• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Advertisement
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

அறிமுக நாயகியை போனில் அழைத்த வைரமுத்து..!

by Tamil2daynews
March 8, 2022
in சினிமா செய்திகள்
0
அறிமுக நாயகியை போனில்  அழைத்த வைரமுத்து..!
0
SHARES
30
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
தமிழ் சினிமாவில் வருடத்திற்கு குறைந்த பட்சம் ஐம்பது அறிமுக கதாநாயகிகளாவது வந்துகொண்டே தான் இருக்கிறார்கள். ஆனால் இதில் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டு அடுத்தடுத்த படிகளில் ஏறி செல்பவர்கள் மிகவும் குறைவே.. ஆனால் ஒருசில நடிகைகள் மட்டும் ஒரு படம் வெளியாவதற்குள்ளாகவே அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தம் ஆகி சட்டென ஒரு புகழ் வெளிச்சத்திற்குள் வந்து விடுவார்கள்.. அப்படிப்பட்டவர்களில் ஒருவர் தான் அறிமுக நடிகையாக களம் இறங்கியுள்ள அக்மார்க் தமிழ்பொண்ணு தீப்ஷிகா.ஆம். தமிழ்நாட்டை சேர்ந்த பெண்கள் திரையுலகில் நுழைவதே அரிது, அப்படியே நுழைந்தாலும் அவர்களுக்கு இங்கே பெரிய வரவேற்பில்லை என்கிற வாதத்தை எல்லாம் உடைத்து நொறுக்கி, கடந்த ஒரு வருடத்திற்குள் தமிழில் மூன்று, தெலுங்கில் மூன்று என அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார் நடிகை தீப்ஷிகா. கவிப்பேரரசு வைரமுத்துவே போனில் அழைத்து பாரட்டும் அளவுக்கு ஒரு பரபரப்பு வட்டத்திற்குள்ளும் வந்துள்ளார்.
Lyricist Vairamuthu Appreciates Newcomer Deepshika | Vairamuthu Appreciates Actress: விஜய் பட இயக்குநர் கொடுத்த வாய்ப்பு.. வைரமுத்துவிடம் இருந்து வந்த போன்கால்.. பாராட்டு ...
சென்னையிலேயே பிறந்து வளர்ந்து படித்த தீப்ஷிகா, தானாக விரும்பி சினிமாவில் நுழைவதற்கு முன்னதாக சினிமாவே அவரை தேடி வந்துவிட்டது என்றுகூட சொல்லலாம்.. ரேணிகுண்டா, கருப்பன் உள்ளிட்ட படங்களை இயக்கிய பன்னீர்செல்வம் தான் இயக்கும் படத்திற்கான நடிகைகள் தேடலில் வைத்த ஆடிஷனில் கலந்துகொண்ட தீப்ஷிகா, இப்போது அந்தப்படத்தில் நடித்து முடித்தும் விட்டார். இந்தப்படத்தில் ஒரு பட்டாம்பூச்சி போல அவரது கதாபாத்திரம் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டு உள்ளதாம்.
இந்தப்படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான மாயா, மாநகரம் உள்ளிட்ட படங்களை தயாரித்த பொட்டன்ஷியல் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் விக்ரம் பிரபுவுடன் இணைந்து நடிக்கிறார் தீப்ஷிகா.. இந்தப்படத்தில் இவரது கதாபாத்திரம் சர்ப்ரைஸ் மற்றும் ட்விஸ்ட் கலந்த ஒன்றாக உருவாக்கப்பட்டுள்ளது… தமிழில் நடித்துக்கொண்டு இருக்கும்போதே தெலுங்கில் பிரபல நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் ஒன்றில் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்ட தீப்ஷிகா, அந்தப்படத்திற்கான வெளிநாட்டு படிப்பிடிப்பில் நடித்துவிட்டு, தற்போது ஹைதராபாத்தில் நடக்கும் ஷெட்யூலில் கலந்துகொண்டு நடித்து வருகிறார். இது காதல் கலந்த உணர்வுப்பூர்வமான படமாக உருவாகிறது. இதுதவிர தெலுங்கு ஹீரோ நவீன் சந்திராவுடன் ஒரு படத்தில் நடித்து முடித்தும் விட்டார். கைவசம் இன்னொரு தெலுங்கு படமும் வைத்துள்ளார்.படங்களில் நடித்துக்கொண்டிருந்த சமயத்தில் வந்தது தான் கவிப்பேரரசுவின் கனவு காவியமான ‘நாட்படு தேறல்’ என்கிற ஆல்பத்தில் நடிக்கும் வாய்ப்பு. இலக்கியத்தில் ஒரு புதிய முயற்சியாக நூறு பாடல்களை கொண்டு அவர் உருவாக்கி வரும் நாட்படு தேறல் என்கிற ஆல்பத்தில் இடம்பெறும் பாடல்கள் ஒவ்வொன்றையும் முன்னணி இயக்குனர்கள் இயக்கி வருகின்றனர்.
அந்தவகையில் இந்த ஆல்பத்தில் இடம்பெறும் கேசாதிபாதம் என்கிற பாடலில் நடன ஆசிரியையாக நடித்துள்ளார் தீப்ஷிகா. ஒரு பெண்ணின் தலைமுதல் பாதம் வரை அவளது அவயங்களை ஒவ்வொன்றாக இயற்கையுடன் ஒப்பிட்டு வர்ணித்து இந்த பாடலை எழுதியுள்ளார் வைரமுத்து. இந்தப்பாடலை விஜய் நடித்த பைரவா படத்தை இயக்கிய இயக்குனர் பரதன் தான் இயக்கியுள்ளார்.இந்தப்பாடலுக்கான படப்பிடிப்பு எல்லாம் முடிந்து, கிட்டத்தட்ட அதை மறந்தே போயிருந்த சூழலில், திடீரென ஒருநாள் கவிப்பேரரசு வைரமுத்துவிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தபோது முதலில் தீப்ஷிகாவால் அதை நம்பத்தான் முடியவில்லை..
“மாநாடு படம் பார்த்துவிட்டு தியேட்டரை விட்டு வெளியே வந்த சமயத்தில் புதிய நம்பரில் இருந்து ஒரு அழைப்பு வந்தது.. நான் வைரமுத்து பேசுகிறேன் என அவர் பேசியபோது, கூட்டத்தில் இருந்த நான் குழப்பம் ஒருபக்கம், பிரமிப்பு ஒருபக்கம் என ஸ்தம்பித்து போனேன்.. ஒருவேளை யாராவது கலாட்டா செய்கிறார்களோ என்று கூட தோன்றியது..ஆனால் அதன்பின் பேசுவது கவிப்பேரரசர் தான் என உணர்ந்ததும் எனக்கு பேச்சே வரவில்லை.. கேசாதிபாதம் பாடலில் நடித்துள்ள நான் அந்தப்பாடலுக்கே உயிர்கொடுத்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளதாக பாராட்டிய வைரமுத்து சார், தமிழ்சினிமாவில் உனக்கு நல்லதொரு இடம் காத்திருக்கிறது என வாழ்த்தினார்.. தமிழ் சினிமாவின் மிகப்பெரிய ஜாம்பவான், அவராகவே அழைத்து வாழ்த்தும் அளவுக்கு எனது வேலையை சிறப்பாக செய்திருக்கிறேன் என்கிற மகிழ்ச்சியும் பெருமிதமும் ஏற்பட்டது” என சிலாகித்து பேசுகிறார் தீப்ஷிகா.
Previous Post

கவர்னரும் எம்எல்ஏ வும் இணைந்த மகளிர் தினம்…

Next Post

பிரபாஸ் நடித்துள்ள ‘ராதே ஷ்யாம்’ படத்தின் தயாரிப்பாளர்கள் NFT பிரத்தியேக சேகரிப்புகளை வெளியிட உள்ளனர்!

Next Post
ஆக்க்ஷன் கிங் உடன் ஐஸ்வர்யா ராஜேஷ் இணையும் புதிய படம்..!

பிரபாஸ் நடித்துள்ள ‘ராதே ஷ்யாம்’ படத்தின் தயாரிப்பாளர்கள் NFT பிரத்தியேக சேகரிப்புகளை வெளியிட உள்ளனர்!

Popular News

  • மீண்டும் இணைந்த “பிளாக்” வெற்றிப்படக்கூட்டணி, “ஜீவா 46” கோலாகலத் துவக்கம்!!

    0 shares
    Share 0 Tweet 0
  • திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்கும் கவின்- பிரியங்கா மோகன் ஜோடி

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஜென்ம நட்சத்திரம்’ வெளியீட்டுக்கு முன்பே ஹிட்! ஊடக விமர்சனங்களும் முன்னோட்டக் காட்சிகளும் வரவேற்பை பெற்றுள்ளன!

    0 shares
    Share 0 Tweet 0
  • பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வழங்க , Passion ஸ்டூடியோஸ், ஜி ஸ்க்வாட், தி ரூட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் யூட்யூப் சென்சேஷனல் ஐகான்கள் பாரத் & நிரஞ்சனின் “Mr. பாரத்” படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது!

    0 shares
    Share 0 Tweet 0
  • பான் இந்தியா படமாக இருந்தால், தளபதி விஜயை முதல்வராக அல்லாமல் பிரதமராகவே காட்டியிருப்பேன் – ‘யாதும் அறியான்’ இயக்குநர் அதிரடி பேச்சு

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

சட்டமும் நீதியும் – விமர்சனம்

July 19, 2025
திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்கும் கவின்- பிரியங்கா மோகன் ஜோடி

திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்கும் கவின்- பிரியங்கா மோகன் ஜோடி

July 19, 2025

கெவி – விமர்சனம் ரேட்டிங் – 4 / 5

July 19, 2025

ஜென்ம நட்சத்திரம் – விமர்சனம் ரேட்டிங் – 3.5 / 5

July 19, 2025

நடிகர் உன்னி முகுந்தனின் UMF மற்றும் ஐன்ஸ்டீன் மீடியாவுடன் இணைந்து லெஜெண்ட்ரி இயக்குநர் ஜோஷி இயக்கும் அடுத்த பட அறிவிப்பு அவரது பிறந்தநாளன்று வெளியாகியுள்ளது!

July 19, 2025

திரையிலும், நிஜ வாழ்க்கையிலும் முத்திரை பதித்துவரும் நடிகை பவ்யா த்ரிகா

July 19, 2025
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.