• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

கம்போடியா அரசின் ‘சர்வதேச கவியரசு கண்ணதாசன் விருது’ பெற்றார் பாடலாசிரியர் அஸ்மின்!

by Tamil2daynews
December 2, 2019
in சினிமா செய்திகள்
0
கம்போடியா அரசின் ‘சர்வதேச கவியரசு கண்ணதாசன் விருது’ பெற்றார் பாடலாசிரியர் அஸ்மின்!
0
SHARES
27
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

கம்போடியாவில் நடைபெற்ற உலகத் தமிழ் கவிஞர்கள் மாநாட்டில்  கவிஞர்  பொத்துவில் அஸ்மினுக்கு   ‘சர்வதேச கவியரசு கண்ணதாசன் விருது’ வழங்கப்பட்டது.

2012-ல் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான ‘நான்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக அறிமுகம் ஆனவர் இலங்கையை சேர்ந்த பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மின். ‘நான்’ படத்தில் ஒரு பாடலாசிரியரை அறிமுகப்படுத்தும் நோக்கோடு விஜய் ஆண்டனி அறிவித்த சர்வதேச ரீதியான  பாடலை இயற்றும் போட்டியில்  கலந்துகொண்ட 20,000 போட்டியாளர்களில் முதலிடம் பெற்றவர் தான் இந்த அஸ்மின்.. அதுமட்டுமல்ல ஜிப்ரான் இசையில் வெளியான அமரகாவியம் படத்தில் இவர் எழுதிய ‘தாகம் தீர’ என்கிற பாடல் தயாரிப்பாளர் ஆர்யாவையோ இசையமைப்பாளர் ஜிப்ரானையோ நேரில் சந்திக்காமல்  எழுதிய பாடலாகும். அந்த பாடலுக்காக சிறந்த வெளிநாட்டு பாடலாசிரியருக்கான எடிசன் விருதையும் இவர் பெற்றுள்ளார்..

கவிக்கோ அப்துல் ரஹ்மான் தலைமையில் மலேசியாவில் நடைபெற்ற பன்னாட்டு கவியரங்கில் இவர் பாடிய மரபுக்கவிதையை பாராட்டிய கவிஞர் வைரமுத்து இவரது மரபு அறிவுக்கு சிறந்த எடுத்துக்காட்டு என்று குறிப்பிட்டுள்ளார். ஆரம்பத்தில் பத்திரிகை துறையில் பணியாற்றிய இவர் அதன்பிறகு இலங்கையிலுள்ள வசந்தம் தொலைக்காட்சியில் இணைந்து சுமார் 10 ஆண்டுகாலம் பணியாற்றி வருகின்றார். அங்கே இவர் இயக்கிய தூவானம் என்கிற கலை இலக்கிய சஞ்சிகை நிகழ்ச்சி மூன்று முறை இலங்கை அரசின் தேசிய விருதை பெற்றுள்ளது.

மறைந்த முதல்வர் அம்மா ஜெயலலிதா இறந்தபோது ‘வானே இடிந்ததம்மா’ என்கிற இரங்கல் பாடலையும் இவர் எழுதியுள்ளார்.

சமீபத்தில் கம்போடியாவில் நடைபெற்ற உலகத்தமிழ் கவிஞர்கள் மாநாட்டில் அங்கோர் தமிழ் சங்கம், பன்னாட்டு தமிழர் நடுவம் மற்றும் கம்போடிய கலை பண்பாட்டுத் துறை அமைச்சகம் இணைந்து தமிழ் திரைப்பட பாடலாசிரியரும் கவிஞருமான பொத்துவில் அஸ்மினுக்கு  “சர்வதேச கவியரசு கண்ணதாசன் விருதினை” வழங்கியுள்ளது.

தொடர்ந்து தமிழ் சினிமாவில் பாடல் எழுதி வரும் இவர் இலங்கையை சேர்ந்தவர் என்றாலும் தமிழகத்திலுள்ள அத்தனை வட்டார வழக்கிலும் தன்னால் பாடல் எழுத முடியும் என்கிறார் நம்பிக்கையுடன்.

“இலங்கையில் இருக்கின்ற படைப்பாளிகளுக்கு முன்னோடிகளாக இருந்தவர்கள் தமிழகத்தில் இருக்கின்றவர்கள்தான் அதனால் தான் இலங்கையில் இருந்து கொண்டு இந்திய தமிழர்களின் ரசனையை உள்வாங்கி என்னால் பாடல் எழுத முடிகிறது” என்கிறார் அஸ்மின்.

Tags: Ashmin
Previous Post

கள்ளக் காதல் விவகாரம்! – பிரபல சீரியல் நடிகைக்கு அடி உதை

Next Post

என் கேரக்டர்களை நான் காதலிப்பேன் தண்டுபாளையம் பட விழாவில் நடிகை சுமன் ரங்கநாத் பேச்சு

Next Post
என் கேரக்டர்களை நான் காதலிப்பேன் தண்டுபாளையம் பட விழாவில் நடிகை சுமன் ரங்கநாத் பேச்சு

என் கேரக்டர்களை நான் காதலிப்பேன் தண்டுபாளையம் பட விழாவில் நடிகை சுமன் ரங்கநாத் பேச்சு

Popular News

  • உலகளாவிய டிரெய்லர் வெளியீட்டிற்கு முன்னதாக, புது டெல்லியில் நடைபெற்ற பிரத்யேக நிகழ்வில் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் முதல் அறிமுகம்

    0 shares
    Share 0 Tweet 0
  • இசைஞானி இளையராஜா இசையில் உருவாகும் ‘தட்டுவண்டி’

    0 shares
    Share 0 Tweet 0
  • பிறந்தநாளில் 5 ஆண்டுகால கனவுத் திட்டத்தை அறிமுகப்படுத்திய நடிகை சாக்ஷி அகர்வால்!

    0 shares
    Share 0 Tweet 0
  • Actress Shirin Kanchwala Photos

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தின் முதல் பாடலான ‘நீ செல்’ (Nee Sel) பாடலை வெளியிட்ட டி-சீரிஸ்! (T Series)

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

நயன்தாரா- கவின் இணைந்து நடித்திருக்கும் ‘ஹாய்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

July 20, 2026

ஜீவா லார்க் ஸ்டூடியோஸ் கூட்டணியில் – ‘தகப்பன்’ பூஜையுடன் இனிதே தொடக்கம்!

July 20, 2026

பிறந்தநாளில் 5 ஆண்டுகால கனவுத் திட்டத்தை அறிமுகப்படுத்திய நடிகை சாக்ஷி அகர்வால்!

July 20, 2026

இசைஞானி இளையராஜா இசையில் உருவாகும் ‘தட்டுவண்டி’

July 20, 2026

உலகளாவிய டிரெய்லர் வெளியீட்டிற்கு முன்னதாக, புது டெல்லியில் நடைபெற்ற பிரத்யேக நிகழ்வில் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் முதல் அறிமுகம்

July 20, 2026

“இதயம் முரளி” திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !!*

July 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.