• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Advertisement
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

கலப்பை மக்கள் இயக்கம் மற்றும் மீண்டும் படக்குழு இணைந்து நடத்திய பாலச்சந்திரன் நினைவு அஞ்சலி நிகழ்வு.

by Tamil2daynews
December 24, 2021
in சினிமா செய்திகள்
0
கலப்பை மக்கள் இயக்கம் மற்றும் மீண்டும் படக்குழு இணைந்து நடத்திய பாலச்சந்திரன் நினைவு அஞ்சலி நிகழ்வு.
0
SHARES
17
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

உதவி இயக்குனர்களுக்கு உதவி, பாலச்சந்தர் விருது வழங்கும் நிகழ்வு :

இயக்குனர்கள்  சிகரம்  பாலச்சந்தர் அவர்களின்  நினைவு  நாளன்று                                 பிடி செல்வகுமார் அவர்களின் கலப்பை மக்கள் இயக்கம் மற்றும் சரவணன் சுப்பையா அவர்களின் இயக்கத்தில் உருவாகியுள்ள மீண்டும் படக்குழுவினர் இணைந்து நடத்திய நினைவு அஞ்சலி  நிகழ்வில் உதவி இயக்குனர்களுக்கு உதவியும் மேலும் சிறந்த படைப்பாளிகளுக்கு பாலச்சந்தர் விருதும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் பாலச்சந்தர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு அனைவரும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரவிமரியா பேசும்போது தென்னிந்திய சினிமாவின் மிகப்பெரிய அடையாளம் இயக்குனர் சிகரம் பாலச்சந்தர். ரஜினி, கமல் என பல மிகப் பெரிய நடிகர்களை திரையுலகிற்கு அறிமுகம் செய்தவர். அவருடைய நினைவு நாளில் கலப்பை மக்கள் இயக்கம் இப்படி ஒரு நிகழ்வை நடத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது. இது ஒட்டுமொத்த திரையுலகமும் இணைந்து செய்ய வேண்டிய நிகழ்வு. ஆனால் கலப்பை மக்கள் இயக்கம் தானாக முன்வந்து இந்த நிகழ்வை நடத்தி இருப்பது சாதாரண விஷயம் அல்ல பாராட்ட வேண்டிய ஒன்று என பேசினார். பிடி செல்வகுமார் அவர்களுக்கு சமூக அக்கறை மட்டுமல்ல வாழ்வியலுக்கும் அவர் நிறைய உதவிகளை செய்து வருகிறார். சமீபத்தில் அவருடைய ஊருக்கு நான் சென்றிருந்த போதே அந்த குமரி மாவட்ட மக்கள் பிடி செல்வகுமார் அவர்களைப் பற்றி மிகவும் பாராட்டி பேசினார்கள். அவர் செய்து வரும் உதவிகள் பற்றி கூறினார்கள். இந்த கொரானா காலகட்டத்தில் கூட ஆங்கில வழியில் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க ஒரு பள்ளியை இலவசமாக கட்டி கொடுத்துள்ளார். அவருடைய சமூக தொண்டை நினைத்து மிகவும் பெருமையாக இருக்கிறது.

அதேபோல் சரவண சுப்பையா இயக்கத்தில் உருவாகியுள்ள மீண்டும் படத்தைப் பார்த்தேன். அற்புதமான கதை அதிலும் நாயகனாக நடித்துள்ள கதிரவனை நிர்வாணப்படுத்தி 16 நாட்கள் சுடுதண்ணீரில் மூழ்க வைத்து அவரை அடிக்கும் காட்சிகள் பார்த்து மிரண்டு போனேன். நம்முடைய தேச உணர்ச்சிகளை தூண்டும் வகையில் படத்தை எடுத்துள்ளார். நிச்சயம் இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும். சிட்டிசன் படம் மூலமாக தன்னுடைய திறமையை நிலைநாட்டிய சரவணன் செய்ய இந்த படத்தின் மூலம் பேசப்படும் இயக்குனராக வலம் வருவார். இந்த படம் கதிரவனுக்கும் மிகப்பெரிய பாராட்டுக்களையும் கொடுக்கும் படமாக இருக்கும் என பேசினார்.

நடிகர் மன்சூர் அலிகான் அவர்கள் பேசியதாவது, நான் பாலச்சந்தர் அவர்களின் படங்களை பார்த்து தான் இந்த சினிமா உலகத்திற்கு வந்தேன். ஆனால் அவருடைய படங்களில் என்னால் நடிக்க முடியவில்லை என்பதே எனக்குள் இன்று வரை இருக்கும் ஏக்கம். அவருடைய படங்களில் நடிக்க வேண்டும் என்பதே என்னுடைய மிகப்பெரிய ஆசை. இன்று நாடு போகும் போக்கில் சமூக அக்கறைகளை குறைந்து கொண்டே வருகிறது. எப்படி கலப்பை என்பது கூர்மையான முள் போன்று இருக்குமோ அதே போல் கலப்பை மக்கள் இயக்கம் மூலமாக பிடி செல்வகுமார் அவர்கள் கூர்மையான நல்ல விஷயங்களை செய்து வருகிறார். இது போன்ற நல்ல உள்ளங்கள் வாழ வேண்டும். இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் மேலேயிருந்து பிடி செல்வகுமார் அவர்களையும் மீண்டும் படக்குழுவினரையும் நிச்சயம் ஆசீர்வதிப்பார். சிட்டிசன் திரைப்படம் அஜித்துக்கு எப்படி வாழ்க்கையில் திருப்புமுனையை உண்டாக்கியதோ.. அந்த படத்தில் எப்படி அப்பாவி மக்கள் வாழும் ஒரு கிராமமே காணாமல் போனது போல கதை களம் இருந்தது அதேபோல் இந்த படத்திலும் தமிழர்கள் அனுபவிக்கும் சித்ரவதைகள் பற்றி துணிச்சலாக பேசியுள்ளார் என பேசினார். மிகப்பெரிய சாதனையாளர்களை மறந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் இந்த நிகழ்ச்சிக்கு நான் வந்தேன் என பேசினார்.

இவரைத் தொடர்ந்து பேசிய ஆர் சுந்தர்ராஜன் அவர்கள் பாலச்சந்தரால் நான் திருடன் ஆனேன் என பேசத்தொடங்கினார். பாலச்சந்தர் படங்களை பார்த்துவிட்டு நானும் பாக்யராஜும் வீட்டிலிருந்து 225 ரூபாய் திருடி விட்டு சென்னைக்கு வந்தோம். அந்த அளவிற்கு நீர் குமிழி, எதிரொலி போன்ற படங்களை கொடுத்தவர். சினிமாவில் ஒரு முத்துராமனையும் வைத்துக்கொண்டும் நாகேஷ் வைத்துக்கொண்டு ஜெயிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையை உருவாக்கியவர். இயக்குனர்களுக்கு தனி இலக்கணமாக விளங்கியவர் பாலச்சந்தர் என பேசினார். மேலும் நம்முடைய மக்களுக்கு மறதி அதிகம். ஒருவர் இறந்துவிட்டால் அவர்களை மறந்து விடுவார்கள். ரஜினி கமல் போன்ற பெரிய பெரிய ஜாம்பவான் நடிகர்களை அறிமுகப்படுத்தியவரை நினைவு கூர்ந்து கலப்பை மக்கள் இயக்கம் மீண்டும் படக்குழுவினரும் இணைந்து இந்த நிகழ்வை நடத்துவது மகிழ்ச்சியாக உள்ளது என பேசினார்.

அதன் பிறகு இயக்குனர் சிற்பி, இயக்குனர் சரவண சுப்பையா, மீண்டும் பட நாயகன் கதிரவன், சிகரம் சந்திரசேகர் என பலர் கலப்பை மக்கள் இயக்கத்தையும் மீண்டும் பட குழுவினரையும் பாராட்டியும் பாலச்சந்தர் அவர்களை நினைவுகூர்ந்து பேசினர்.

இந்த நிகழ்வுக்கு வருகை தந்தவர்களை கலப்பை மக்கள் இயக்கத்தலைவர்     பிடி செல்வகுமார் வரவேற்றுப் பேச வி. கே வெங்கடேசன் அவர்கள் நன்றி தெரிவித்து பேசினார்.

Previous Post

தடைகளைக் கடந்து ‘நீ  சுடத்தான் வந்தியா ‘ படம் இம்மாதம் டிசம்பர் 31 முதல் உலகமெங்கும் திரைக்கு வருகிறது !

Next Post

*புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவ பேஷன் ஷோ நடத்தும் இலங்கேஸ்வரி முருகன்*

Next Post
*புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவ பேஷன் ஷோ நடத்தும் இலங்கேஸ்வரி முருகன்*

*புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவ பேஷன் ஷோ நடத்தும் இலங்கேஸ்வரி முருகன்*

Popular News

  • *மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில், அமேசான் தயாரிப்பில் உருவாகியிருக்கும்  மாறா ட்ரெய்லர்,

    *மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில், அமேசான் தயாரிப்பில் உருவாகியிருக்கும்  மாறா ட்ரெய்லர்,

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஜென்ம நட்சத்திரம்’ வெளியீட்டுக்கு முன்பே ஹிட்! ஊடக விமர்சனங்களும் முன்னோட்டக் காட்சிகளும் வரவேற்பை பெற்றுள்ளன!

    0 shares
    Share 0 Tweet 0
  • பான் இந்தியா படமாக இருந்தால், தளபதி விஜயை முதல்வராக அல்லாமல் பிரதமராகவே காட்டியிருப்பேன் – ‘யாதும் அறியான்’ இயக்குநர் அதிரடி பேச்சு

    0 shares
    Share 0 Tweet 0
  • படம் எடுப்பதை விட புரமோட் செய்வது தான் முக்கிய வேலையாக உள்ளது – ‘வள்ளிமலை வேலன்’ இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் V சேகர்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஓஹோ எந்தன் பேபி’ திரைப்படம் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகர் ருத்ரா!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

சட்டமும் நீதியும் – விமர்சனம்

July 19, 2025
திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்கும் கவின்- பிரியங்கா மோகன் ஜோடி

திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்கும் கவின்- பிரியங்கா மோகன் ஜோடி

July 19, 2025

கெவி – விமர்சனம் ரேட்டிங் – 4 / 5

July 19, 2025

ஜென்ம நட்சத்திரம் – விமர்சனம் ரேட்டிங் – 3.5 / 5

July 19, 2025

நடிகர் உன்னி முகுந்தனின் UMF மற்றும் ஐன்ஸ்டீன் மீடியாவுடன் இணைந்து லெஜெண்ட்ரி இயக்குநர் ஜோஷி இயக்கும் அடுத்த பட அறிவிப்பு அவரது பிறந்தநாளன்று வெளியாகியுள்ளது!

July 19, 2025

திரையிலும், நிஜ வாழ்க்கையிலும் முத்திரை பதித்துவரும் நடிகை பவ்யா த்ரிகா

July 19, 2025
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.