• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

மாஸ் ஆக்சன் கலந்த படமாக ஜூலை 7ஆம் தேதியில் வெளியாகும் ‘கடுவா’

by Tamil2daynews
June 29, 2022
in சினிமா செய்திகள்
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
மாஸ் ஆக்சன் கலந்த படமாக ஜூலை 7ஆம் தேதியில்  வெளியாகும் ‘கடுவா’

நடிகர் பிரித்விராஜ் நடிப்பில் ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கடுவா’. இந்த படத்தை பிரித்விராஜ் புரடக்சன்ஸ் சார்பில் சுப்ரியா மேனன் மற்றும் இணை தயாரிப்பாளராக மேஜிக் பிரேம்ஸ் லிஸ்டின் ஸ்டீபன் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். விவேக் ஓபராய் சம்யுக்தா மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜினு ஆபிரகாம் கதை திரைக்கதை மற்றும் வசனம் எழுதி உள்ளார்.

வரும் ஜூலை 7 ஆம் தேதி இந்த படம் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் வெளியாக இருக்கிறது. இதை முன்னிட்டு சென்னையில் இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு கிரீன் பார்க் ஹோட்டலில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக தமிழ் திரையுலக சேர்ந்த பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி சவுத்ரி, விடிவி கணேஷ், நடிகர்கள் ஆர்யா, ஜீவா, தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான கோபுரம் பிலிம்ஸ் அன்புச்செழியன், தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான திருப்பதி பிரசாத் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் பேசிய பிரித்விராஜ், “மலையாள திரையுலகில்  தொடர்ந்து புதுப்புது கதையம்சத்துடன் படங்கள் வெளியாகி வருகின்றன. அதே சமயம் மாஸ் ஆக்சன் படம் வெளியாகி நீண்ட நாட்கள் ஆகிவிட்டது மலையாளத்தில் இப்படி ஒரு மாஸ் ஆக்சன் படம் உருவாகாதா என ரசிகர்களுக்கு மட்டுமல்ல எனக்கே கூட அந்த எண்ணம் தோன்றியது. அதன் விளைவாகத்தான் இந்த கடுவா திரைப்படம் உருவாகியுள்ளது.

இதைத்தொடர்ந்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் நிருபர்களின் கேள்விக்கு பதில் அளித்து பேசிய பிரித்திவிராஜ் பான் இந்திய படங்கள், ஓவர்சீஸ் உரிமை, மாறிவரும் ஜானர் என பல விஷயங்கள் குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார். அதைத்தொடர்ந்து பல யூடியூப் சேனல்களுக்கும் பிரத்தியோக பேட்டி அளித்தார் பிரித்விராஜ்.

இந்தப்படம் பல வருடங்களுக்கு முன் பிரபலமாக இருந்த, தற்போதும் உயிரோடு இருக்க கூடிய கடுவாகுன்னால் குருவச்சன் ஜோஸ் என்பவரை பற்றிய கதையாக உருவாகி இருக்கிறது.

பிரித்விராஜ் முதல்முறையாக இயக்கிய லூசிபர் படத்தில் வில்லனாக நடித்த விவேக் ஓபராய் இந்த படத்தில் மீண்டும் பிரித்விராஜ் உடன் இணைந்து போலீஸ் அதிகாரியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்
கிட்டத்தட்ட பத்து வருடம் கழித்து இயக்குனர் ஷாஜி கைலாஷும் பிரித்விராஜும் இணைந்து உருவாகியுள்ள படம் என்பதால் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது கடுவா திரைப்படம்.
நடிகர்கள் ;

பிரித்விராஜ், விவேக் ஓபராய், சம்யுக்தா மேனன், சித்திக், விஜயராகவன், கலாபவன் ஷாஜன், திலீப் போத்தன், அஜு வர்கீஸ், சுதேவ் நாயர், சாய்குமார், அர்ஜுன் அசோகன், சீமா மற்றும் பலர்.

தொழில்நுட்பக் குழுவினர்
டைரக்ஷன் ; ஷாஜி கைலாஷ்
தயாரிப்பு ; சுப்ரியா மேனன் (பிரித்விராஜ் புரொடக்ஷன்ஸ்) & லிஸ்டின் ஸ்டீபன் (மேஜிக் பிரேம்ஸ்)
கதை  ; ஜினு ஆபிரகாம்
இசை ; ஜேக்ஸ் பிஜாய்
ஒளிப்பதிவாளர்  ; அபிநந்தன் ராமானுஜம்
படத்தொகுப்பு ; சமீர் முகமது
தயாரிப்பு வடிவமைப்பு  ; மோகன்தாஸ்
வசனம் ; ஆர்பி பாலா
பாடல்கள் ; சாமிஜி, ஆர்பி பாலா
ஒலிப்பதிவாளர் ; அருண் குமார்
ஒளிப்பதிவு ஸ்டுடியோ ; ஆர்பி ஸ்டுடியோ
ஆடை வடிவமைப்பு ; ஸ்டஃபி சேவியர், சமீரா சனீஸ்
சண்டைக் காட்சி ; கனல்கண்ணன் & மாபியா சசி
தயாரிப்பு நிர்வாகி ; மனோஜ்.என்
துணை தயாரிப்பாளர் ; சந்தோஷ் கிருஷ்ணன்
நிர்வாக தயாரிப்பாளர் ; நவீன் பி.தாமஸ்
நிர்வாகம் மற்றும் விநியோக தலைமை ; பபின் பாபு
தயாரிப்பு மேற்பார்வை ; அகில் யசோதரன்
முதன்மை துணை இயக்குனர் ; மனீஷ் பார்கவன்
தயாரிப்பு உறுதுணை ; சஞ்சு.ஜே
ஒப்பனை ; ஷாஜி கட்டக்கடா
புகைப்படம் ; சைனத் சேவியர்
விஎஃப்எக்ஸ் ; கோக்கனட் பஞ்ச்
விளம்பர வடிவமைப்பு ; ஆனந்த் ராஜேந்திரன்
புரமோஷன் ஆலோசகர் ; விபின் குமார்
மார்க்கெட்டிங் ; போபக்சியோ
Previous Post

இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள ‘எ பியூட்டிஃபுல் பிரேக் அப்’ திரைப்படத்தின் ‘கம் ஃப்ரீ மீ’பாடல் உலக இசை தினமான ஜூன் 21 2022 அன்று வெளியிடப்பட்டது.

Next Post

தமிழ் சினிமாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்த போகும் “நாற்கரப்போர்” திரைப்படம்..!

Next Post

தமிழ் சினிமாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்த போகும் "நாற்கரப்போர்" திரைப்படம்..!

Popular News

  • பேஷன் ஸ்டுடியோஸ், ஆக்ஸெஸ் பிலிம் பேக்டரி, டங்கல் டிவி & RDC மீடியா வழங்கும் ‘மரகத நாணயம்2’ திரைப்படத்தின் முதல் பார்வை ரசிகர்களுக்கு தீபாவளி ட்ரீட்டாக வெளியாகியுள்ளது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜியோஹாட்ஸ்டாரின் புதிய அலுவலக நகைச்சுவைத் தொடர் ‘மிஸ்டர் & மிஸஸ் ஆபிஸ்’ நவம்பர் 18 ஆம் தேதி முதல் ப்ரீமியர் ஆகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ராமாயணா – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • புத்தாண்டு கொண்டாட்டமாக 2027 ஜனவரி 1-ம் தேதி மீண்டும் திரைக்கு வரும் மாண்புமிகு முதல்வர் விஜய்யின் ‘பைரவா’!

    0 shares
    Share 0 Tweet 0
  • டிப்ஸ் ஃபிலிம்ஸ் மற்றும் டிப்ஸ் மியூசிக் நிறுவனங்கள் இம்ரான் ஹாஷ்மியின் இசை மற்றும் ஹாரர் திரைப்படமான ‘ரூஹ்’ (ROOH) படத்தில் இணைகின்றன!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

புத்தாண்டு கொண்டாட்டமாக 2027 ஜனவரி 1-ம் தேதி மீண்டும் திரைக்கு வரும் மாண்புமிகு முதல்வர் விஜய்யின் ‘பைரவா’!

November 12, 2026

டிப்ஸ் ஃபிலிம்ஸ் மற்றும் டிப்ஸ் மியூசிக் நிறுவனங்கள் இம்ரான் ஹாஷ்மியின் இசை மற்றும் ஹாரர் திரைப்படமான ‘ரூஹ்’ (ROOH) படத்தில் இணைகின்றன!

November 12, 2026

பிர்லா ஸ்டுடியோஸ் – நீலம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் நடிகர் கே. மணிகண்டன் நடிக்கும் ‘மக்கள் காவலன்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘இக்னோர் – IGNORE’ வெளியீடு!

November 12, 2026

லைகா புரொடக்ஷன்ஸ் வழங்கும், மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இஞ்சி வெல்லம்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

November 12, 2026
ஹரிசங்கர் நாராயணன் & ஷாரி இணையும் முதல் இருமொழி இன்டி ஆல்பம் பாடல் ‘நீயும் நானும்’!

ஹரிசங்கர் நாராயணன் & ஷாரி இணையும் முதல் இருமொழி இன்டி ஆல்பம் பாடல் ‘நீயும் நானும்’!

November 12, 2026

ஒளிப்பதிவாளர் விஜய் ஆம்ஸ்ட்ராங் இயக்குநராக அறிமுகமாகும் ‘வன மடி’

November 12, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.