• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

Kannan Ravi Group சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பில், நடிகர் ஷாந்தனு நடிக்கும் “இராவண கோட்டம்” திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு !

by Tamil2daynews
May 3, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
67
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

Kannan Ravi Group சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பில், நடிகர் ஷாந்தனு நடிக்கும் “இராவண கோட்டம்” திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு !

 

Kannan Ravi Group சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பில், இயக்குநர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில், ஷாந்தனு நடிப்பில் மண் சார்ந்த  மாறுபட்ட படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “இராவண கோட்டம்”.  மே 12 உலகமெங்கும் திரைக்கு வரவுள்ள நிலையில்,  இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று இனிதே நடைபெறுகிறது.

இந்நிகழ்வில்

எடிட்டர் லாரன்ஸ் கிஷோர் பேசியதாவது…
இப்படத்தின் படப்பிடிப்பு தளத்திற்குச் நான் இரண்டு நாட்கள் சென்றேன் ஆனால் அங்கு என்னால் சுகுமாரன் சாரை பார்த்துப் பேசக்கூட முடியவில்லை.  ஷுட்டிங் அவ்வளவு பிஸியாக இருந்தது. எல்லோரும் என்னிடம் அவரைப் பற்றிக் கேட்டபோது, ஷூட்டிங் முடிந்ததும் நாங்கள் இருவரும் இணைந்து பணி புரிவோம் என்று கூறினேன். அது போலப் படப்பிடிப்பு முடிந்து சென்னை வந்தார் மூன்றே நாட்களில் எங்கள் இருவருக்கும் ஒரு நல்ல பிணைப்பு உருவானது, இந்த படத்தில் நான் பல விஷயங்கள் கற்றுக் கொண்டேன், ஷாந்தனு சார் இந்த படத்தில் மிக அதிகமான உழைப்பைப் போட்டுள்ளார் கண்டிப்பாக அதற்கான பலன் அவருக்குக் கிடைக்கும். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்றி.

ஒளிப்பதிவாளர் வெற்றிவேல் பேசியதாவது..,
மதயானைக் கூட்டம் படத்திற்குப் பிறகு நான் வேலை செய்ய வேண்டும் என்று அதிகம் எதிர்பார்த்த ஒரு இயக்குனர் விக்ரம் சுகுமாரன் சார். அது நடந்து விட்டது , ஷாந்தனு நடிகராக மட்டும் இல்லை இப்படத்தில் அனைத்து வேலைகளையும் செய்தார். கண்ணன் சார் போன்ற சிறப்பான தயாரிப்பாளர் வருவது சினிமா துறைக்கு மிகவும் ஆரோக்கியமானது. அவருக்கு எனது வாழ்த்துக்கள் படம் நன்றாக வந்துள்ளது அனைவரும் இதை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். அனைவருக்கும் நன்றி.
நடிகர் சஞ்சய் பேசியதாவது…,
எனக்கு இந்த மேடை புதிது, நான் 12 வருடமாக பல படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். ஆனால் இந்தப் படம் எனக்குக் கிடைத்தது ஒரு வரம், இயக்குநர் சுகுமாரன் சாருக்கு நான் பெரிதும் கடமைப் பட்டுள்ளேன், இந்தப் படத்திற்காக நிறைய இரத்தம் சிந்தி நடித்துள்ளேன், நான் மட்டும் அல்ல அனைவரும் அப்படித்தான் நடித்தனர். இந்த படத்தின் வாழ்வியல் அம்சங்கள் அப்படி அமைந்துள்ளது, அதற்கு நாங்கள் ஈடு செய்ய வேண்டும் என்று எண்ணினோம்,.இயக்குநர் என்னைப் பெரிய அளவுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று நினைத்தார், எனக்கு அவர் அண்ணனாக இருக்கிறார், அதற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். படத்தில் அனைவரும் எனக்குப் பல விஷயங்களை கற்றுக் கொடுத்தனர், நான்கு வருட போராட்டம் என்றே சொல்லலாம். இரவு பகல் பாராமல் அனைவரும் உழைத்துள்ளோம், உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.

கலை இயக்குநர் நர்மதா பேசியதாவது…
எனக்கு இந்தப் படத்தில் வாய்ப்பளித்த ஷாந்தனு மற்றும் இயக்குநர் சுகுமாரன் சாருக்கு நன்றி,  இது மிகப்பெரிய அனுபவம் பல விஷயங்களை கற்றுக் கொண்டேன், படம் நன்றாக வந்துள்ளது அனைவருக்கும் வாழ்த்துகள் நன்றி.

நடிகை தீபா பேசியதாவது..,
இராவண கோட்டம் படத்தில் நடித்து வந்தது பள்ளிக் கூடத்திற்கு சென்று வந்தது போல இருந்தது, சுகுமார் சாரிடம் ஒரு நாள் நடித்தாலும் நடிப்பு என்றால் என்னவென்று கற்றுக் கொள்ளலாம், இளவரசு அண்ணனின் பேச்சை நான் பல இடங்களில் ரசித்துக் கேட்பேன், இப்படத்தில் அவருடன் பணி புரிந்தது மகிழ்ச்சியாக இருந்தது, தம்பி ஷாந்தனு என்னுடன் சகஜமாக பழகி வந்தார் அதற்கு நன்றி, படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி.
நடிகர் இளவரசு பேசியதாவது..,
இந்தப் படத்தின் கலை இயக்குநர் நர்மதாவிற்கு வாழ்த்துக்கள், விக்ரம் சுகுமாரனிடம் ஒளிப்பதிவாளர் மற்றும் எடிட்டராக பணி செய்வது மிகக் கடினம் இருவருக்கும் மிகப்பெரிய வாழ்த்துகள், இந்தப் படத்தில் தென் மாவட்டத்தில் உள்ள அரசியலைப் பற்றிப் பேசியுள்ளனர். படம் பார்த்த பிறகு உங்களுக்கு தெரியும், தென் பகுதிகளில் பல கஷ்டங்கள் உள்ளது. தண்ணீர் மிகப் பெரிய பிரச்சனையாக உள்ளது , அதற்கான காரணங்களையும் இந்த படத்தில் பேசியுள்ளனர், இயக்குநரை எனக்குப் பல வருடங்கள் முன்பே தெரியும். ஒரு படத்தின் வேலைக்காக மதுரைக்கு அருகில் ஒரு ஊருக்குச் சென்றேன், அப்போது ஒரு நாள் ஒருவர் வீட்டிற்குச் சென்று தண்ணீர் குடித்தேன் அது அவரது வீடுதான், பல நாட்கள் கழித்து அதை என்னிடம் சொன்னார் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஷாந்தனு வெற்றிக்காகப் போராடிக் கொண்டிருக்கும் ஒரு இளைஞன் கண்டிப்பாக இந்த படம் வெற்றி பெறும், தயாரிப்பாளர் கண்ணன் சாருக்கு என் மனமார்ந்த நன்றி, இந்த குழுவினர் உழைப்பை,  மக்களிடம்  நீங்கள் எடுத்துச் செல்ல வேண்டும். அனைவருக்கும் நன்றி.

இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகர் பேசியதாவது..,
மதயானைக் கூட்டம் ஒரு அற்புதமான படைப்பு , இயக்குநர் விக்ரம் சுகுமாரன் சாருடன் இணைந்து பணி செய்தது மிகவும் மகிழ்ச்சி, பெரும் உழைப்பைக் கொடுத்துள்ளார், ஷாந்தனு மிகவும் கஷ்டப்பட்டு இந்தப் படத்தில் வேலை செய்துள்ளார் கண்டிப்பாக அது அனைவரிடமும் சேரும், தயாரிப்பாளர் கண்ணன் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி.

நடிகை கயல் ஆனந்தி பேசியதாவது ,
3 வருட உழைப்பு. பல தடைகளைத் தாண்டி இந்தப் படம் இப்போது வெளியாகத் தயாராகி உள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, யாரும் விட்டுக் கொடுக்காமல் இந்தப் படத்திற்கு உழைத்துள்ளோம். விக்ரம் சுகுமாரன் சார் சினிமாவை மிகவும் ரசித்து வேலை செய்பவர், அவருடன் வேலை செய்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, ஷாந்தனு உடன் இணைந்து நடித்தது மிகவும் சுலபமாக இருந்தது. இந்தப் படம் ராம்நாடு மக்களின் வாழ்க்கை பற்றிப் பேசுவதாக இருக்கும். படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி இந்த படத்தை அனைவரும் தியேட்டரில் வந்து பார்க்க வேண்டும் நன்றி.

நடிகர் ஷாந்தனு பேசியதாவது,
இப்படத்தின் தயாரிப்பாளர் கண்ணன் என் தந்தை எனக்கு என்ன செய்ய வேண்டும் நினைப்பாரோ அதே போல் நான் முன்னேறத் தேவையான அனைத்தையும் செய்தார். அவருக்கு மிகப்பெரும் நன்றி.  இந்தப்படம் சக்கரக்கட்டி படத்திற்குப் பிறகு மக்களிடம் அதிகம் எதிர்பார்க்கப்படுகிற படமாக இருப்பது மிக மகிழ்ச்சியாக உள்ளது. இந்தப் படத்தில் நடிகரைத் தாண்டி, தயாரிப்பு பணிகளும் நான் பார்க்க வேண்டி இருந்தது, தயாரிப்பு மிகக் கடினமான வேலை மிகவும் சிரமப்பட்டேன், படக்குழுவிற்கு நிறைய அனுபவம் இருந்தது,  அனைவரும் இப்படத்திற்காகப் பல நாட்கள் தூங்காமல் வேலை செய்தனர். அனைவருக்கும் மிகப்பெரிய நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நான்கு வருடங்கள் பல விஷயங்களை கற்றுக் கொண்டேன், படம் பார்த்த பிறகு எனக்கு மிகவும் திருப்திகரமாக இருந்தது, கிராமத்துப் பையனாக நடிக்கப் போகிறோம் என்று மகிழ்ச்சியாக இருந்தேன் ஆனால் அது அவ்வளவு எளிதல்ல, காலில் இரத்தம் வர நடித்தேன் எந்த படத்திலும் நான் இதைச் செய்ததில்லை, நான் மட்டும் இல்லை அனைவரும் இது போல கஷ்டப்பட்டு தான் நடித்தனர்,  இந்தப் படத்தில் தென் மாவட்டத்தில் உள்ள அரசியலைப் பற்றிப் பேசியுள்ளனர், இது ஒரு தரமான படைப்பாக இருக்கும், அனைவரும் எங்கள் உழைப்பிற்கு ஆதரவு தர வேண்டும் நன்றி.

இயக்குநர் விக்ரம் சுகுமாரன் பேசியதாவது..,
இந்தப் படத்தில் நான் சிரித்துக் கூட பேசவில்லை, அது கொஞ்சம் குற்ற உணர்வாக இருக்கிறது, இருந்தும் யாரும் என்னை விட்டுக் கொடுக்காமல் பேசினார்கள் அனைவருக்கும் நன்றி. இளவரசன் அண்ணனை 15 வருடங்களுக்கு முன்னதாகவே என் படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என நினைத்து விட்டேன், இந்தப் படத்தில் அவரை நடிக்க வைத்தது எனக்கு மிகப் பெருமையான விஷயம், நான் ஒரு பிடிவாதமான இயக்குநர், யாரிடமும் இரக்கம் காட்டவில்லை அதற்காக நன்றியும் மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறேன். ஆனால் இனிமேலும் அப்படித்தான் இருப்பேன் அதுதான் என் பாவனை, எனக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பு அது , படக்குழுவினர் அனைவருக்கும் நன்றிக்கடன் பட்டுள்ளேன், இந்தப் படம் மிகப்பெரிய நெருக்கடியில் தான் உருவானது, அதற்கு ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி,. இந்தப் படத்தில் பெரும் உழைப்பைக் கொடுத்துள்ளார் நடிகர் ஷாந்தனு, மிகப்பெரும் பாரத்தைத் தலையில் ஏற்றிக் கொண்டார், அவருக்கு இந்தப் படம் பெயர்ச் சொல்லும் படைப்பாக இருக்கும். கண்டிப்பாக இது மிகப்பெரிய வெற்றியாக அமையும், தயாரிப்பாளர் கண்ணன் சாருக்கு நன்றி மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. பத்திரிக்கையாளர்கள் இதை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன் நன்றி.

இந்தப் படத்தில் நாயகனாக ஷாந்தனு நடிக்க, நாயகியாக கயல் ஆனந்தி நடிக்கிறார். இயக்குநர் விக்ரம் சுகுமாரன் எழுதி இயக்க, ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பு செய்துள்ளார். தயாரிப்பாளர்  கண்ணன் ரவி, KRG Group Of Companies சார்பில் இப்படத்தைத் தயாரித்துள்ளார். “இராவண கோட்டம்” திரைப்படம் மே 12 உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Previous Post

தோனி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்கும் ‘எல் ஜி எம்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு,

Next Post

பென் அஃப்லெக் வழங்கும் ஏஐஆர் (AIR) மே 12 முதல் இந்தியாவில் பிரைம் வீடியோவில் நேரடியாக ஒளிபரப்பப்படும்

Next Post

பென் அஃப்லெக் வழங்கும் ஏஐஆர் (AIR) மே 12 முதல் இந்தியாவில் பிரைம் வீடியோவில் நேரடியாக ஒளிபரப்பப்படும்

Popular News

  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • பூந்தமல்லியில் ஜஸ்’ ஆன்கோவின் (Jus’ Onco) 4-வது புற்றுநோய் சிகிச்சை மையம் திறப்பு தரமான புற்றுநோய் சிகிச்சையை குறைந்த செலவில் மக்களுக்கு அருகில் கொண்டு சேர்க்கும் புதிய முயற்சி

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கொலை’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • இணையத்தில் வைரலாகும் திருமதி உபாசனா காமினேனி கொனிடேலா – ராம் சரண் தம்பதிகளின் வளைகாப்பு விழாவின் பிரத்யேக புகைப்படங்கள்

    0 shares
    Share 0 Tweet 0
  • பிரபுதேவாவின் ‘முசாசி’ அப்டேட்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பூந்தமல்லியில் ஜஸ்’ ஆன்கோவின் (Jus’ Onco) 4-வது புற்றுநோய் சிகிச்சை மையம் திறப்பு தரமான புற்றுநோய் சிகிச்சையை குறைந்த செலவில் மக்களுக்கு அருகில் கொண்டு சேர்க்கும் புதிய முயற்சி

பூந்தமல்லியில் ஜஸ்’ ஆன்கோவின் (Jus’ Onco) 4-வது புற்றுநோய் சிகிச்சை மையம் திறப்பு தரமான புற்றுநோய் சிகிச்சையை குறைந்த செலவில் மக்களுக்கு அருகில் கொண்டு சேர்க்கும் புதிய முயற்சி

August 20, 2026

ஆல் பாஸ்’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !

August 17, 2026

குட்வில் எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனத்தின் ‘ஆபரேஷன் டிரால்’ படத்தின் முதல் பாடலான ‘ஜெய் ஹோ’ சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாகியுள்ளது!

August 17, 2026

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்ட முனீஸ்காந்த் நடிக்கும் ‘தி டோர்ம்- The Dorm’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

August 17, 2026

’நியூ அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ புரோமோவில் மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் மிகப்பெரும் வில்லனான ராபர்ட் டவுனி ஜூனியரின் கதை!

August 17, 2026

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 51 ஆண்டுகாலப் பயணம்: ‘தர்மன்’ படப்பிடிப்புத் தளத்தில் கொண்டாடப்பட்ட ஒரு வரலாற்றுச் சாதனை

August 17, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.