• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

நான் என் காட்சி படிமங்களை பெரும் சிரத்தையோடு உருவாக்குகிறேன். 

by Tamil2daynews
March 26, 2021
in சினிமா செய்திகள்
0
நான் என் காட்சி படிமங்களை பெரும் சிரத்தையோடு உருவாக்குகிறேன். 
0
SHARES
18
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

அனைவருக்கும் அன்பின் வணக்கம்.


கர்ணன் திரைப்படம் தொடங்கிய நாளிலிருந்து இன்று வரை நீங்கள் அளித்துவரும் ஆதரவும் நம்பிக்கையும் எனக்கு பெரும் உத்வேகத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது. ஒரு இளம் இயக்குநரான என் மீதும் நீங்கள் காட்டும் எதிர்பார்ப்பும் மரியாதையும் தான் சினிமா என்னும் மாயக்கலையை எவ்வளவு பொறுப்போடு நான் அணுக வேண்டும் என்பதை எனக்கு கற்றுகொடுக்கிறது. அத்தகைய பொறுப்புணர்ச்சியோடும் கலைத்தன்மையோடும்தான் நான் என் காட்சி படிமங்களை பெரும் சிரத்தையோடு உருவாக்குகிறேன்.
பண்டாரத்தி புராணமும் அப்படி உருவாக்கபட்டதுதான். சொந்த அத்தையாக அக்காவாக ஆச்சியாக பெரியம்மாவாக என் நிலத்தோடும் என் இரத்தத்தோடும் கலந்து காலத்தின் தேவதைகளான பண்டாரத்திகளின் கதைகளைத்தான் நான் என் திரைக்கதையின் கூழாங்கற்களாக சிதறவிட்டு காட்சிபடுத்தினேன். ஆனால் நம் சமூக அடுக்குமுறை உளவியலில் சில பெயர்கள் ஏற்படுத்தும் தாக்கம் என்பது புரிந்துகொள்ள முடியாததாகவும் விலக முடியாததாகவும் இருக்கிறது. அதன் அடிப்படையில் பண்டாரத்தி புராணம் பாடலுக்கு ஏற்பட்டிருக்கும் விவாதத்தையும் வருத்தத்தையும் கோரிக்கையையும் முடித்து வைப்பதற்காக இனி பண்டாரத்தியை மஞ்சனத்தி என்று அழைக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறோம். தேவதைகள் எந்த பெயரில் அழைக்கபட்டாலென்ன … பெயர் மாறுவதால் அவர்கள் காட்டும் மாட வெளிச்சம் குறைந்துவிட போகிறதா என்ன? இனி ஏமராஜாவின் மாடவிளக்காக மஞ்சனத்தி இருப்பாள். இனி ஏமன் கர்ணனை ஆட வைப்பதற்காக மஞ்சனத்தி புராணத்தை பாடுவான் கர்ணன் ஆடுவான் .ஆதரவளித்த அனைவருக்கும் நன்றியும் ப்ரியமும் எப்போதும்…காதலே பிரபஞ்ச மாடத்தின் வெளிச்சம்❤️
—-
மாரிசெல்வராஜ்
Previous Post

நடிகர் அசோக் செல்வனின் இதயம் கனிந்த நன்றிகள் !

Next Post

கலைஞர் கருணாநிதி வழியில் அமைச்சர் ஜெயக்குமார்….நம்ப முடியாத உண்மை!

Next Post
கலைஞர் கருணாநிதி வழியில் அமைச்சர் ஜெயக்குமார்….நம்ப முடியாத உண்மை!

கலைஞர் கருணாநிதி வழியில் அமைச்சர் ஜெயக்குமார்....நம்ப முடியாத உண்மை!

Popular News

  • நடிகர் வி ஆர் தினேஷ் நடிக்கும் 26 வது படம் பந்தா கேங்ஸ்.

    0 shares
    Share 0 Tweet 0
  • திரையரங்குகளில் குடும்ப பார்வையாளர்களின் கைத்தட்டலிலும் கிளைமாக்ஸில் முத்துமணி பாடலின் ஆரவாரத்திலும் ‘டோரதி’ திரைப்படத்தின் வெற்றிப்பயணம் தொடர்கிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • “மூன்றாம் பாலினத்தவர்களின் வாழ்க்கை மற்றும் உணர்வுகளை ஆழமாகப் புரிந்துகொள்ள ‘டோரதி’ திரைப்படம் உதவுகிறது”… சகோதரன் அமைப்பினர் பாராட்டு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஃபஹத் பாசில் நடிக்கும் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ (Don’t Trouble The Trouble’ ) படத்தின் ப்ரீ- ரிலீஸ் ஈவென்ட்

    0 shares
    Share 0 Tweet 0
  • அனிருத்தின் அல்புகெர்க்கி ரெக்கார்ட்ஸ் வெளியிட்ட ஸ்மித் ஆஷர் இசையில் உருவான ‘அன்னக்கிளியே’ மியூசிக் வீடியோ ஆல்பம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

நடிகர் வி ஆர் தினேஷ் நடிக்கும் 26 வது படம் பந்தா கேங்ஸ்.

September 29, 2026

ஃபஹத் பாசில் நடிக்கும் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ (Don’t Trouble The Trouble’ ) படத்தின் ப்ரீ- ரிலீஸ் ஈவென்ட்

September 29, 2026

நடிகர் ரன்பீர் கபூர் பிறந்தநாளில் ‘ராமாயணா’ படக்குழு வெளியிட்ட சிறப்பு BTS காட்சிகள்!

September 29, 2026

அனிருத்தின் அல்புகெர்க்கி ரெக்கார்ட்ஸ் வெளியிட்ட ஸ்மித் ஆஷர் இசையில் உருவான ‘அன்னக்கிளியே’ மியூசிக் வீடியோ ஆல்பம்

September 29, 2026

கே.மணிகண்டன் நடிக்கும் ‘மக்கள் காவலன்’ வெளியீட்டு தேதி அறிவிப்பு

September 29, 2026

திரையரங்குகளில் குடும்ப பார்வையாளர்களின் கைத்தட்டலிலும் கிளைமாக்ஸில் முத்துமணி பாடலின் ஆரவாரத்திலும் ‘டோரதி’ திரைப்படத்தின் வெற்றிப்பயணம் தொடர்கிறது!

September 29, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.