உலகெங்கும் செப்டம்பர் 30 முதல் பொன்னியின் செல்வன்..!
சுபாஸ்கரன் லைகா புரொடக்ஷன்ஸ், மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து வழங்கும், மணி ரத்னம் இயக்கியுள்ள “பொன்னியின் செல்வன்” படம் வரும் 30-ம் தேதி வெளியாகிறது. இதற்கான இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடைபெறுகின்றன.
படத்தின் வேலைகள் ஒருபுறம் நடைபெறும் நிலையில், இன்னொரு புறம் படத்தை பிரபலப்படுத்தும் வேலைகளில் நடிகர் நடிகைகள் இறங்கியுள்ளனர்.
விக்ரம் தன்னுடைய ட்விட்டர் பகுதியில் இருந்த பெயரை ஆதித்த கரிகாலன் என மாற்றியுள்ளார். அதேபோல் 55 லட்சம் Follower-களை கொண்ட த்ரிஷா தன்னுடைய பெயரை குந்தவை என பதிவிட்டுள்ளார். மேலும் Profile புகைப்படங்களையும் பொன்னியின் செல்வன் படத்தில் வரும் தங்கள் கதாபாத்திரதின் புகைப்படங்களை வைத்துள்ளனர்.
இதுதவிர டிவிட்டர் பதிவுகளை பொன்னியின் செல்வன் கதையோட்டத்துடன் கூடிய உரையாடல் பாணியில் நிகழ்த்துகின்றனர்.
இந்தப் படத்தில் ஆதித்த கரிகாலன் விக்ரமின் நண்பன் வந்திய தேவனாக கார்த்தி நடித்துள்ளார். அதேபோல் தங்கை குந்தவையாக த்ரிஷாவும், தம்பி அருண்மொழியாக ஜெயம் ரவியும் நடித்துள்ளனர்.
விக்ரமின் பதிவுக்கு பதிலளித்து வந்திய தேவன் கார்த்தி பதிவிட்டுள்ளார். அதில், “இளவரசே உங்களுக்காக தஞ்சை முதல் லங்கை வரை சென்ற களைப்பே இன்னும் போகவில்லை. As I am suffering from fever I want work from home. வீடியோ காலில் இளவரசியிடம் பேசி sorry சொல்லி விடுகிறேன். Pls excuse me” என கூறியுள்ளார்.
இவர்களின் உரையாடல்களால் அடித்து அடுத்து என்ன என்று ரசிகர்கள் குஷியாகிவிட்டனர் . இவை அனைத்தும், டிவிட்டர் உரையாடலாக இருந்தாலும், படத்தின் கதை தன்மையிலும், கதாபாத்திரங்களின் பின்னோட்டத்துடனுமே இருக்கிறது.
இவர்களின் இந்த இரண்டு பதிவுகளும் பொன்னியின் செல்வன் படத்தை சமூக வலைதளங்களில் பிரபலப்படுத்த அடிதளமாக அமைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.