நடிகர் ஆர்.கே.சுரேசுக்கு குவியும் பாராட்டுகள்..!
இயக்குனர் பாலா அவர்களின் தயாரிப்பில், இயக்குனர் பத்மகுமார் இயக்க நடிகர் ஆர் கே சுரேஷ் கதாநாயகனாகவும், பூர்ணா, மது ஷாலினி, இளவரசு, மாரிமுத்து, பகவதி பெருமாள் மற்றும் பலர் நடித்து GV பிரகாஷ் இசையமைத்த “விசித்திரன்” திரைப்படத்தை படக்குழு சிறப்பு காட்சியாக படம் வெளியிடுவதற்கு முன்பே திரைப்பட இயக்குனர்கள் சங்கத்திற்கு திரையிட்டது.
படத்தின் விறுவிறுப்பான திரைக்கதை, தொழிநுட்ப கலைஞர்களின் பங்களிப்பு, குறிப்பாக நடிகர் ஆர் கே சுரேஷின் “மாயன்” என்ற கதாபாத்திரத்தை, கதையின் நாயகனாக ஏற்று மிக சிறப்பாக நடித்ததை வியந்து இயக்குனர் சங்கம் வெகுவாக பாராட்டியது. ஒரு படம் திரைக்கு வருவதற்கு முன்பே இயக்குனர் சங்கத்திற்கு திரையிடப்பட்ட முதல் படம் விசித்திரன் ஆகும்.

திரைப்பட இயக்குனர் சங்க தலைவர் ஆர் கே செல்வமணி பேசுகையில், தன்னையே விதையாக்கி ஒரு மரமாக முழைக்க செய்வது தான் முதல் முயற்சி தான் இந்த சினிமா, அதில் தன்னை முழுமையாக ஒப்படைத்து இவ்வளவு சிறப்பாக அனைவரும் வியக்கும்படி நடித்த ஆர் கே சுரேஷ் ஒரு சிறந்த நடிகராக தன்னை பதிவு செய்து இருக்கிறார். இந்த படத்துக்கு மரணம் இல்லை, காலத்துக்கும் பெயர் சொல்லும் ஒரு படைப்பு, இந்த படத்தை பார்க்காதவர்கள் துரதிருஷ்டசாலி. ஆகவே அனைவரும் இந்த படத்தை பார்க்கவேண்டும். ஆர் கே சுரேஷ்க்கு என் தனிப்பட்ட பாராட்டுகள்.
இயக்குனர் சங்க செயலாளர் இயக்குனர் ஆர் வி உதயகும்மார் பேசுகையில் “விசித்திரன்” என்ற இந்த படத்தை பார்த்து இரண்டு நாளாக நான் தூங்கவில்லை. தலைவரிடம் சொன்னேன், இன்று நாம் அனைவரும் பார்த்துவிட்டோம், என்னைபோலவே உங்களுக்கம் பாதிப்பை உண்டாக்கியதில் மகிழ்ச்சி.


