ADVERTISEMENT
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா

கட் அவுட் பேனர்களால் ஏற்படும் விபத்துகளை தடுக்க உச்ச நடிகர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் – கலப்பை மக்கள் இயக்கம் வேண்டுகோள்!

by admin
January 11, 2019
in சினிமா, சினிமா செய்திகள்
0
கட் அவுட் பேனர்களால் ஏற்படும் விபத்துகளை தடுக்க உச்ச நடிகர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் – கலப்பை மக்கள் இயக்கம் வேண்டுகோள்!
0
SHARES
15
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளராக வலம் வரும் பி.டி செல்வகுமார். தளபதி விஜயின் புலி படத்தின் தயாரிப்பாளரான இவர் கலப்பை மக்கள் இயக்கத்தின் மூலமாக தொடர்ந்து மக்களுக்காக உதவி வருகிறார்.

இன்று மயிலாடி என்ற பகுதியில் கல் உடைக்கும் 51 தொழிலாளிகளுக்கு பொங்கல் பரிசுகளை வழங்கினார்.

இதனையடுத்து நாகர்கோவில் சென்றுள்ள அவர் அங்கு பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய போது விஸ்வாசம், பேட்ட படத்தின் கொண்டாட்டங்களில் நடந்த அசம்பாவிதங்கள் குறித்து பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவின் பெரிய நடிகர்களின் படங்களின் போது பேனர், கட் அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்தல் போன்ற நிகழ்வுகளால் இளைஞர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்து வருவது வாடிக்கையாகி வருவது மனதிற்கு வேதனை அளிக்கிறது.

இந்த வருடம் கூட விஸ்வாசம் படத்தின் கொண்டாட்டத்தில் விழுப்புரத்தில் அஜித்தின் கட் அவுட்டிற்கு பாலபிஷேகம் செய்த போது கட் அவுட் சரிந்து விழுந்து 7 பேர் படுகாயமடைந்தனர். அதில் ஒருவர் உயிரிழந்து விட்டதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதே போல் கத்தி பட ரிலீஸின் போது பாலக்காட்டில் விஷ்ணு என்ற இளைஞர் விபத்தில் சிக்கி இறந்தார்.

தலைவா படம் ரிலீஸ் தள்ளி போனதால் இளைஞர் ஒருவர் தன்னுடைய உயிரை மாய்த்து கொண்டார். இது போன்ற பல சம்பவங்கள் நடந்தேறி வருகிறது.

தொடர்ந்து நடைபெறாமல் இருக்க பெரிய நடிகர்களான ரஜினி, விஜய், அஜித் ஆகியோர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தங்களுடைய ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கி தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

பெற்றோர்களும் சமூக ஆர்வலர்களும் நடிகர்களை நடிகர்களாக மட்டும் பார்க்குமாறும் சினிமாவை சினிமாவாக தங்களது குழந்தைகளை விழிப்புணர்வோடு வளர்க்க வேண்டும்.

நடிகர்களுக்காக ரசிகர்கள் உயிரை விடுவது போன்ற சம்பவங்கள் பெரும்பாலும் தமிழகத்தில் தான் நடக்கின்றன.

நடிகர்கள் எல்லாம் ஒரு படத்திற்காக 40 கோடி, 50 கோடி என சம்பளம் வாங்கி கொண்டு மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறார்கள் அவர்களுக்காக இப்படியான கொண்டாட்டங்களில் ஈடுப்பட்டு தங்களது உயிரை மாய்த்து கொண்டால் உங்களின் குடும்பத்தின் நிலை என்னவாகும்? கஷ்டப்பட்டு வளர்ந்த அம்மா அப்பாவை பற்றி யோசித்து செயல்பட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும் படங்களுக்காக பெரிய பெரிய கட் அவுட், பேனர் வைப்பதற்கெல்லாம் தமிழக அரசு தடை விதிக்க வேண்டும். அதற்காக கலப்பை மக்கள் இயக்கம் சார்பாகவும் முதல்வரிடம் மனு ஒன்றை அளிக்க உள்ளோம் எனவும் கூறினார்.

அந்த காலம் முதல் ரஜினி, விஜய், அஜித் என எத்தனையோ நடிகர்கள் வந்தாலும் நடிகர்களால் ரசிகர்கள் உயர்ந்ததாக சரித்திரம் இல்லை. ஆகவே தொழில் கவனம் செலுத்துங்கள் எனவும் கூறினார்.

Previous Post

Krishnam Movie Audio Launch Stills

Next Post

கல்லூரி மாணவிகள் 9 பேரைத் தன் இசையில் பாட வைக்கும் இளையராஜா!

Next Post
கல்லூரி மாணவிகள் 9 பேரைத் தன் இசையில் பாட வைக்கும் இளையராஜா!

கல்லூரி மாணவிகள் 9 பேரைத் தன் இசையில் பாட வைக்கும் இளையராஜா!

Popular News

  • இரண்டு பாகங்களாக தயாராகும் “பொன்னியின் செல்வன்” ..!

    0 shares
    Share 0 Tweet 0
  • பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • “கேசினோ” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட விக்னேஷ் சிவன்..!

    0 shares
    Share 0 Tweet 0
  • தென்னகத்தில் கால்பதிக்கும் Applause Entertainment நிறுவனம் சென்னையில் புதிய அலுவலக கிளையினை திறந்துள்ளது.

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘மதுரை மணிக்குறவர்’ திரை விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“கேசினோ” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட விக்னேஷ் சிவன்..!

July 6, 2022

பொதுத்தேர்வில் வென்ற மாணவர்களுக்கு தங்க நாணயம் பரிசளித்து கவுரவித்த தளபதி விஜய் மக்கள் இயக்கம்

July 6, 2022

பன்னிக்குட்டி” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு!

July 6, 2022

தணிக்கை குழுவினரின் பாராட்டை பெற்ற ‘மெய்ப்பட செய்’! – ஜூலை 15 ஆம் தேதி வெளியாகிறது

July 5, 2022

உலக அங்கீகாரத்தின் ஆரம்பத்தில் “இரவின் நிழல்” ..!

July 5, 2022

தென்னகத்தில் கால்பதிக்கும் Applause Entertainment நிறுவனம் சென்னையில் புதிய அலுவலக கிளையினை திறந்துள்ளது.

July 5, 2022
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Tamil2daynews.com.

No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2022 Tamil2daynews.com.