• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Advertisement
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

இருட்டு” டிசம்பர் 6 முதல்  திரையில் !

by Tamil2daynews
November 29, 2019
in சினிமா செய்திகள்
0
இருட்டு” டிசம்பர் 6 முதல்  திரையில் !
0
SHARES
33
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

Screen Scene Media Entertainment Pvt ltd தயாரிப்பில்- இயக்குநர் V Z துரை இயக்கியுள்ள படம் “இருட்டு”. ஹாரர் திரில்லர்  படமாக உருவாகியுள்ள இப்படத்தில் சுந்தர் சி நாயகனாக நடிக்க,  புதுமுகம்
சாக்‌ஷி சௌத்ரி நாயகியாக நடித்துள்ளார். VTV கணேஷ்,
விமலா ராமன், சாய் தன்ஷிகா,
யோகிபாபு ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது.


இச்சந்திப்பில்  பேசிய எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் கூறியதாவது

“இருட்டு”  இந்த பெயரை கேட்டவுடன் எல்லோருக்கும் இப்படி ஒரு பெயரா என ஆச்சர்யம். உலகில் முதலிலிருந்து இருப்பது இருட்டு தான் . வெளிச்சம் வந்து விட்டு போகிறது அவ்வளவு தான். இந்தப்பெயரை சொல்லி நான் இப்படத்தில் பங்கு கொண்டிருக்கிறேன் எனச் சொல்லும்போது இருட்டு உங்களுக்கு வெளிச்சத்தை கொண்டு வரட்டும் என வாழ்த்தினார்கள்.  எல்லோரும் தங்கள் படத்தை பொதுவாக வித்தியாசமாக இருக்கிறது என்றே சொல்வார்கள். ஆனால் நான் இப்படத்தில்  அதை உண்மையாக சொல்கிறேன்.  ஊட்டியில் ஒரு இடத்தில் பகலிலேயே இருண்டு போய்விடுகிறது. அந்நேரத்தில் கொலைகள் நடக்கிறது. பகலில் எப்படி இருட்டுகிறது, ஏன் கொலைகள் நடக்கிறது என்பது தான் கதை. இதை துப்பறியும் இன்ஸ்பெக்டராக வாழ்ந்திருக்கிறார் சுந்தர் சி.
இப்படத்தின் இயக்குநர் துரை வெற்றிபெற வேண்டும் என்று முழு மூச்சாக உழைப்பவர். இதுவரை வந்த  ஹாரர் படங்களில் உள்ள கிளிஷேக்கள் இந்தப்படத்தில் இருக்க கூடாது என உறுதியாக இருந்தார். ஒவ்வொன்றும் புதிதாக இருக்க வேண்டும் என  கடும் உழைப்பை தந்திருக்கிறார். படத்தில் வேலை செய்திருக்கும் ஒவ்வொருவரிடமும் முழுமையான வேலையை வாங்கியுள்ளார். சுந்தர் சி எனக்கு பிடித்த நடிகர் காவல் அதிகாரி பாத்திரத்தை அற்புதமாக நடித்திருக்கிறார். படத்தின் 120 நிமிடத்தில் 100 நிமிடங்கள் உங்களை பதைபதைப்பில் வைத்திருக்கும் திரில்லர் படமாக இது இருக்கும். டிசம்பர் 6 ஆம் தேதி படம் வெளிவருகிறது. “இருட்டு” எல்லோருக்கும் வெளிச்சத்தை கொண்டு வரும். இதில் பங்குகொண்ட அனைவருக்கும் நன்றியும் வாழ்த்துக்களும்,  என்றார்.


ஒலியமைப்பு ஒருங்கிணைபாளர் விஜய்ரத்தினம் கூறியதாவது…

படத்தில்   வழக்கமான கிளிஷேக்கள்
எதுவும் வரக்கூடாது என்பதில் இயக்குநர் தெளிவாக இருந்தார்.
எங்களுடன் இணைந்து ஒவ்வொரு சின்ன சின்ன ஒலியையும் வடிவமைப்பதில்  உதவினார். படம் புதிதாக இருக்க வேண்டும் என்று கடுமையாக உழைத்திருக்கிறோம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்.

இசையமைப்பாளர் கிரிஷ் பேசியது …

எனக்கு இது “அவள்” படத்திற்கு பிறகு இரண்டாவது பேய் படம். இயக்குநர் துரை சாரை கல்லூரி காலத்திலிருந்தே பிடிக்கும். அவருடன் வேலை செய்ய முடிந்தது மிகுந்த சந்தோஷம். பேய் படத்தில் என்ன புதிதாக செய்யலாம் என ஆராய்ச்சி செய்து வேலை செய்திருக்கிறோம். கிறிஷ்து, இந்து பேய்கள் பற்றி படங்கள் வந்திருக்கிறது. ஆனால் முஸ்லீம் பேய் பற்றி படம் வந்ததில்லை இது புது அனுபவமாக இருக்கும். இயக்குநர் துரை சாருக்கு இசையில்  மிகப்பெரிய  அறிவு இருக்கிறது. அவர் இருந்தால் இசை இன்னும் அற்புதமாக இருக்கும். இப்போது படம் திரைக்கு வரவிருக்கிறது. உங்களுக்கு பிடிக்கும் பார்த்துவிட்டு சொல்லுங்கள் என்றார்.

நாயகி விமலா ராமன் பேசியது ..

எனக்கு மிக வித்தியாசமான கதாபாத்திரம் தந்ததற்கு இயக்குனருக்கு நன்றி. சுந்தர் சி சார் உடன் நடித்தது மிகுந்த மகிழ்ச்சி தந்தது. இந்தப்படமே ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. எல்லோருக்கும் பிடிக்கும் நம்புகிறேன் நன்றி என்றார்.


VTV கணேஷ் பேசியதாவது..

“இருட்டு” படத்தில்  நடித்ததே புதிய அனுபவம் தான். சுந்தர் சி யிடம் ஒரு படம் செய்யலாம் என போனேன்,  அவர் இப்போது படம் இயக்கவில்லை ஒரு பெரிய படம் நடித்து தருகிறேன், என்றார். VZ துரை யெய் அறிமுகப்படுத்தினேன். சூப்பர் என்றார். பெரிய படமாக செய்யலாம் என்றேன். வழக்கமான படமாக இருக்ககூடாது என்று சொன்னேன். VZ துரை புதிதாக  இஸ்லாம் சம்பந்தமாக ஒரு விசயத்தை பிடித்தார். அது பக்காவாக இருந்தது. ஊட்டியில் ஷுட்டிங் நடத்தினோம் சுந்தர் சி வீட்டுக்கே போகவில்லை அவ்வளவு டெடிக்கேட்டாக உழைத்தார். VZ துரை ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்திருக்கிறார். படம் பாருங்கள் பிடிக்கும் என்றார்.

நாயகி சாக்‌ஷி சௌத்ரி பேசியது…

இந்தப்படம் நான்  நீண்ட நாளாக  எதிர்பார்த்திருக்கும் கனவு. இப்படத்தில் என்னை தேர்ந்தெடுத்ததற்கு இயக்குநருக்கு நன்றி.  சுந்தர் சி சாருடன் இணைந்து நடித்தது புதிய அனுபவமாகா இருந்தது. இப்படத்தின் கதை புதுமையாக இருந்தது. படத்தில் அனைவரும் கடுமையாக உழைத்திருக்கிறோம். எல்லோரும் ஆதரவு தாருங்கள் நன்றி என்றார்.

இயக்குநர் VZ துரை கூறியதாவது…

இப்படத்தில் மூலமாக எனக்கு கிடைத்த அருமையான விசயம்  சுந்தர் சி சாரின் நட்பு. VTV கணேஷ் சார் தான் இப்படம் உருவாக காரணம். அவர் தான் இப்படத்தை உருவாக்கினார். Screen Scene இப்படத்தை வாங்கி ரிலீஸ் செய்கிறார்கள். சுந்தர் சார் பேய் படம் செய்யலாம் என சொன்னபோது நான் வேண்டாம் சார் எனக்கு பயம் சார் நான் பண்ண மாட்டேன் என்றேன். அப்ப நீங்க தான் சரியான ஆள் உலகின் மிகப்பெரிய ஹாரர் இயக்குநர் ஜேம்ஸ் வான் அவரும் பயப்படுபவர் தான் என்று சொல்லி என்னை சமதானப்படுத்தினார். சுந்தர் சாரே ஒரு ஹாரர் இயக்குநர் அவர் படங்கள் கமர்ஷியல் கலந்து இருக்கும்  அவர் ஐடியாக்கள் எல்லாம் பிரமாண்டமாக இருக்கும் என்னுடையது வேறு மாதிரி இருக்கும். ஆனால் அவர் இந்தப்படம் முழுக்க பயக்கற மாதிரியான படமா இருக்கணும் நீங்க டைரக்ட் பண்ணுங்க நான் நடிக்கிறேன் என்றார். அவர் முழு ஈடுபாட்டுடன் இந்தப்படத்தில் உழைத்திருக்கிறார். இதுவரை தமிழ் சினிமாவில் இல்லாத புது விசயத்தை இதில் அறிமுகப்படுத்தியுள்ளோம். பார்த்துவிட்டு சொல்லுங்கள் என்றார்.


சுந்தர் சி பேசியது…

ரொம்ப நாள் கழித்து நடிகராக இங்கு நிற்கிறேன். VTV கணேஷ் சார் தான் இந்தப்படம் உருவாக காரணம். அவர் ஒரு படம் செய்யலாம் என சொன்னபோது பாதுகாப்பாக இருக்கட்டும் என ஒரு ஹாரர் படம் செய்யலாம் என சொன்னேன். நான் செய்யும் படங்கள் எல்லாவற்றிலும் மக்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ற விசயங்கள் இருக்கும். நான் ரசிக்கிற படங்கள் வேறு மாதிரி இருக்கும். முழுக்க பயப்படுற மாதிரி ஒரு படம் செய்யலாம் என சொன்னபோது இயக்குநராக யாரை போடலாம் எனப் பேசினோம். VZ துரை சாரை சொன்னபோது முதலில் பயந்தேன் அவர் படங்கள் பார்த்து.. அவர் வயலண்டாகா இருப்பார் என நினைத்தேன். ஆனால் அவர் ஒரு அப்பாவி. பேய்ப்படம் பண்ண மாட்டேன் என்றார். அவரை தயார் படுத்தி நிறைய பேய்படங்கள் பார்க்க வைத்தோம். பின் அவர் ஒரு அற்புதமான ஐடியாவுடன் வந்தார். இஸ்லாம் பேய் சம்மந்தப்பட்ட விசயம் இதுவரை இந்திய சினிமாவில் வந்ததே இல்லை. இயக்குநராக  VZ துரை முதல் நாளிலேயே என்னை 10 டேக் நடிக்க வைத்தார். அப்புறம் இரண்டு நாள் கழித்து அவரது வேலை செய்யும் விதத்தை பழகிக்கொண்டேன். அவருக்கு திருப்தி வரும் வரை அவர் மீண்டும் மீண்டும்  எடுப்பார். அவர் என்னிடம் கற்றுக்கொண்டேன் என்று சொல்வார் ஆனால் நடிகராக அவரிடம் நான் கற்றுக் கொண்டேன். இந்தப்படம் புதிதான பேய் படமாக இருக்கும். படம் டிசம்பர் 6 தியேட்டர் வருகிறது பார்த்து ஆதரவு தாருங்கள் என்றார்.

தொழில் நுட்ப கலைஞர்கள் விபரம்.

இயக்கம் – VZ துரை

வசனம் – இந்திரா சௌந்தரராஜன்

இசை-  கிரிஷ்

ஒளிப்பதிவு – E. கிருஷ்ணசாமி

படத்தொகுப்பு – R. சுதர்ஷன்

கலை இயக்கம் – A K முத்து

பாடல்கள் – மோகன் ராஜன்

சண்டைப்பயிற்சி – தினேஷ் காசி

ஒலியமைப்பு – விஜய் ரத்தினம்

ஒலிக்கலவை – A M ரஹமத்துல்லா

ஸ்டில்ஸ் – சாரதி

ஒப்பனை – பாரிவள்ளல்

விஷுவல் எஃபெக்ட்ஸ் – White Lottus

டிசைன்ஸ் –  ராஜா, விருமாண்டி

மக்கள் தொடர்பு – ஜான்சன்

தயாரிப்பு மேற்பார்வை – R S வெங்கட்

இணைதயாரிப்பு – A P V மணிமாறன்

தயாரிப்பு – Screen Scene Media Entertainment Pvt ltd.

Tags: IruttuSundar cTamil MovieVTV Ganesh
Previous Post

சசிகுமார்,சமுத்திரகனி, சூரி கூட்டணியில் ஜோதிகா

Next Post

Aishwarya Rajesh Looking Snazzy From Her Latest Photoshoot

Next Post
Aishwarya Rajesh Looking Snazzy From Her Latest Photoshoot

Aishwarya Rajesh Looking Snazzy From Her Latest Photoshoot

Popular News

  • பழநி தல வரலாறு

    பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • Actress Shirin Kanchwala Photos

    0 shares
    Share 0 Tweet 0
  • ”இயக்குநர் ராமின் ’பறந்து போ’ மிகப்பெரிய வெற்றிப் படம்!”- ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர்

    0 shares
    Share 0 Tweet 0
  • ரேவதி இயக்கத்தில் நடிகர்கள் பிரியாமணி மற்றும் சம்பத் ராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘குட் வொய்ஃப்’ சீரிஸின் டீசரை ஜியோஹாட்ஸ்டார் வெளியிட்டுள்ளது!

    0 shares
    Share 0 Tweet 0
  • Turmeric Mantra an artisanal pickles and podis brand was launched by social activist and columnist Apsara Reddy.

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஜியோஹாட்ஸ்டாரில் வெளியானது ‘குட் வொய்ஃப்’ இணையத் தொடர்…அதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் ஹைலைட்ஸ்!

July 5, 2025

ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் நன்றி தெரிவித்த ‘லவ் மேரேஜ்’ படக்குழு

July 5, 2025

ஃபீனிக்ஸ் – விமர்சனம் ரேட்டிங் – 4 / 5

July 5, 2025

பறந்து போ – விமர்சனம் ரேட்டிங் – 4 / 5

July 5, 2025

3 BHK விமர்சனம் ரேட்டிங் – 4 / 5

July 5, 2025

”இயக்குநர் ராமிடம் நிறைய கற்றுக் கொண்டேன்”- நடிகை கிரேஸ் ஆண்டனி!

July 5, 2025
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.