• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

முழுப்படப்பிடிப்பையும்  முடித்த  “குருதி ஆட்டம்”  படக்குழு ! 

by Tamil2daynews
March 2, 2020
in சினிமா செய்திகள்
0
முழுப்படப்பிடிப்பையும்  முடித்த  “குருதி ஆட்டம்”  படக்குழு ! 
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

தனித்தன்மை கொண்ட இயக்குநர்களின் இயக்கத்தில் வரும் அழுத்தமான கதைக்களம் கொண்ட படங்களுக்கு, ரசிகர்களிடம் எப்போதும் சிறப்பு வரவேற்பு இருந்து வருகிறது. “எட்டு தோட்டாக்கள்”  என ஒரே படம் மூலம், புகழ் பெற்ற இயக்குநராக மாறிவிட்ட இயக்குநர் ஶ்ரீகணேஷ் இயக்கத்தில் அதர்வா முரளி, ப்ரியா பவானி சங்கர் நடிப்பில்  உருவாகிவரும் “குருதி ஆட்டம்” திரைப்படம், தலைப்பு முதலாகவே அழுத்தமான பின்புலம் கொண்டதாக, ரசிக்ர்களிடம் அதீத கவன ஈர்ப்பை பெற்றுள்ளது. தற்போது இப்படத்தின் படக்குழு படப்பிடிப்பை முழுமையாக முடித்த மகிழ்ச்சியில் போஸ்ட் புரடக்‌ஷன் பணிகளுக்கு தயராகி வருகிறது படக்குழு.


இது குறித்து இயக்குநர் ஶ்ரீகணேஷ் கூறியதாவது…

மிகதிறமை வாய்ந்த நடிகர்களான அதர்வா முரளி, ப்ரியா பவானி சங்கர், ராதிகா சரத்குமார், ராதாரவி அவர்களுடன் பணியாற்றிய அனுபவம் பெரும் மகிழ்ச்சியையும், கற்றுக்கொள்ளும்   நல்ல அனுபவத்தையும் தந்தது. அதர்வா முரளி எப்போதும் இயக்குநர்களின் நடிகராகவே இருந்து வருகிறார். ஆனால் எப்படிப்பட்ட நடிகரானாலும் தொடர்ந்து வெற்றிபடங்களை தந்து வருபவர்கள் என்னைப் போல் புதுமுக இயக்குநர்களுக்கு திரைக்கதையில், இயக்கத்தில், தங்களது அறிவுரையை வழங்குவார்கள். ஆனால் அதர்வா முரளி ஒரு சிறு துளி கூட அப்படி நடக்கவில்லை. திரைக்கதையை கேட்டு ஒப்புக்கொண்ட பிறகு, அவர் தன்னை முழுதாக என்னிடம் ஒப்புவித்துவிட்டார். ப்ரியா பவானி சங்கர் தமிழ் பேசும் நடிகையாக பல உயரங்களுக்கு செல்லக்கூடிய திறமைசாலி. அவர் தந்து வரும் தொடர் வெற்றிபடங்கள் மட்டுமல்ல, வரவிருக்கும் அவரது படங்களும் மிகப்பிரமாண்டமான இடத்தை அவருக்கு தரக்கூடியது. ராதிகா மேடம், நடிகர் ராதாரவி அவர்களுடன் வேலை செய்ய முதலில் என்னுள் பெரும் தயக்கம் இருந்தது. ஆனால் அவர்களுடன் வேலை செய்தது ஆசிர்வதிக்கப்பட்ட அனுபவமாக இருந்தது. மிகப்பெரும் ஆளுமைகளாக இருந்தும் அனைவருடனும் அவர்கள்  வெகு எளிமையாக பழகினார்கள். பேபி திவ்யதர்ஷினி இத்திரைப்படம் மூலம் மிகப்பெரிய இடத்தை அடைவார். படத்தில் அவரது கதாப்பாத்திரம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. அவர் படப்பிடிப்பில் இருந்தபோது  படக்குழுவில் இருந்த அனைவரின் செல்லமாக மாறிவிட்டார். இத்திரைப்படத்தை நினைத்தபடியே உருவாக்க பெரும் ஆதராவாக இருந்த தயாரிப்பாளர் முருகாநந்தம் அவர்களுக்கு இந்நேரத்தில் பெரிய நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இப்படம் “எட்டு தோட்டாக்கள்” போன்று ஒரு புதிய அனுபவத்தை உங்களுக்கு தரும் என்றார்.

Rockford Entertainment சார்பாக முருகாநந்தம் இப்படத்தை தயாரிக்கிறார். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். டிரெயலர் மற்றும் இசை விரைவில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தினை வரும் கோடை கால விடுமுறையில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

Previous Post

*நேரம் தவறாத சிலம்பரசன் T R  ; விறுவிறுப்பாக படமாகும் மாநாடு பாடல் காட்சி* 

Next Post

இறுதி கட்ட பணிகளில் அருண் விஜய்யின் “சினம்” ! 

Next Post
இறுதி கட்ட பணிகளில் அருண் விஜய்யின் “சினம்” ! 

இறுதி கட்ட பணிகளில் அருண் விஜய்யின் “சினம்” ! 

Popular News

  • ஜீவாவின் ‘தகப்பன்’ திரைப்படம் வரும் டிசம்பர் 24-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஸ்ரீ கார்த்திக் இயக்கத்தில் உருவாகும் புதிய தமிழ் படத்தில் இணைந்தார் ருக்மிணி வசந்த்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜோஜு ஜார்ஜ் இயக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்’ திரைப்படம் வெளியான முதல் வாரத்திலேயே மனோரமாமேக்ஸ் ஓடிடி தளத்தில் 15 மில்லியன் நிமிடங்களுக்கும் அதிகமான பார்வை நேரத்தைப் பதிவு செய்தது!

    0 shares
    Share 0 Tweet 0
  • முகேன் ராவ் நடிக்கும் ‘மைலோ’ (Milo) படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்’ திரைப்படம் வெளியான முதல் வாரத்திலேயே மனோரமாமேக்ஸ் ஓடிடி தளத்தில் 15 மில்லியன் நிமிடங்களுக்கும் அதிகமான பார்வை நேரத்தைப் பதிவு செய்தது!

‘இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்’ திரைப்படம் வெளியான முதல் வாரத்திலேயே மனோரமாமேக்ஸ் ஓடிடி தளத்தில் 15 மில்லியன் நிமிடங்களுக்கும் அதிகமான பார்வை நேரத்தைப் பதிவு செய்தது!

October 25, 2026

“‘ஹைக்கூ’ திரைப்படத்தில் நான் நடித்த கதாபாத்திரம் என் மனதுக்கு நெருக்கமானது” – நடிகை ஸ்ரீதேவி!

October 25, 2026

ஜோஜு ஜார்ஜ் இயக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

October 25, 2026

யோகி பாபு நடிக்கும் ‘சிங்காரம்’ திரைப்பட இசை வெளியீட்டு விழா!

October 25, 2026

‘ரெபெல் ஸ்டார்’ பிரபாஸ் நடிக்கும் ‘ஃபௌஜி’ படத்தின் பிரத்யேகக் காணொளி வெளியீடு!

October 25, 2026

“‘ஹைக்கூ’ திரைப்படத்தில் எனது கதாபாத்திரம் பெண்களின் ஆழமான உணர்வுகளைப் பிரதிபலிக்கிறது”- நடிகை ஃபெமினா ஜார்ஜ்!

October 25, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.