இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் தற்போது அதிரடியாக உருவாகியுள்ள திரைப்படம் ஜெயில். ஜிவி பிரகாஷ் இப்படத்தில் ஹீரோவாக நடித்திருக்க அபர்ணதி இதில் கதாநாயகியாக நடித்துள்ளார் வடசென்னையை பற்றியும் ஜெயில் குறித்த முக்கிய சம்பவங்களை பற்றியும் உருவாகியுள்ள இந்த திரைப்படம் வரும் டிசம்பர் 9ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.தேசிய விருது பெற்ற இயக்குனர் வசந்தபாலன் திரைப்படங்கள் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு இருக்கும். தரமானதாகவும் அதேசமயம் உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டதாகவும் இருக்கும். வெயில்,அங்காடித் தெரு, அரவான், காவியத்தலைவன் உள்ளிட்ட திரைப்படங்கள் வசந்தபாலன் இயக்கத்தில் வெளியானது. இதில் அங்காடித்தெரு மற்றும் வெயில் உள்ளிட்ட படங்களுக்கு தேசிய விருது பெற்றது.
வசந்தபாலன் இப்பொழுது ஜெயில் என்ற படத்தை இயக்கியுள்ளார். ஜெயில் சம்பந்தப்பட்ட பல திரைப்படங்கள் வெளியாகி இருந்தாலும் இந்த திரைப்படம் மிகவும் வித்தியாசமாகவும் ஜெயிலில் நடக்கும் முக்கிய சம்பவங்களை பற்றி மிகத் தெளிவாக கூறுவதாகவும் உருவாகியுள்ளது. மேலும் இந்த படத்தில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் ஹீரோவாக நடித்துள்ளார். தேன் படத்தை தொடர்ந்து நடிகை அபர்ணதி இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.இதுவரை சிட்டி பாயாக கலக்கிக் கொண்டிருந்த ஜிவி பிரகாஷ்குமார் இப்பொழுது வட சென்னையில் வாழும் பயனாக மிக தத்ருபமாக நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஜெயில் படத்தின் டீசர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது இந்த படத்தில் ஆக்ஷன் காட்சிகள் மிக அதிக அளவில் உள்ளது மேலும் ஜிவி பிரகாஷ் நடிப்பும் இந்த படத்தில் மிகவும் வித்தியாசமாக காணப்பட்டது
ராதிகா சரத்குமார்,யோகிபாபு,ரோபோ சங்கர், பசங்க பாண்டி, ரவிமரியா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க வடசென்னையை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த திரைப்படம் சென்றாண்டு ரிலீசுக்கு தயாராக இருந்தது ஆனால் பல்வேறு பிரச்சனைகளால் திரைப்படம் தொடர்ந்து வெளியிட முடியாமல் இருந்து வந்தது.ஒருவழியாக படக்குழு அனைத்து பிரச்சினைகளையும் எதிர்கொண்டு படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வரும் டிசம்பர் 9ஆம் தேதி குறித்த நேரத்தில் ஜெயில் கட்டாயமாக வெளியாகும் என இயக்குனர் வசந்தபாலன் தெரிவித்துள்ளார். மிகச்சிறந்த குழுவுடன் பல்வேறு எதிர்ப்புகளையும் தாண்டி திரையில் வெளியாக உள்ள இந்த திரைப்படத்தை காண ஒட்டுமொத்த ரசிகர்களும் பெரும் ஆர்வத்தில் காத்துக் கொண்டுள்ளனர்.