• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா

கல்லூரி மாணவிகள் 9 பேரைத் தன் இசையில் பாட வைக்கும் இளையராஜா!

by admin
January 12, 2019
in சினிமா, சினிமா செய்திகள்
0
கல்லூரி மாணவிகள் 9 பேரைத் தன் இசையில் பாட வைக்கும் இளையராஜா!
0
SHARES
35
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

கல்லூரி மாணவிகள் 9 பேரைத் தான் இசையமைக்கும் படத்தின் மூலம் பாடகியாக திரையுலகில் அறிமுகம் செய்யவிருக்கிறார் இசைஞானி இளையராஜா.

அண்மையில் இசைஞானி இளையராஜா எத்திராஜ் கல்லூரி , ராணி மேரி கல்லூரி என இரண்டு மகளிர் கல்லூரி விழாக்களில் கலந்து கொண்டார். அங்கே அவரது பிறந்த நாள் விழாவையும் மாணவிகள் முன்னிலையில் கேக் வெட்டிக் கொண்டாடினார்.

இந்நிகழ்ச்சியில் பேசியும் பாடியும் அவர் கல கலப்பூட்டினார். கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடியதுடன் அவர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

அப்போது அவரது இசையைப் பற்றி மாணவிகள் சந்தேகங்கள், கேள்விகள் கேட்டுத் தெரிந்து கொண்டனர். அப்போது அந்த இரண்டு கல்லூரிகளிலும் மாணவிகள் சிலர் பாடல்கள் பாடியதுடன் அவரது இசையில் தாங்கள் பாடவும் விரும்புவதாகவும் அது தங்கள் கனவென்றும் மாணவிகள் தங்கள் விருப்பத்தை வெளியிட்டிருந்தனர்.

இது இசைஞானி இளையராஜாவின் எண்ணத்தில் அலையடித்திருக்கிறது. அதன் விளைவாக இப்போது இரண்டு கல்லூரியிலும் இசை விருப்பமுள்ள, பாடகியாக ஆசைப்பட்ட மாணவிகள் சிலரை அழைத்துக் குரல் சோதனை வைத்து இருக்கிறார் இசைஞானி. அவர்களில் பாடும் திறன் கொண்ட 9 மாணவிகளைத் தேர்வு செய்து இருக்கிறார்.

இந்த ஒன்பது பேரும் இளையராஜா இசையமைக்கும் அடுத்தடுத்த படங்களில் பாடகியாக அறிமுகமாகிவுள்ளனர். இசைஞானி மூலம் தங்கள் கனவு நினைவானதில் அந்த 9 மாணவிகளும் பூரிப்பில் உள்ளனர்.

Tags: Ilayarajaஇளையராஜா
Previous Post

கட் அவுட் பேனர்களால் ஏற்படும் விபத்துகளை தடுக்க உச்ச நடிகர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் – கலப்பை மக்கள் இயக்கம் வேண்டுகோள்!

Next Post

கழுகு-2 வில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடிய யாஷிகா ஆனந்த்..!

Next Post
கழுகு-2 வில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடிய யாஷிகா ஆனந்த்..!

கழுகு-2 வில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடிய யாஷிகா ஆனந்த்..!

Popular News

  • விமல் – ஸ்ரேயா கூட்டணியில் அதிரடி ரோம்-காம் ‘சண்டக்காரி’!

    0 shares
    Share 0 Tweet 0
  • மோகன்லால் – விஷ்ணு மோகன் இணையும் படத்திற்கு ‘ஆபரேஷன் கங்கா’ என பெயர் சூட்டப்பட்டது

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘மூன்வாக்’ – 2026 தீபாவளி விருந்தாக மகிழ்ச்சி, சிரிப்பை அள்ளித் தரும் குடும்ப பொழுதுபோக்கு படமாக திரைக்கு வருகிறது

    0 shares
    Share 0 Tweet 0
  • பெத்லகேம் குடும்ப யூனிட் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • மாரி செல்வராஜ் வழங்கும், அமீர் நடிப்பில் ‘மாகாளி’ – பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

விமல் – ஸ்ரேயா கூட்டணியில் அதிரடி ரோம்-காம் ‘சண்டக்காரி’!

September 5, 2026

மோகன்லால் – விஷ்ணு மோகன் இணையும் படத்திற்கு ‘ஆபரேஷன் கங்கா’ என பெயர் சூட்டப்பட்டது

September 5, 2026

நடிகர்கள் த்ரிஷா கிருஷ்ணன், ராதிகா சரத்குமார், அபர்ணா பாலமுரளி நடிப்பில், ராஜா கிருஷ்ண மேனன் இயக்கத்தில், பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனம், லோகோமோட்டிவ் குளோபல் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் முதல் தமிழ் படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கியது!

September 5, 2026

‘மூன்வாக்’ – 2026 தீபாவளி விருந்தாக மகிழ்ச்சி, சிரிப்பை அள்ளித் தரும் குடும்ப பொழுதுபோக்கு படமாக திரைக்கு வருகிறது

September 5, 2026

பெத்லகேம் குடும்ப யூனிட் – விமர்சனம்

September 5, 2026

நிவின் பாலி நடிக்கும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்: பட பத்திரிகையாளர் சந்திப்பு

September 5, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.