ADVERTISEMENT
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

கப்ஜா – விமர்சனம்

by Tamil2daynews
March 18, 2023
in விமர்சனம்
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

சுதந்திரத்துக்கு முன் பிரிட்டிஷ் இந்தியாவில் மூவர்ணக் கொடியை ஏற்றிய குற்றத்திற்காக ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் பிரிட்டிஷ் அரசால் தூக்கிலிடப்படுகிறார். அதன்பின் அவருடைய மனைவி இரு மகன்களுடன் வேறொரு நகரத்தில் குடியேறுகிறார். அவரது மகன் உபேந்திரா வளர்ந்து விமானப்படை விமானியாக மாறுகிறார்.

உபேந்திரா சிறுவயதிலிருந்தே மன்னர் குடும்பத்தை சேர்ந்த ஸ்ரியா சரணை காதலித்து வருகிறார். இதற்கிடையில் உபேந்திராவின் சகோதரர் மாஃபியா டான்களால் கொல்லப்படுகிறார். தனது சகோதரனின் மரணத்திற்கு பழிவாங்குவதற்காக பாதாள உலகத்தின் மோசமான உலகில் நுழைய வேண்டிய கட்டாயத்தில் உபேந்திராவுக்கு ஏற்படுகிறது. பின்னர் மாஃபியாவின் தலைவனாக உபேந்திரா மாறுவது மட்டுமின்றி, ஸ்ரேயாவின் தந்தை விருப்பத்திற்கு மாறாக அவரை திருமணம் செய்து கொள்கிறார். இறுதியில் என்ன ஆனது? ஸ்ரேயாவின் தந்தையை எப்படி சமாளித்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை. தனித்துவமிக்க படங்களுக்கு பெயர் பெற்ற உபேந்திரா மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுக்களை பெறுகிறார்.Kabzaa teaser: Upendra, Kichcha Sudeepa promise a large scale pan-Indian film | Entertainment News,The Indian Express

அவரது ஸ்க்ரீன் பிரசன்ஸ் அழகாக உள்ளது. மாஸான வசனங்களின் மூலம் கவனம் ஈர்க்கிறார். ஸ்ரேயாவின் நடிப்பு ரசிகர்களை ஈர்த்துள்ளது. அவரின் எதார்த்த உடல் மொழி நடிப்பின் மூலம் பாராட்டை பெறுகிறார். சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் கிச்சா சுதீப் மற்றும் ஷிவா ராஜ்குமாரின் கதாப்பாத்திரங்கள் மனதில் நிற்கிறது. குறுகிற நிமிடங்களே வந்தாலும் கவனம் ஈர்க்கவைக்கிறது. மேலும் படத்தில் இடம்பெறுகின்றன பல கதாப்பாத்திரங்கள் அவர்களின் பணியை சிறப்பாக செய்துள்ளனர். ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த மாஸான படத்தை கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் இயக்குனர் சந்துரு. படத்தின் கதாப்பாத்திரங்கள் அதிகமாக உள்ளதால் புரிந்து கொள்வது மிகவும் சிரமமாக உள்ளது.

Real Star Upendra's Kabza Movie Stills

கிச்சா சுதீப் மற்றும் ஷிவா ராஜ்குமாரின் கதாப்பாத்திரங்கள் மனதில் பதிகிறது. படத்தை கேஜிஃப் போன்று இயக்க இயக்குனர் முடிவு செய்திருக்கிறார் என்பது படத்தின் பல இடங்களில் தென்படுகிறது. கேஜிஃப் படத்தின் வாசம் பல இடங்களில் தோன்றவைக்கிறது. படத்தின் வன்முறை காட்சிகள் எதார்த்தத்தை மீறுவதாகவுள்ளது. படத்தின் காட்சிகளை சிறப்பாக காட்சிப்படுத்தியுள்ளார் ஒளிப்பதிவாளர் ஏஜி.ஷெட்டி. ரவி பஸ்ருரின் பின்னணி இசை ஓகே. பாடல்களில் கவனம் செலுத்தியிருக்கலாம்.

Previous Post

D3 – விமர்சனம்

Next Post

கண்ணை நம்பாதே – விமர்சனம்

Next Post

கண்ணை நம்பாதே - விமர்சனம்

Popular News

  • சமுத்திரக்கனி நடிக்கும்   “திரு.மாணிக்கம்” ஃபர்ஸ்ட் லுக் !!

    சமுத்திரக்கனி நடிக்கும் “திரு.மாணிக்கம்” ஃபர்ஸ்ட் லுக் !!

    0 shares
    Share 0 Tweet 0
  • பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • ‘அவ்வையாரும், அதியமானும் சேர்ந்து சரக்கு அடித்தார்கள்’ என்கிறார் நாஞ்சில் சம்பத்!

    0 shares
    Share 0 Tweet 0
  • நாகேஷ் எனும் மகா கலைஞன்..!

    0 shares
    Share 0 Tweet 0
  • மூன்று நண்பர்களை காதலிக்கும் நாயகியாக மேக்னா நடிக்கும் ‘நான் வேற மாதிரி’..!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

சர்வதேச அளவில் பார்வையாளர்களை கவரும் வகையில் உருவாகிவரும் கார்த்தியின் 25வது படம் ‘ஜப்பான்’

September 21, 2023

பான்-இந்தியா கதையம்சம் கொண்ட திரைப்படத்திற்காக செல்வராகவனுடன் இணையும் தெலுங்கு, மலையாள முன்னணி நட்சத்திரங்கள்

September 21, 2023

அல்லு அரவிந்த் பெருமையுடன் வழங்கும் #NC23 படத்தில் இணைந்தார் நடிகை சாய் பல்லவி

September 21, 2023

உலகளவில் 1000 கோடி ரூபாய் வசூலை நெருங்கும் ஷாருக்கானின் ‘ஜவான்’

September 21, 2023

மானிட்டரில் பார்க்கும்போதே அழுதுவிட்டார் இயக்குநர்

September 21, 2023
சமுத்திரக்கனி நடிக்கும்   “திரு.மாணிக்கம்” ஃபர்ஸ்ட் லுக் !!

சமுத்திரக்கனி நடிக்கும் “திரு.மாணிக்கம்” ஃபர்ஸ்ட் லுக் !!

September 22, 2023
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2023 Tamil2daynews.com.

No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2023 Tamil2daynews.com.

error: Content is protected !!