாய்ரா’ படத்தில் எதிரெதிர் பக்கங்களில் நீதியைத் தேடும் கரீனா கபூர் கான் மற்றும் பிருத்விராஜ் சுகுமாரன்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘தி கிராண்ட் மாஸ்டர்’… கவனம் ஈர்க்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • சமுத்திரக்கனி – சசிகுமார் மீண்டும் இணையும் ‘ஸ்கூல் பஸ்’ – நண்பர்களின் வெற்றிப் பயணம் தொடர்கிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் – டாக்டர் ஐசரி கே கணேஷ் -இயக்குநர் சுந்தர் சி- நயன்தாரா- கூட்டணியில் உருவாகும் ‘மூக்குத்தி அம்மன் 2 : மகா சக்தி – Mookuthi Amman 2: Mahasakthi’ படத்தின் டீசர் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • என்ன விலை – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

அர்ஜுன் தாஸ் நடிக்கும் புரொடக்ஷன் No.1 (Production No.1) – பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்!

September 17, 2026

நவம்பர் 20-ம் தேதி பிரமாண்டமாக வெளியாகும் துல்கர் சல்மானின் ‘AOT’

September 17, 2026

‘பாரத ரத்னா’ எம் எஸ் சுப்புலட்சுமியின் சுய சரிதையான ‘எம் எஸ் : எ லெகஸி ஆன் ஸ்கிரீன்- M.S. : A LEGACY ON SCREEN ‘ திரைப்படத்தின் தொடக்க விழா

September 17, 2026

‘கன்னடத்து பைங்கிளி’ படத்திற்காக டி. ராஜேந்தரின் இசையில் முதல் முறையாக பாடிய இசைஞானி இளையராஜா

September 17, 2026

‘பத்தா’ படத்தின் ‘வேர்ல்ட் ஆஃப் பத்தா’ டீசர் வெளியீடு –ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் விஜய் சேதுபதியின் வித்தியாசமான பரிமாணங்கள்!

September 17, 2026

‘தி டார்க் ஹெவன்’. – விமர்சனம்

September 17, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.